Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகிரங்கக் கடிதம்
#1
பிபிசியின் கொழும்பு செய்தியாளர் திருவாட்டி அன்னா கோஸ்பேக் போட்டர்க்கு பகிரங்கக் கடிதம்

அன்புள்ள அன்னா அம்மையாருக்கு,

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இனவாதத்திற்கு எதிராக உண்மைச் செய்திகளை துணிவுடன் வெளியிட்டு நியாய பரப்புரைப் போரை நடத்திய செய்தி நிறுவனத்தின் நிருபர் என்ற வகையில் தங்களுக்குத் தலைவணங்குகின்றோம்.

16.04.2004 அன்று தங்களின் செய்தியொன்று பிபிசியின் இணையதளத்தின் பக்கத்தில் தவழ்ந்து வந்திருந்தது. அதில் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் சுயாட்சிக்காக 30 ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள் என்ற வரலாற்று உண்மையை மேலைத்தேய ஊடகவியலாளர் வழமையாக மேற்கொள்வது போன்று காலக்குறைப்புச் செய்யாமல் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு ஈழத் தமிழினம் என்றும் உங்களுக்கு நன்றியறிதலாக இருக்க வேண்டும்.

ஆனால் தங்களுக்கு அந்த நன்றியறிதலாக தமிழர் இருக்கமுடியாத அளவிற்கு மேற்படி திகதிய ஆக்கத்தில் அளவிறந்த விடயத்தினை எம்மினத்தின் மீது வாரியிறைத்துள்ளீர்கள். தமிழ்ப் புலிகள் நச்சுப்பூவை அரவணைத்துள்ளார்கள் என்ற தலைப்பில், தமிழர் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ள கார்த்திகைப் பூவிற்கும் அதனைப் பிரகடனப்படுத்தியவர்களுக்கும் மாசு கற்பிக்க முற்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்த போது வேதனையாக உள்ளது. செய்தியாளர் என்ற நியாயத்தோடும் தார்மீகத்தோடும் செயற்பட்ட பிரான்சிஸ் ஹரிசன் அம்மையார் இருந்த எம் இதயபீடத்தில் உங்களை வைப்பதற்கு மனமில்லாது இருக்கின்றது. நீங்கள் அவருக்கு முன்னம் இருந்தவரான புளோரா பொட்ஸ்வேட் அம்மையாரின் வழியில் நடக்க முற்பட்டுள்ளீர்கள்.

இந்நிலைமையானது தாங்கள் சார்ந்துள்ளதும் உலகின் ஏகோபித்த மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுமான பிபிசியின் நியாயத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றது. தமிழ்த் தேசியத்திற்கு மாசு கற்பிக்க முற்பட்டு செய்தியாளர் வர்க்கத்திற்கும் பிபிசி நிறுவனத்திற்கு மாசு கற்பித்துவிட்டீர்கள். லோட் கூட்டன் பிரபு வாக்கியமான 'பிபிசியின் செய்திகள் நியாயத் தன்மையோடு இருக்க வேண்டும். அத்தோடு பிபிசிச் செய்தியாளர் நடுநிலையானவர்களாக இருக்க வேண்டும்" என்பதை தாங்கள் மீறிவிட்டீர்கள் என்பதை மிக்க மனவருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.

குளோறியஸ்சா லில்லி எனப்படுகின்ற கார்த்திகைப் பூ தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டவற்றில் சிலவற்றில் மலிந்து காணப்படும் தரவுப் பிழைகளை சற்றே பார்ப்போம்.

கார்த்திகைப் பூ தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியில் மாத்திரமே வளர்வதாக குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களில் பிழையில்லை ஏனெனில் நீங்கள் இப்பிரதேசத்திற்கு புதியவர் கொட்டும்பனி தேசத்திலிருந்து வந்தவர். ஆனால் தீர விசாரித்து விட்டு இவ்விடயத்தை பிபிசிக்கு கொடுத்திருக்க வேண்டாமோ. 'கார்த்திகைப் பூ ஒரு உலர்வலயத் தாவரம் அது ஆபிரிக்கா, ஆசியா முதலான கண்டங்களில் பல பாகங்களிலும் காணப்படுகின்றது" எனக் கலாநிதி சோமாஸ்கந்தன் என்பவர் தமிழர் மிரர் (Tamil Mirror) எனப்படும் தென்னாபிரிக்காவிலிருந்து வெளிவருகின்ற மாசிகையின் ஏப்பிரல் பதிப்பிற்கு யாத்துள்ள வியாசம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரமின்றி Encarta Encyclopedia - 2003 குறுந்தட்டுப் பதிப்பிலும் இவ்விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அம்மணி அவர்களே.

இன்னொரு விடயம் தமிழீழ தேசியக்கொடியில் நான்கு நிறங்கள் உள்ளன என்பதை நினைவிற்கொள்க. அவையாவன: சிவப்பு, மஞ்சள், கறுப்பு, வெள்ளை என்பனவே அவையாகும். அதை விடுத்து சிவப்பு மஞ்சள் என்று இரண்டாக நிறங்களைச் சுருக்கினாலும் சரியாகச் சொன்னதிற்கு நன்றிகள்.

கார்த்திகைப் பூவின் இதழ், கொடி, கிழங்கு என்பன என்பன நஞ்சு என்று கூறுகின்றீர்கள். ஆனால் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இதன் கிழங்கில் கொல்சிசைன் என்ற நச்சுப் பொருள் காணப்படுவதாகவும், இது யுனானி, ஆயுர்வேத, ஆங்கில வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இதழ், கொடி நஞ்சு என்ற உங்கள் எழுத்து நஞ்சூட்டல் குறித்து நான் பல நு}ல்களில் தேடியும் காணவில்லை அம்மையாரே.

தமிழ்த் தேசியத்தின் வரலாற்றிற்கும் கார்த்திகைப் பூவிற்கும் உள்ள தொடர்பினை பிபிசி நிறுவனத்தால் துணிவுடன் இக்கட்டான காலத்தில் வெளிவருகின்ற பத்திரிகை என பாராட்டப்பட்ட கடந்த மாதம் வந்த உதயனில் நாளிதழின் ஞாயிற்றுப் பதிப்பான சூரியகாந்தியில் வீரநாதன் என்பார் யாத்துள்ள கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

இது எதனையும் கருத்தில் கொள்ளாது அல்லது கருத்தில் கொள்ள விருப்பின்றி மேம்போக்காக ஒரு தேசியத்தின் அடையாளத்தை விமர்சித்துள்ளீர்கள். காத்திகைக் கிழங்கின் குணத்தை தற்கொலையோடு ஒப்பீட்டுள்ளீர்கள். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்கிற உயிரிய இலட்சியத்தோடு சயனைட் வில்லகைகளைத் தாங்கி நிற்கின்ற விடுதலைப் புலிப் போராளிகளையும் கொச்சைப்படுத்த முற்பட்டுள்ளீர்கள்.

தேசங்கள் திரிந்து கொள்ளையடித்த கொள்ளைக்காரரான புகானியர் கென்றி மோர்கனுக்கு உங்கள் தேசத்தின் நலனைப் பேணியதால் சேர் பட்டம் கொடுத்து கௌரவித்தீர்கள். இன்று மட்டும் வேறோர் தேசத்திற்கும் மனதாலும் தீங்கு நினைக்காத எமது இனத்தின் காவலர்களுக்கு மாசு கற்பிக்க முற்படுகின்றீர்கள்.

இலங்கைத்தீவை உங்கள் நாட்டார் ஆண்ட போது நீங்கள் எம்மினத்திற்கு செய்த வரலாற்றுத் துரோகங்களை எத்தனை எத்தனை. அதை மறந்து நாம் உங்களுக்கு செய்த சேவைகள் எத்தனை. எதைச் சொல்வது ஒன்றை மட்டும் குறிப்பிட்டு முடிக்கின்றோம். அன்று முதலாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் உங்களின் நலனுக்கு மலேசியாவில் சேவைபுரிய வந்த ஈழத் தமிழர்கள் இணைந்து நீங்கள் வெல்லவேண்டும் என்பதற்காக நிதி திரட்டி விமானம் வாங்கித் தந்தார்கள். இன்றும் கூட அந்த விமானத்தை கண்காட்சியில் வைத்து மகிழும் நீங்கள் ஆனால் அதைத் வாங்கித் தந்தவர்களை மறந்து போனது வினோதம்தான்.

இனியாவது பத்திரிகையாளர் என்ற தார்மீகத்தோடு நடப்பீhகள் என்ற நம்பிக்கையோடு இத்திறந்த மடலை முடித்துக்கொள்ளும்.

பிபிசியின் நீண்ட கால நேயரான,
தனேந்திரன்.
TamilNaatham
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
B.B.C செய்திகளின் உண்மைத் தன்மை பற்றிய கட்டுரையுடன் எனது கருத்துகளையும் முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்

யாழ்கள நண்பர் B.B.C அவர்கள் ஊடகங்கள் பற்றிய கருத்தொன்றிற்கு தமிழ் ஊடகங்கள் ஜால்ரா பாடுகின்றன என்றும் B.B.C போன்ற ஊடகங்கள் நடுநிலை ஊடகங்கள் அவர்கள் தருவதை நம்பலாம் என்ற சாரப்பட கருத்துத் தெரிவித்திருந்தார்

அதே போன்று கருணா பிரச்சனை தலைதூக்கிய நேரம் B.B.C வெளியிட்ட செய்திகளை மேற்கோள் காட்டி கருத்துகள் வெளியிட்டார் இதனை நான் குற்றஞ்சாட்டுவதற்காகக் கூரவில்லை அஐயினும் இவ்வாறான ஊடகங்கள் பற்றிய பார்வை தெளிவுபடுத்தப்படவேண்டும் அதனால் கெட்கிறேன்

B.B.C நிறுவனத்தின் மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் அவர்கள் தவறான செய்திகள் வழங்கிய கரணத்தாலும் சக ஊடகவியலாளரை மிரட்டிய காரணத்தாலும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவரது பதவிநீக்கமானது அவர் கொடுத்த செய்திகள் தவறானவை என்பதை உறுதிப்படுத்துகின்றது

இவ்வேளையில் கருணா அல்லது புலிகள் இயக்கத்தின் பிளவு பற்றி B.B.C விழுந்தடித்துக் கொண்டு வெளியிட்ட செய்திகள் திரும்பவும் மீளாய்வு செய்யப்படவேண்டியவையாகின்றன இல்லையா நண்பரே(B.B.Cயாழ்)
\" \"
Reply
#3
<b>புலிகளின் ஆயுதங்களில் 42 வீதமானவை இராணுவ களஞ்சியங்களில் இருந்தவையே தெற்காசிய நட்புறவு சர்வதேச நிலைய நிறைவேற்று
பணிப்பாளர் அற்புதராசா </b>
(எஸ்.என்.ஆர்.பிள்ளை)

தமிழீழ விடுதலைப்புலிகளிடமுள்ள ஆயுதங்களில் 42 வீதமானவை இராணுவ களஞ்சியங்களில் இருந்த ஆயுதங்களே. இந்த ஆயுதங்கள் புலிகளிடம் எவ்வாறு சென்றது என்பது குறித்து இராணுவ விசாரணையும் நடத்தப்படவில்லை புலிகள் இயக்கத்திற்கு இராணுவ களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்கள் செல்லவில்லை என முன்பு கூறி இருக்க முடியும் ஆனால் அந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது.

கருணாபுலிகள் இயக்க மோதலை அடுத்து புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் தாராளமாக சந்தைக்கு வந்துள்ளன. கொழும்பு வீதிகளில் சிறிய பெரிய ஆயுதங்கள் தாராளமாகக்கிடைக்கின்றன என தெற்காசிய நட்புறவு சர்வதேச நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜேம்ஸ் அற்புதராசா தெரிவித்தார்.

கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற ""சிறிய ஆயுதங்களும் அதன் பாவனையும்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். அற்புதராசா அங்கு தொடர்ந்து உரையாற்று கையில் அரசியல்வாதிகளை பாதுகாக்க ஆயுதங்கள் வழங்கப்பட்டால் பொது மக்களை பாதுகாப்பது யார்?

அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கென அவர்களது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களும் குற்றச் செயல்களுக்காக வாடகைக்கு விடப்படுகின்றன.

மாற்று அரசியல்வாதிகளுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்த பொது மக்களை ஆயுத மயப்படுத்துவது சமூகத்தில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தும். இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பும் அதே வேளை அந்த நாடுகள் தமது நாட்டில் ஆயுத உற்பத்தியைபெரிதும் ஊக்குவித்து வருகின்றன. வர்த்தகத்திற்கும் தொழில் வாய்ப்பிற்கும் அரசாங்கங்கள் ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு சட்ட ரீதியாக வரும் ஆயுதங்கள் அங்கிருந்து சட்ட ரீதியற்ற முறையில் ஏனைய நாடுகளுக்கு செல்கின்றன.

ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவோர் அரசாங்கங்களுக்கும் அதே வேளை சம்பந்தப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி நடத்தும் குழுக்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே வகையான ஆயுதங்களை விற்பனை செய்கின்றனர். ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகள் தமது வர்த்தகத்திற்காக ஏனைய நாடுகளில் பிணக்குகளையும் உருவாக்கி வருகின்றன.

நேபாள நாட்டில் தேர்தல் வன்செயல்களை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக சட்டரீதியாக ஆயுதங்களை வைத்திருப்போர் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன் தமது ஆயுதங்ளை ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையை கடுமையாக நடைமுறைப்படுத்துகின்றது.

இலங்கையில் தற்போது ஆயுதங்கள் இரவு விடுதிகள் மதுபான சாலைகள் களியாட்ட கிளப்புகளிலும் காணப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலின் போது இலங்கையில் வன் செயல்கள் நடைபெறவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.

இலங்கையில் சுமார் 15 ஆயிரம் சிறிய ஆயுதங்கள் பாவனையில் உள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் எத்தனையாயிரம் சிறிய ஆயுதங்கள் பாவனையில் உள்ளது என்ற சரியான கணக்கு யாருக்கும் தெரியாது. இலங்கையில் பாவனையில் உள்ள சிறிய ஆயுதங்களில் 50 வீதமானவை அரசியல் வாதிகளிடமும் அவர்களது ஆதரவாளர்களிடமே உள்ளது என்றார்.

வீரகேசரி
Reply
#4
<b>அதியுயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்
குறித்து புலிகள் படையினர் கலந்துரையாடல் </b>
(யாழ்.அலுவலக நிருபர்)

யாழ்.மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேற்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருடன் கலந்துரையாடியுள்ளனர்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள் மற்றும் இயல்பு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலின் போது படைத்தரப்பில் லெப்டினன் கேணல் சுசில் சந்திரபாலவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பில் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி, நல்லூர் கோட்டப்பொறுப்பாளர் திருமறவன் மற்றும் சுதா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக இடம்பெற்ற இச்சந்திப்பு மிகவும் சுமுகமான முறையிலும் இணக்கப்பாடாக இடம் பெற்றதாகத் தெரியவருகின்றது.

இருந்த போதிலும் கூட இவ்விரு சாராருக்குமிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடமும் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் விவரங்கள் பெறமுடியாதநிலை காணப்பட்டது
Reply
#5
சத்யனுக்கு சங்கரியின் பதில்!

சத்யன் 'ஞாயிறு தினக்குரல்" இல் எனக்கு எழுதிய கடிýதத்திற்கு பதில் எழுதவேண்டிýய கடமை எனக்கு உண்டு என்பதனால் இதனைத் தருகின்றேன்.

தமிழர் விடுதலைக் கூýட்டணி ஒரு பாரம்பரிய, பழைமையானதும், ஜனநாயக மரபிற்குட்பட்ட கட்சி என்பதும் யாவரும் அறிந்ததே. அந்தக் கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் எனக்கும் பல பொறுப்புக்கள் உண்டு. கட்சித் தலைமைப் பதவியில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக பதவியிறக்க முயற்சி செய்ததில் இருந்து, தேசியப்பட்டிýயலில் ஹெல உறுமய எனக்கு வழங்க முன்வந்த பா.உ. பதவியையும், நிராகரித்த விடயம் வரை நான் பொறுப்புணர்வுடனும், தலைமைத்துவப் பண்புடனும், சுயநலன்களுக்கப்பால் இருந்து செயற்படக் கடமைப்பட்டுள்ளேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளேன். கண்ணியமான எமது கட்சித் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் நான் இருந்து கொண்டு அவர்களை மறந்து எனது பணிகளைத் தொடர்வது சத்திய வாழ்வாகுமா?.

எனது 50 வருட அரசியல் வாழ்விலும், நான் வந்த பாதையை, பொது வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிýக்க வேண்டும் என்பதில் எனது உறுதி தளராது. எனது அரசியல் வாழ்வு ஒரு திறந்த புத்தகம், அதைவிட வேறு ஏதும் சிறப்பான சான்று எனக்கில்லை.

தலைமைப் பதவி என்பது கட்சியானாலும் சரி, ஒரு நிறுவனமானாலும் சரி மிகவும் பொறுப்பு வாய்ந்தது என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். தமிழர் விடுதலைக் கூýட்டணிக் கட்சியின் தலைவராகிய எனக்கு ஒரு அடையாளம் உண்டு. அது இருக்க வேண்டும் என நம்புபவன் நான். நான் கூýறுவதும் எழுதுவதும் எல்லாம் எனது பெயரிலேயே வெளிவரும். ஆனந்தசங்கரி இன்று ஒன்றும், நேற்று ஒன்றும் கூýறுபவராக நான் அடையாளம் காணப்படுவதை விரும்புபவனும் அல்லன்.

அந்தவகையில் சில நிகழ்கால உதாரணங்களைப் பாருங்கள். கருணா பிரச்சினை, தேர்தல் காலத்தில் எழுந்தபோது அது விடுதலைப்புலிகளின் உள்விவகாரம், அதில் தலையிட எனக்கு உரிமையில்லை என்றே இதுபற்றி அப்போது என்னிடம் வினா எழுப்பிய பத்திரிகைகளுக்கு நான் கூýறியிருந்தேன். எனினும், வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசம் என்பதை வலியுறுத்தியும் இருந்தேன். கருணா விவகாரத்தை சில நாட்களில் அவர்களுடைய இரானுவ பாணியில் முடிýத்துவைத்து நிலைமைகளைக் கட்டுப்பாட்டிýற்குள் கொண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள். எமது கட்சியிலும் அவ்வாறு சில பிரச்சினைகள் எழுந்தன. தலைமைப் பதவியில் ஆசை கொண்டவர்கள் உட்கட்சிப் பிரச்சினையை ஏற்படுத்தியதை தமிழ் உலகம் நன்கு அறியும். எமது கட்சிக்குரிய வழியில் நான் எனது தலைமைப் பதவியை தக்கவைத்துக்கொள்ள ஜனநாயக வரையறைக்குள் போராடவேண்டிý இருந்தது. அதில் என்ன தவறு?

என்னைப் பற்றி விடுதலைப்புலிகளிடம் விர்மத்தனமாக மூýட்டிýவைத்தவர்கள் சுயநலத்தில் நடந்து கொண்டதையும், அவர்கள் இங்கொன்றும், அங்கொன்றும் கதைப்பதை விடுதலைப்புலிகள் இயக்கம் விபரமாக அறியமுற்படாதது துரதிர்ர்;டமானது என்றே நான் கருதுகிறேன். இவர்களெல்லாம் பொறுப்புள்ள பதவியில் இருந்து கதைக்கும்போது, என்னைப் போலவே இந்திய அரசின் நட்பை, இந்தியாவின் ஆதரவை நாடிý நிற்கின்றனர்.

வலுக்கட்டாயமாக, நியாயமற்ற முறையில் ஒருவரை அவர் இருக்கும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தால் நீங்களோ, அல்லது எந்த ஒரு சுயமரியாதை உள்ள ஒருவரோ ஏற்றுக்கொள்வாரா? எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பகையை வேண்டும் என்றே வளர்த்த சிலர் விடுதலைப் புலிகளின் உதவியை நாடிý எமது உட்கட்சியில் உருவான பிரச்சினையை பெரிது படுத்தியதும் நீங்கள் அறியாமல் இருந்திருக்க முடிýயாது. எமது கட்சியில் பிரச்சினை வந்தபோது, அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று நாம் விட்டுவைக்கப்படவில்லை. கடைசியில் வேறு வழியின்றி நீதி கேட்டு நீதிமன்றிற்குப்போக நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். கோட்டுக்குப் போய்த்தான் சத்தியத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், என்னுடன் இருந்தவர்களெல்லாம் சத்தியவான்களாக இல்லையென்பதுதானே உண்மை.

தேசியப்பட்டிýயல் மூýலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்னைத் தேடிý வருவது இது முதற்தடவையல்ல. இரண்டாவது தடவையுமல்ல. முதலில் அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட போதும் இடம் வந்தது., 'இதுவரை பாராளுமன்றம் செல்லாத ஒரு இளைஞரை அனுப்புவதே சிறப்பு" என்று தனக்கே பொருத்தமானதாக ஜாடையாகச் சொல்லி கேட்டுப் பெற்றுக் கொண்டார் மாவை சேனாதிராஜா. அதை மனமுவந்து விட்டுக் கொடுத்ததும் நானே. பின்னர் நீலனின் மறைவிற்குப் பின்னர் கூýட காலவதியான இடம் வந்தபோது தன்னையே மீண்டும் அவ்வெற்றிடத்திற்கு நியமிக்க வேண்டும் என சேனாதிராஜா கேட்டுக்கொண்டார். அப்போதும் நான் போட்டிý போடாமல் விட்டுக்கொடுத்தேன். அவர் பதவியைப் பெற்றுக் கொண்டார். இதனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வ10தியத்தினை பெறுவதற்கு என்னால் உதவக் கூýடிýயதாகவிருந்தது.

1970 இல் மூýன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டும் வென்றோம். அருளம்பலம், தியாகராசாவுடன் நானும் வெல்ல, ஜீ.ஜீ. உட்பட அனைவரும் தோல்வி கண்டனர். அருளம்பலம், தியாகராசா அரசுடன் சேர்ந்து கொண்டனர். நான் மட்டுமே அன்று தனித்து இருந்த அந்நாள் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். விரும்பியிருந்தால் அன்றே நான் அரசுடன் சேர்ந்திருக்க முடிýயும். அமைச்சராகவும் போயிருக்க முடிýயும். ஆனால், நான் அரசில் சேரவும் இல்லை. அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவும் இல்லை. தேசியப்பட்டிýயல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மூýலம் நன்றி மறந்து எமது கட்சிக்காரர் சிலர் போல் கோடிýக் கணக்கில் உழைத்திருக்கவும் முடிýயும். அப்படிý ஒரு பணக்கார வாய்ப்புக்கு சிலரைப் போல் அடிýபடுவதை விட எனது இலட்சியத்துக்காக மோதித் தோற்றாலும் அதை என் உயிரைவிட உயர்வாய் கருதுகிறேன்.

யாழ்ப்பாண தேர்தல் பிரசாரம் எப்படிý நடந்தது என்பதை சத்தியத்தின் பெயர் கொண்டு எழுதும் நீங்கள் உண்மைகளை உண்மையாகவும் எழுத வேணடும். யாழ். பிரசாரத்தில் நாம் பிரசாரம் செய்ய முடிýயவில்லை. கூýட்டங்கள் நடத்த முடிýயவில்லை. சில காடையர்கள் எமது பிரசுரங்களை எரித்த சம்பவமும், எமது வேட்பாளர்கள் வீட்டிýற்கு மலர்வளையங்கள் வைத்து மிரட்டிýச் சென்ற சம்பவங்களும் நடந்தேறின. பிரசார வாகனங்கள் மறித்து தாக்கப்பட்டதும் உண்டு. கூýட்டமைப்பின் பெண் வேட்பாளரின் பிரசார அணியினரால் எமது வேட்பாளர் தாக்கப்பட்டதும் அதற்கான பொலிஸ் முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் உண்டு. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? என்பது இதைத்தானா?

கள்ள வாக்குப் போடுவது எப்போதும் நடப்பது தானே என்று நியாயம் கற்பிக்கிறீர்கள். பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும், இறந்தவர்கள் எழுந்து வந்ததும், வெளிநாட்டிýல் அகதியாய் இருப்பவர் திடPரென வாக்களிக்க வந்ததும், மனைவியும் மூýன்று பிள்ளைகளுமான குடும்பத் தலைவனாக பதினேழு வயதுச் சிறுவன் வந்ததும் இத்தேர்தலில் தான் என்றால் அதனையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மிரட்டல்கள், மோசடிýகள், ஆட்கடத்தல்கள் போன்றவை இடம்பெற்றதை நீங்கள் பத்திரிகைகளில் படிýத்து அறிந்திருக்க முடிýயாது. வாக்கு அட்டைகளை வீடுகளுக்குச் சென்று வாங்கிச் சென்றதும், சிலரை வாக்களிக்கக் கூýடாது என எச்சரித்ததும் நிறையவே நடந்தன. உண்மைகளை நாம் ஒவ்வொருவரும் உணர மறுக்கும் போது நியாயம் மிகத் தொலைவில் தான் நிற்கும்.

உங்கள் பத்திரிகை கடிýதத்தில் இன்று அவர்களை <b>'ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டு தேர்தலில் வென்றிருப்பவர்களில் சகலருமே உத்தம புத்திரர்களில்லை"</b> என நீங்கள் எழுதிய வரிகள் மூýலம் உண்மைகள் எங்கிருந்தாலும் அவை வந்து சேரும் என்ற நம்பிக்கை ஒளி விடுவது எனக்கு கண்டிýப்பாக உற்சாகம் தருகிறது.

மேலும், என்னை வெளியே சென்று கூýட்டம் வைக்க தடங்கல் பண்ணி நீங்களே ஒப்புக்கொண்ட 'உத்தமமற்ற" தமிழ் கூýட்டமைப்பு வேட்பாளர்களின் விர்மத்தனமான பொய்ப் பிரசாரத்திற்கு அனுமதித்தது நியாயமா சத்யன்? ஒருவரைக் கட்டிýவைத்துவிட்டு, ஏனையவர்களை ஓடச்செய்து வெற்றிபெற வைப்பது நியாயமான பந்தயம்தானா? சொல்லுங்கள். தம்பி பிரபாகரன் 80 களில் கூýறிய ஒரு பதிலில் 'தடிý எடுத்தவன் எல்லாம் சண்டிýயன் இல்லை" என்று தெரிவித்ததைத்தான் நான் இங்கும் ஞாபகப்படுத்த முடிýயும். ஏனென்றால் நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களெல்லாம் சேவை மனப்பான்மை கொண்டவர்களோ, அன்றி இலட்சியவான்களோ அல்லர்.

சுரேர்; பிரேமச்சந்திரன் சில வருடங்களுக்கு முன்னர் நடந்து கொண்டது போல் அல்லது விடுதலைப்புலிகளை பாஸிசப் புலிகள் என விமர்சித்ததும், அவர்களைத் தேடிýத் தேடிý அழித்த அளவிற்கு நான் எமது மக்களின் நலனிற்கோ, அன்றி, விடுதலைப்புலிகளுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை. சுரேர்; பிரேமச்சந்திரன் மீன்பிடிý அமைச்சில் தனக்கு வேலை ஒன்றை கேட்டுப் பெற்றுக் கொண்டதைப் போல் வரலாறு எனக்கில்லை., சேனாதிராஜாவைப் போல் தேசியப்பட்டிýயலுக்கு எனது பெயரைப் போட போராட்டம் நடத்தியதுமில்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தியே பழக்கப்பட்டவர் அவர். சத்தியமாகச் சொல்லுங்கள் சத்யன், அமரர் அமிர்தலிங்கத்தை மறந்த சேனாதிராஜாவிற்கு, விடுதலைப்புலிகளை மறக்க நீண்ட காலமா எடுக்கும்?.

எனவே யாழ். மாவட்டத்தில் எனக்கும், ஜனநாயகத்திற்கும் நடந்ததை ஹெல உறுமய உணர்ந்து எனக்கு தேசியப் பட்டிýயலில் இடம் தரினும் அதை ஏற்கக்கூýடிýய கொள்கையில்லா அரசியல் எனக்கு வேண்டாத ஒன்று. கொள்கையில் எனக்கும் ஹெல உறுமயவிற்கும் மிக நீண்ட தூரம். எதிர் எதிர் திசைகள். எனது முன்னாள் சகாக்கள் போல் பாராளுமன்ற பதவிக்கும், வசதிக்கும் அரசியல் நடத்துபவன் அல்ல நான். இதுவே உண்மையாக இருக்கும் போது ஹெல உறுமயவிடம் நான் ஏதோ பதவி கேட்டுச் செல்வது போலவும், என்னை ஒரு பௌத்த பிக்குவாகவும், அட்சய பாத்திரத்துடன் அவர்கள் பின்னே செல்வதாகவும் ஒரு கேலிச் சித்திரம் வரைந்து சித்திரித்ததையும் மறப்பதற்கில்லை. விடுதலைப்புலிகள் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியே விமர்சனம் செய்யும்படிý, கோரட்டும். நடிýத்தவர்கள் யார்? நடிýப்பவர்கள் யார்? என்பதை அவர்களே உணருவர். அக்காலம் மிகத் தொலைவில் இல்லை என்பதே என் கணிப்பு. சில உண்மைகளை நேரடிýயாகவே சொல்லி விடுகின்றேன் என்ற உண்மையைத் தவிர, விடுதலைப்புலிகளிடம் மூýடிý மறைக்க எதுவும் என்னிடத்தில் இல்லை. மேலும், ஏகபிரதிநிதிகள் என்ற சொல்லின் அர்த்தத்தில்தான் எனது வேறுபாடேயன்றி மிகுதி யாவும் மிகைப்படுத்தலே. விடுதலைப்புலிகள் தான் அரசுடன் பேச வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து என்றும் இருந்ததில்லை. பலரும் பிரதிநிதித்துவப்படுத்தும் போது ஏகபிரதிநிதியென்பது பொருத்தமற்ற சொற்பிரயோகம் என்பதே எனது விவாதமாக இருந்தது.

பதவிக்காக எதையும் சொல்வார் சுரேர்; பிரேமச்சந்திரன் போன்றோர். இந்திய அமைதிப்படைக் காலத்தில் ஒரு கதை. அம்மையாரிடம் மீன்பிடிý அமைச்சில் வேலை பெறுவதற்கு ஒரு விளக்கம். இன்று பதவிக்காக ஒரு புது விளக்கம். இவர்கள் போன்றோர் பதவிக்காக யாரையும் போற்றக் கூýடும். நாளை அவர்களையே தூற்றவும் செய்வர். <b>விடுதலைப் புலிகளையே தூற்றித் திரிந்து, துரத்திப் பிடிýத்து வேட்டையாடிýயவர்கள் இன்று போற்றிப் பேசுவதால் அவர்கள் தியாகிகளாகி விட்டனரா? இவர்களுக்கு உடனேயே தமிழ் தேசியப் பற்றும் வந்துவிட்டதா?</b> தேர்தல் வெற்றியொன்றையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட இவர்களில் சிலர் தங்களின் தலைவர்களையே துரோகிகளாக காட்டிý அவர்களின் பெயரைக் கூýட உச்சரிக்க கூýச்சப்படுபவர்களாகவே இருக்கின்றனர். தலைவர்களை அடிýயோடு மறந்தவர்களும் உண்டு. விடுதலைப்புலிகளுக்கு நல்ல பிள்ளைகளாக நடிýப்பவர்களும் உண்டு.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல தலைவர்களான ஜீ.ஜீ. பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் கூýறியதாக கூýறப்படும் கடும் சொற்களை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களின் தீர்ப்பிற்கு நாம் கட்டுப்பட்டவர்கள். இந்த முறை தேர்தலும் நேர்மையாக நடந்திருந்தால் மக்களின் தீர்ப்பினை ஏற்றிருப்பேன். எனவே, இத்தனை தடைகளையும் தாண்டிý வந்து வாக்களித்த 5 170 பேரின் துணிவிற்கும், உள்ளத் தூய்மைக்கும், ஆதரவிற்கும் எனது நன்றிகள் என்றும் இருக்கும்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
சம்பந்தன் ஐயாவுக்கு

ஒருகரையில் தமிழ்ச்செல்வன், நடுவில் பிரபாகரன், மறு கரையில் நீங்கள். பாராளுமன்றம் கூýடுவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின்.......மன்னிக்கவும்..... தமிழரசுக் கட்சியின் எம்.பி.க்கள் உங்கள் தலைமையில் வன்னியில் நடத்திய சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் குறிப்பிடுகிறேன். என்ன காட்சி அது.

முன்னரும் நீங்கள் அவர்களைப் பல தடவைகள் பரிவாரங்களுடன் சென்று சந்தித்து வந்திருக்கிறீர்கள். என்றாலும் இச்சந்திப்புக்கு ஒரு பிரத்தியேகமான தனித்துவம்.

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் இரு தசாப்தங்களுக்கும் கூýடுதலான காலமாக ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் பிரபாகரன் அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர் கூýறுவதைக் கேட்ட அந்தக்காட்சி என்னை மலைக்கவோ, வியக்கவோ வைக்கவில்லை. மகிழ்ச்சிக் கடலில் தான் ஆழ்த்தியது.

பச்சைமண்னும், சுட்டமண்னும் போன்று இருந்த தமிழ்த் தீவிரவாதமும் தமிழ் மிதவாதமும் ஒருங்கே நின்றதை என்னவென்று வர்ணிப்பது என்று என்னால் கூýறமுடிýயவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இத்தகையதொரு காட்சியை நினைத்துப் பார்த்திருக்கவே முடிýயாது.

நினைத்தது நடந்ததுவிட்டால் வரும் சந்தோர்த்தை விட நினைக்காததும் நினைத்துப் பார்த்திருக்கவே முடிýயாததும் நடந்துவிட்டால் அதனால் வரும் சந்தோர்ம் வித்தியாசமானதல்லவா சம்பந்தன் ஐயா.!வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரிய 1977 பொதுத் தேர்தலில் வென்று அமிர் தலைமையில் அன்று 18 பேர் பாராளுமன்றத்துக்குச் சென்றதற்குப் பிறகு, இப்போது உங்கள் தலைமையில்தான் அதையும் விடக்கூýடுதல் எண்ணிக்கையில் 22 பேர் பாராளுமன்றத்திற்குள் பட்டுவேட்டிý சால்வையுடன் தமிழ் மனம் கமழ பொட்டுப் பிறையுடன் பிரவேசித்திருந்தீர்கள்.

அன்று அமிருக்கு இருந்த பொறுப்பை விட உங்களுக்கும் உங்கள் தலைமையில் சபைக்குள் வந்திருப்போருக்கும் இருக்கும் பொறுப்பு பாரியது என்கிறேன் நான். மனதுக்குள் சங்கடமாயிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் சம்பந்தன் ஐயா, அன்று அமிர் தன்னால் முடிýயாது என்று நன்கு தெரிந்திருந்தும் தனிநாடு பெற்றுத்தரும் பொறுப்பை வீனே விதண்டாவாதத்திற்கு சுமந்தார் அலுத்தார்.

ஆனால், உங்களுக்குரிய பொறுப்பு நடைமுறைச் சாத்தியமானது என்று கூýறி உங்களை இந்த வயதில் சங்கடத்தில் மாட்டிýவிடுவதாக நீங்கள் நினைக்கவேண்டாம். உண்மையிலேயே, தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு தலைமைதாங்கி நின்று ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் உறுதிப் பாட்டையும் வெளிக்காட்டிý நிற்பவர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பாராளுமன்றத்தில் 'குரல் தரவல்லவர்" என்ற குறிப்பான பாத்திரம் உங்களுக்கு.

முன்னைய பாராளுமன்றத்திலும் தமிழ் தேசியக் கூýட்டமைப்பு என்ற பெயரில் அங்கம் வகித்த உங்கள் தரப்பினர் காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பாமரர்கள் மத்தியிலும் படிýத்தவர்கள் மத்தியிலும் இருந்து கிளம்பியிருந்ததை நீங்கள் அறியாமல் இருந்திருக்க முடிýயாது. ஆனால், இத்தடவை உங்களிடம் இருந்தும் உங்களுடன், வந்திருப்பவர்களிடம் இருந்தும் கனதியான பங்களிப்பை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது நிச்சயம். அந்தப் பங்களிப்பைச் செய்ய உங்களுக்கு அவர்களில் உறுதுணையாக இருக்கக்கூýடிýயவர்கள், தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதை எடுத்தியம்ப வல்லவர்கள் எத்தனை பேர் என்பதில் எனக்கொரு சந்தேகம். என் சந்தேகத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க எனக்கு உரிமையில்லை. ஆனால், நீங்கள் உள்மனதுக்குள் பகிர்ந்து கொண்டால் கூýட எனக்குச் சொல்லமாட்டPர்கள். அந்தளவு சாமர்த்தியசாலி நீங்கள் சம்பந்தன் ஐயா.

கிட்டத்தட்ட ஒரு 40 வருடகால தமிழ் அரசியலை எடுத்துப்பார்த்தால், 'அமிர்" எதிர்க்கட்சித் தலைவராக அரசியல் விபத்தினால் வந்தபோது அவருடன் கூýட இருந்த எம்.பி.க்கள் தான் ஆற்றல் மிக்க குழுவினராக பாராளுமன்றத்திற்குள் விளங்கினர் என்பது எனது கருத்துமாத்திரமல்ல பலரும் ஏற்றுக்கொள்வர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் 1977, டிýசம்பரில் என்று நினைக்கின்றேன், அமிர் முதலில் ரொனி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் ஆற்றிய உரையை மறுநாள் பத்திரிகைகளில் வாசித்த எத்தனையோ சிங்களவர்கள் கூýட, இப்படிýப்பட்டவரா இவர் என்று வியந்து பேசியது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது உண்மை. வேட்டிý, சேர்ட், சால்வைத் துண்டு போடும் ஒரு பொட்டுப் போட்ட பேர்வழி என்றுதான் அமிரை அவர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள் போலும்.

எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற பிறகு அமிர் முதன், முதலாக பாரியார் சகிதம் வெளிநாட்டுப் பயணம் போவதற்கு முன்னதாக, யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு பிரமாண்டமான கூýட்டம். ஒரு நாட்டையே பொறுப்புக் கொடுத்துவிட்டு வெளியே செல்லும் ஒருவரின் மன உணர்வுடன்தான் அமிர் அன்று பேசினார். நான் நேரில் பேச்சைக் கேட்டவன் என்பதால் கூýறுகிறேன்.

அருகில் இருந்த சிவா ஐயாவை நோக்கி தனது கையைக் காட்டிý 'நண்பர் சிவசிதம்பரம் தூண்போன்று துணையாக இருக்கிறார். நான் வெளிநாட்டுப் பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ளலாம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர் சிவசிதம்பரம்" என்று அமிர் கூýறினார்.

நீங்கள் வெளிநாட்டுக்குப் போகவேண்டும் என்பதற்காக நான் கூýறவில்லை. அன்று அமிர், சிவா ஐயாவைக் காட்டிýச் சொன்னதைப்போன்று உங்களுக்கு அருகில் இருப்பவர்களில் எவரையாவது நீங்கள் கூýறுவீர்களா? கூýற வேண்டுமென்று நான் மாத்திரம் கேட்பதாக நினைத்துவிடாதீர்கள் சம்பந்தன் ஐயா. பலரும் அறியவிரும்புகிறார்கள் என்பது உண்மை.

ஆனந்தசங்கரி அடிýக்கடிý சொல்வார் 'தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் இருந்தவர்களில் இன்று நான் ஒருவன்தான் உயிருடன் இருக்கிறேன்" என்று. அதில் அவர் பெருமைப்பட நியாயம் இருக்கிறது என்று நான் சொன்னால் சிலவேளை உங்களுக்கு கோபம் வரும்.

ஏன் இதைச் சொல்கிறேன் தெரியுமா? இந்தவகையில் உங்களுக்கும் ஒரு பெருமை இருக்கிறது. என்ன வென்று யோசிப்பீர்கள்? சொல்கிறேன்.

சிவா ஐயா தனது இறுதி நாட்களில் பம்பலப்பிட்டிý சரஸ்வதி மண்டபத்தில் ஒரு கூýட்டத்தில் உரையாற்றுகையில், 'இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திராகாந்தி, பார்த்தசாரதி தொடக்கம் சிதம்பரம், நட்வார்சிங், தீக்ர்pத் வரை பேச்சுவார்த்தைகள் நடத்தியவர்களில் இன்று, நானும் சம்பந்தனும்தான் உயிருடன் இருக்கிறோம்" என்று சொன்னது எனக்கு நல்ல ஞாபகம். இப்போது சிவா ஐயாவும் இல்லை, நீங்கள்தான் இருக்கிறீர்கள்.

இன்று உங்களுக்கு தமிழ் மக்களாலும் அவர்களின் ஏக பிரதிநிதிகள் என்று உலகுக்கு நீங்கள் பிரகடனம் செய்யும் அவர்களாலும் உங்களிடம் எதிர்பார்க்கப்படும் பங்களிப்பைச் செய்ய பலவித அனுபவங்கள் இருக்கின்றன. அதற்காகத்தான் சிவா ஐயா கூýறியதை நினைவு படுத்தினேன், வேறு ஒன்றுமில்லை.

வீடு சின்னத்துடன் தொடங்கிய தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டம் இப்போது மீண்டும் வீடு சின்னத்துடனேயே புதிய வடிýவத்தை எடுத்திருக்கிறது. இதை நீங்களும் அடிýக்கடிý தேர்தல் பிரசாரங்களின்போது கூýறியிருந்தீர்கள்.

ஆயுதப் போராட்டத்தின் மூýலமாக உருவான சூýழ்நிலைகளினால் கிடைக்கப்பெறக்கூýடிýயவையாக இருக்கும் பலாபலன்கள் பாராளுமன்ற அரசியலினால் பதம்பார்க்கப்படக்கூýடாது என்ற நிலைப்பாடு கொண்டவன் நான். ஏனென்றால், இதே பாராளுமன்ற அரசியல் தான் எங்களை இந்த அவல நிலைக்குக் கொண்டுவந்தது. இதை உங்களுக்கு நானா சொல்ல வேண்டும்?

உங்களிடமும் உங்களுடன் கூýட உள்ளே வந்திருப்பவர்களுக்கும் ஒப்படைக்கப்பட்டிýருக்கும் பொறுப்பை பாராளுமன்றத்தின் மூýலமாக உருப்படிýயான பலாபலன்களை அடையமுடிýயுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு மீண்டும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தமாட்டPர்கள் என்ற நம்பிக்கையுடன் மடலை முடிýக்கிறேன் சம்பந்தன் ஐயா உங்கள் நலனுக்காகப் பிரார்த்திக்கொண்டுவந்தது. இதை உங்களுக்கு நானா சொல்ல வேண்டும்?

நீலன் மறைவிற்குப் பிறகு கொழும்பில் இடம்பெற்ற சில சந்திப்புகள் உங்களைப் பற்றி சிலர் ஏதோவெல்லாம் பேசக்கூýடிýய நிலையை துரதிர்;டவசமாக உருவாக்கியிருந்தனர். ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மூýலம் உங்களை இன்றைய உயர் அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களின் தியாகத்தைப பற்றி இப்போது கொழும்பில் எந்த அரங்கிலும் எவர் முன்னிலையிலும் தைரியாக பேசுகிறீர்கள்..... பழையவையெல்லாம் அடிýபட்டுப் போகக்கூýடிýயதாக.....

உங்களிடமும் உங்களுடன் வந்திருப்பவர்களிடமும் ஒப்படைக்கப்ப்டடிýருக்கும் பொறுப்பை பாராளுமன்றத்தின் மூýலமாக உருப்படிýயான பலாபலன்களை அடைய முடிýயுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு மீண்டும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தமாட்டPர்கள் என்ற நம்பிக்கையுடன் மடலை முடிýக்கிறேன் சம்பந்தன் ஐயா நீங்கள் நலமாக இருக்க வேண்டுமென்ற உளமார்ந்த விருப்பத்துடன்....பிரார்த்திப்பது என் வழக்கமில்லை.......

வணக்கம்

இங்கனம் சத்யன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)