11-06-2005, 08:40 AM
<b>தம்மை விடுவிக்க அரசு போதிய அக்கறை காட்டவில்லை- சிறிலங்கா காவல்துறையினர் விசனம்.</b>
தமிழீழ நீதிமன்றினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறையினர் மூவரை சண்டே ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
கிளிநொச்சியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தம்மை விடுவிப்பது குறித்துப் போதிய சிரத்தையை சிறிலங்கா அரசு காட்டவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் குறித்த சிறிலங்கா காவல்துறையினர் முறையிட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரான நீர்கொழும்பைச் சேர்ந்த போப்பிட்டிகொட என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் 'தாம் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் அடுத்த வருடம் பாடசாலையில் சேரவுள்ள தமது பிள்ளையைப் பாடசாலையில் சேர்ககும் நடவடிக்கைகள் யாவும் தடைபட்டுப்போயுள்ளதாக' கவலைதெரிவித்துள்ளார்.
இந்தச் சிறிலங்கா காவல்துறையினர் மகிழ்ச்சியாக உரையாடும் படமும் இந்தப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது.
<b>குறிப்பு: மொழிபெயர்த்தபோது உள்ளத்தில் எழுந்த எண்ணங்கள் இவை!</b>
1) சிறிலங்கா அரசபடைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள எவரையாவது ஈழநாதத்தின் செய்தியாளர் சென்று சந்தித்து உரையாட சிறிலங்கா நீதி நிருவாகம் அனுமதிக்குமா?
2) சிறிலங்கா படைகளால் இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள், காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழர்கள், கொல்லப்பட்ட தமிழர்கள் ஆகியோரில் ஒருவருக்காவது பாடசாலைக்குச் செல்லும் வயதில் பிள்ளை இருக்கவில்லையா??
3) அவ்வாறு பிள்ளைகள், குடும்பம் என இருந்த எல்லோரையும் சிறிலங்கா பிணையில் செல்ல அனுமதித்திருக்கிறதா???
4) ஆனால் விடுதலைப் புலிகள் அண்மையில் கூட மனிதாபிமான முறையில் அவ்வாறு விடுவித்ததாக வரலாறு இருக்கிறது. சிலவேளை இவரையும் கூடப் பிரபாகரன் அவர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம். சந்திரிகா செய்வாரா?
இதுதான் சிங்களத்தின் உண்மை முகம். மனித உரிமைகளை மதிப்பது சிறிலங்கா அரசா அல்லது புலிகளா என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் மேற்படி செய்தி.
<b>நன்றி:</b> த சண்டே ரைம்ஸ்
<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)