Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள்
#1
தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள்
கருணாநிதி அறிக்கை


சென்னை, ஜுன்.9-

தமிழ் செம்மொழி ஆக்கப் படுவதால் கிடைக்கும் நன் மைகள் எவை என்பதை கருணாநிதி விளக்கினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகிழ்ச்சி

பல்வேறு முற்போக்குச் சட்டங் களும், திட்டங்களும் நிறைவேற் றப்படுமெனச் சுட்டிக் காட்டி நெஞ்சினிக்கப் பல செய்திகளைத் தரும் குடியரசுத் தலைவர் உரையில், எட்டாவது அட்ட வணை மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாக்கிட ஆய்வு நடக்குமென்பதுடன், ``தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் படும்" என்ற தேன் தோய்த்த பலாச்சுளைச் செய்தியும் கூறப் பட்டுள்ளது. இச் செய்தி கேட்டு இங்குள்ள தமிழர் மட்டுமின்றி கடல் கடந்து வாழ் தமிழர்களும் ஆடிப்பாடி அக மகிழ்ந்து வாழ்த் தொலி முழங்குகின்றனர்.திராவிட முன்னேற்றக் கழகம் தனது தொடக்கக் காலம் முதல் இந்திய ஆட்சி மொழி பிரச்சி னையில் அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இருக் கின்ற மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குங்கள் என் பதை வலியுறுத்தி வந்திருக்கிறது.1965-ம் ஆண்டு மாநிலங்கள வையில் நமது தலைவர் அறிஞர் அண்ணா மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்பதை வலியுறுத்தி பேசினார்.

கடிதம்

கழக ஆட்சியில் நான் முதல்வ ராக இருந்தபோது, பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு 3-3-2000 அன்று கடிதம் எழுதினேன்.அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் எழுதப்பட்ட பல கடிதங்களுக்கு சாதகமான பதில் எதுவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடமிருந்து நமக்கு கிடைத்தபாடில்லை.

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் நாளன்று தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சி களின் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்து தமிழைச் செம்மொழி யாக அறிவிக்க வேண்டுமென்று கோரி மனு கொடுத்தனர்.

நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதும், எதிர்க்கட்சி யிலே இருக்கின்றபோதும் தமிழை செம்மொழி என அறி விக்க வேண்டுமென்பதற்காக அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு பல கடிதங்கள் எழுதியிருக் கின்றேன்.

பயன்கள்

தமிழ் செவ்வியல் மொழியாக ஆக்கப்படுவதால் தமிழகத்திற்கு என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதையும் விளக்கிட விரும்புகிறேன்.

* மத்திய அரசு தமிழை செம் மொழி என்று அறிவித்தால் உட னடியாக இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழு அதனை ஏற்கும். அதன்பின் அனைத்து இந்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த்துறை தனித் துறைகளாக உருவாகும். தமிழ் மொழி, தமிழகக் கலை, இலக்கிய ஆய்வு கள் முனைப்பாக நடைபெறும்.

* இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம் மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத் தும் அதை ஏற்கும்.

* தமிழ் மொழிக்கும், தமிழர்க் கும் உலக அளவில் தன் மதிப்பு உயரும்.

* பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக் கியங்கள், கட்டுரைகள், வரலாறு, பண்பாட்டுக் கருத்துக்கள் இடம் பெறும்.

ரூ.100 கோடி

* பல்கலைக்கழகங்களில் தற் போது தமிழ் மொழி கீழ்த்திசை மொழி என்று கருதப்படுகிறது. இந்நிலை மாறி இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், உலகப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை நிறு வப் பெறும். அத்துறைகள் தனித் தன்மையுடன் செயற்பட வாய்ப்பு ஏற்படும்.

* சமஸ்கிருதத்திற்கு இந்திய அரசு நேரடியாக 40 கோடி ரூபா யும், அரசு சார்பு நிறுவனங்கள் வாயிலாக 100 கோடி ரூபாயும் ஒதுக்கி, அந்த மொழியின் வளர்ச் சிக்கு உதவி வருவது போல் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

* தமிழ்நாட்டிலும், இந்திய நாட்டிலும் பரந்து விரிந்து கிடக் கும் கல்வெட்டாய்வு, ஓலைச் சுவடி ஆய்வுகள் சமஸ்கிருதத்தை மையப்படுத்தியே ஆராயப்படு கின்றன. இநëத நிலையில் தமிழ் மொழியை மையப்படுத்தி உண் மையான வரலாற்று பண்பாட் டுக் கருத்துக்கள் வெளிவர முடி யும்.

* அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வேகமூட்டும் வகையில் மேலும் பல திட்டங்கள் வகுத்துச் செயல் பட வாய்ப்பு ஏற்படும்.

* இந்திய மொழிகளில் மட்டும் அல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தமிழ் இலக்கியங்களும், நவீன படைப் புகளும் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவும்.

நன்றி

எனவே, தமிழுக்கும், தமிழர்க் கும் எழுச்சி மிகுந்த - ஏற்றம் நிறைந்த எதிர்காலம் அமை வதற்கு இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் உரையில் கொடி உயர்த்தப் பட்டிருப்பதற்கு உடன்பிறப்பே; உன் சார்பிலும், உலகத் தமிழர் சார்பிலும் நன்றி! நன்றி! ஓராயிரம்; லட்சம்; ஒரு கோடி நன்றி.

இவ்வாறு கருணாநிதி கூறி யுள்ளார்.
Reply
#2
தமிழ் என்றும்
என் மனதில்
செம் மொழியே.

தலைவர் என்றும்
என் மனதில்
செங் கோலனே.

யாழ் இணையம் என்றும்
என் மனதில்
செந்தமிழ் இதழே.


கவிதன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)