Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புத்தரின் பெயரால்
#1
தமிழ் இளைஞர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட புத்தரின் பெயரால் என்ற திரைப்படம் இங்கிலாந்தில் நடைபெறும் எம்மா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி குமுதம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை
இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் எம்மா விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்த விருது ஆஸ்கர் விருதுக்குச் சமமானது என்ற பார்வை சர்வதேச அளவில் உண்டு. இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆவலும் ஹாலிவுட்டில் ஆரம்பித்து உலகம் முழுதும் இருப்பதால் அந்தந்த நாட்டு சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களும் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்கிறார்கள்.

இந்த வருடம் எம்மா விருது விழாவில் புத்தரின் பெயரால்... (In The Name of Buddha) என்ற தமிழ்ப் படமும் கலந்துகொண்டிருக்கிறது. தமிழ் ஈழத்திற்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாக அதில் நடித்திருக்கிறார் ஜோதிலால் என்கிற தமிழர். அவரைச் சந்தித்தோம்.



மெட்ராஸ் டாக்கீஸில் ஆப்ரேடிங் கேமராமேனாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் டைரக்டர் ராஜேஷ் டச்ரீவர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் டைரக்டர் இல்லை. ஒரு ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கு ஆர்ட் டைரக்டராக வேலை செய்து கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் புத்தரின் பெயரால்..., (In The Name of Buddha) படத்தின் கதையைச் சொல்லி பிரபாகரனாக நடிக்க நிறையப் பேரைப் பார்த்து ஓய்ந்து போன என் கண்களுக்கு, நீ அச்சுஅசல் பிரபாகரனாகத் தெரிகிறாய்... நடிக்கிறாயா? என்று கேட்டு இன்ப அதிர்ச்சி தந்தார். அதற்கான உடைகளைப் போட்டுப் பார்த்ததும் எனக்கே பிரபாகரனைப் போல் ஒரு கம்பீரம், மிடுக்கு எல்லாம் வந்துவிட்டது.

இலங்கைத் தமிழ் பேசி நடித்தேன். 1980_ல் நடந்தது போல் கதை எழுதியிருந்தார். இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு சாத்தியமில்லை என்பதால் அதேபோல் சாயல் கொண்ட பொள்ளாச்சி, தலைச்சேரி ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்தினோம். கிட்டத்தட்ட எண்பது நாட்கள். படத்தின் இரண்டு காட்சிகளைப் பற்றிச் சொல்கிறேன்...

ஒரு இலங்கைத் தமிழரின் காதலியின் கற்பை சிங்கள ராணுவம் சூறையாடுகிறது. காதலியின் கற்பைப் பறி கொடுத்தவர், பிரபாகரனைச் சந்தித்து போதும் நாம் போராடியது. இப்படியே போராடிப் போராடி நிறைய இளைஞர்களையும், அவர்களின் குடும்பங்களையும், உடைமைகளையும் பெண்களின் மானத்தையும் வாழ்க்கையையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். இது எத்தனை நாட்களுக்கு? எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொள்வோம். சுதந்திர தமிழீழம் வேண்டுமா? இதற்காக இன்னும் நிறையப் பேர் சாகணுமா தலைவரே? என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறார். பிரபாகரன் அவரைச் சமாதானப்படுத்தி நாம் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்கிறார். அவரின் பதிலுக்கு சமாதானம் அடையாமல், னக்கு இந்த நாடே வேண்டாம் என்று இலங்கையை விட்டு வெளியேறுகிறார். இந்தக் காட்சியில் பிஜு, சோனியா இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.

இன்னொரு காட்சி.



ஒரு மலையருவியில் ஒரு புத்தர் சிலை. அந்த புத்தர் சிலைக்கு முன்னே மதத்தலைவர்களும், சீடர்களும் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று புத்தர் மீது இரத்தம் கலந்த தண்ணீர் வருகிறது. அது தெரியாமல் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். மலையருவியின் மறுபக்கம் ஒரு கொலை நடக்கிறது; கொலை செய்யப்பட்டவரின் ரத்தம்தான் சிலை மீது வருகிறது.

இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யமான காட்சிகள் அடங்கியதுதான் புத்தரின் பெயரால்.. என்னைப் பொறுத்தவரை வாழும் ஒரு மனிதனைப் பற்றிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்ற பெருமை. படத்தை ரெடி செய்து லண்டனுக்கு அனுப்பினோம். சிறந்த நடிகருக்கான Nominee ஆக என்னைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் எனக்குக் கிடைத்தபோது என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.

டைரக்டர் மணிரத்தினத்திடம் இதைச் சொன்னீர்களா? என்று கேட்டதும், அவரிடம் எப்படி இதைச் சொல்வது என்ற தயக்கம். கேமராமேன் மணிகண்டனிடம் இதைச் சொன்னதும் அவர் மணிரத்தினம் சாரிடம் சொல்லிவிட்டார். உடனே அவர் என்னிடம் அப்படியா! எவ்வளவு பெரிய விஷயம். நீ நடித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று ரத்தினச்சுருக்கமாகக் கேட்டது எனக்குப் பெருமையாக இருந்தது.



இதைப்பற்றிய மேலகதிக விபரங்களுக்கு

http://www.inthenameofbuddha.com/main.htm

படம் யாராவது பார்தீர்களா? விமர்சனம்?
\" \"
Reply
#2
[align=center:6b38439734] <span style='color:#ff0064'>IN THE NAME OF BUDDHA
திரைப்படம் பற்றிய பழைய கட்டுரை:-</span>
<img src='http://www.inthenameofbuddha.com/images/gal/5b.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/images/icon/icon16.gif' border='0' alt='user posted image'>
]http://www.yarl.com/forum/viewtopic.php?t=...ign:6b38439734]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)