08-23-2004, 06:43 AM
<b>எங்கள் ஆயுதங்களை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்!</b>
<span style='color:red'>நக்சல் போராளி கத்தார் பேட்டி
ஏழு வருடங்களுக்கு முந்தைய ஏப்ரல் ஆறாம் தேதி... ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பூதேவி நகரில் அந்த வீட்டைச் சுற்றி வளைக்கிறது போலீஸ். உள்ளே... சட்டையில்லாமல் காலில் சலங்கையோடு ஒரு நாடோடிபோல இருக்கிற
கத்தார் <img src='http://www.vikatan.com/av/2004/aug/29082004/p66.jpg' border='0' alt='user posted image'>
அந்த மனிதர், சலனமில்லாமல் பார்க்கிறார். வார்த்தைகளுக்கே வாய்ப்பில்லாமல் படபடவெனச் சுட்டுத்தள்ளுகிறது போலீஸ். ஆறு தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறபோதும் ''புரட்சி ஓங்குக'' என்று பெருங்குரலெடுத்துப் பாடுகிற அவரைப் பார்த்து மிரண்டு போகிறது போலீஸ்.
இப்போது...
'அதில் ஒரு குண்டு இன்னும் என் உடம்பில் இருக்கு' என்று சிரிக்கிறார் 'குமடி விட்டல்' என்ற கத்தார். ஆந்திராவை உலுக்கும் நக்சலைட் அமைப்பான 'மக்கள் யுத்தக் குழு'வின் பிரதான ஆயுதமே இவர்தான். அனல் பிரசாரப் பாடகர். அரசியல் தலைவர்களுக்கும் சினிமா ஸ்டார்களுக்கும் கூடுகிற கூட்டத்தைவிட கத்தாரின் நெருப்புப் பாடல்களைக் கேட்கக் கூடுகிற மக்கள் அதிகம். தற்போதைய ஆந்திர அரசு, நக்சலைட்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. குழுவில் முக்கிய இடம் வகிக்கிறார் கத்தார்.
[b]\"\"அரசுடனான பேச்சுவார்த்தை எந்த அளவில் இருக்கிறது?\"\"
'பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்கிறது. அமைதி ஏற்பட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி. நிரந்தர அமைதியைத்தான் நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். நக்சலைட்டுகள் அமைதிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், எங்களைச் சமூகவிரோதிகள்போல் சித்திரிக்கிறார்கள். பில்கிளிண்டன் ஆந்திரத்துக்கு வந்தபோது அவர் மனம் கோணக் கூடாதென்று பிச்சைக்காரர்களைக் கொண்டு போய் மறைத்து வைத்தது அரசு. மக்கள் பிச்சைக்காரர்கள் ஆனதற்கே இந்த அரசுதான் காரணம் என்பதை எடுத்துச் சொன்னால் நாங்கள் தீவிரவாதிகளா?
இங்கே இன்னும் தீண்டாமை தாண்டவமாடுகிறது. கொத்தடிமை அவலம் தொடர்கிறது. சுரண்டிக் கொழுப் பவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் முகத்திரையைக் கிழிப்பவர்கள் அமைதிக்கு எதிரானவர்களா?'
[b]\"\"சட்டத்தை மதிக்காமல் ஆயுதத்தை நம்புவது சரியா?\"\"
'மா-சே-துங் சொன்னது தெரியும் தானே... 'நாங்கள், என்ன ஆயுதம் எடுப்பது
என்பதை நாங்களாகத் தீர்மானிப்பதில்லை. எங்கள் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்.' என்கௌண்டர், தீவிரவாதிகள் வேட்டை என்கிற பெயரில் எங்கள் அப்பாவித் தோழர்கள் எத்தனையோ பேரைச் சுட்டுதள்ளியிருக்கிறது போலீஸ். சட்டத்தை மதிக்கவேண்டும் என்று வாய்கிழியப் பிரசாரம் செய்பவர்கள், எந்த நக்சலைட்டையாவது சட்டத் தின் முன்நிறுத்திக் குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கித் தந்திருக்கிறார்களா? அவர்கள் போட்ட சட்டத்தை அவர்களே மதிப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் ஆயுதம் ஏந்துவதென்பது தவிர்க்கமுடியாமல் போகிறது!''
[b]\"\"இயக்கத்தின் வலிமை குறையத்தொடங்கிவிட்டதால்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கிவர ஒப்புக் கொண்டீர்களா?\"\"
'வலிமை என்பது ஆயுதங்களோ, ஆட்களின் எண்ணிக்கையோ கிடை யாது. கொள்கையின் பலம்தான் ஒரு இயக்கத்தின் பலம். இல்லையென்றால் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலை எதிர்த்துப் போராட முடியாது. விடுதலைப் புலிகள், இலங்கையை எதிர்த்துப் போராட முடியாது. சின்னஞ்சிறிய கியூபா, வஞ்சகம் நிறைந்த வல்லரசான அமெரிக்காவை எதிர்த்துப் போராடியிருக்க முடியாது. எல்லாப் போராட்டவாதிகளின் ரத்தம் தெறிக்கும் பலமும் அவர்களின் கொள்கைகளில்தான் இருக்கிறது.'
[b]\"\"தீவிரவாதத்தின் வழிநின்று இதுவரையில் உங்கள் அமைப்பு சாதித்தது என்ன?\"\"
'மக்களின் நம்பிக்கை! கொள்கை யில் தீவிரமாக இருந்தால் அவர்கள் தீவிரவாதிகளா? விடுதலைக்கு முன்பு சுபாஷ் சந்திரபோசும் பகத்சிங்கும் தீவிரவாதிகள். ஆனால் இப்போது அவர்கள் தியாகிகள் அல்லவா!'
[b]\"\"அரசின் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிக்கு ஆந்திர போலீஸ் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?\"\"
'ஆந்திராவில் அமைதி வந்துவிட்டால் அவர்களுக்கு பிழைப்பு நடக்காது. நக்சலைட்டுகளைச் சுடுவதற்கு ஆயுதம் வாங்குவதற்கு... என்று கோடிக்கணக்கில் ஒதுக்கப்படும் அரசாங்க நிதி உதவி நின்றுவிடும். இதில் அவர்களுக்கு நஷ்டம் தானே! பாவம், அவர்கள் எதிர்க்காமல் என்ன செய்வார்கள்..?
[b]\"\"தனிப்பட்ட கேள்வி... நீங்கள் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?\"\"
'தலித் குடும்பத்தில் பிறந்தவன் நான். தீண்டாமையின் வலி என்ன என்பதை அனுபவித்திருக்கிறேன். உடம்பில் சட்டை, காலில் செருப்பு போட விடாமல், இந்த சமூகம் எங்களை விலங்குகளைப்போல நடத்தியிருக்கிறது. அந்த நிலைமை இன்றும்கூடத் தொடர்கிறது. இங்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டிலேயே கூட தலித்மக்கள் வாழும் சில இடங்களில் பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தமுடியவில்லையே! என்னுடைய பெருமையே, நான் நக்சலைட் என்பதுதான். நக்சலைட் என்றால் சமூக அநீதியை எதிர்ப்பவன் என்று அர்த்தம்!'' என்கிற கத்தார்,
''நான் இளையராஜாவோ, ஏ.ஆர்.ரஹ்மானோ கிடையாது. மயங்கவைக்கும் புல்லாங்குழல் இசை வாசிப்பது இல்லை. நாடி நரம் பெல்லாம் அதிரும்படி, பறை அடிக்கிறேன். என் குரல் கேட்டு அரசாங்கங்கள்தான் அலறும். ஆனால், மக்கள் ஆராவரிக்கிறார்கள்' - என்கிறார் கம்பீரமாக.
கத்தார் என்றால் பஞ்சாபி மொழியில் புரட்சி என்று அர்த்தமாம். <img src='http://www.vikatan.com/av/2004/aug/29082004/p69.jpg' border='0' alt='user posted image'> ''இது என் பெஸ்ட் ஃப்ரண்ட் விமலா'' என்று தன் மனைவியை அறிமுகம் செய்கிறார். விமலாவிடம் கத்தாரைப் பற்றிக் கேட்டால், ''இவர் பாடுற பல பாட்டுகளுக்கு மெட்டுபோட்டுத் தந்தது நான்தான்'' எனச் சிரிக்கிறார். ''ஆமாம்... இந்த நக்சÔலைட்'டுக்கு இங்கிருந்து தான் மின்சாரம் பாய்கிறது'' என்று மனைவியின் தோள் பற்றி இறுக அணைத்தபடி, குரலெடுத்துப் பாட ஆரம்பிக்கிறார் கத்தார்.
அந்த மின்சார சம்சாரத்திற்குள் வெட்கம் பாய்கிறது! </span>
vikatan.com