Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழு குறும்படம்
#1
<b>தமிழு </b>

[size=15]ரா. சின்னத்துரை

இது குறும்படங்கள் சீசன். புதுசுபுதுசாய் விதவிதமாய் குறும்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. "தமிழு' அந்த ரகம்.

பெண் மீதான வன்முறைகள் உலகம் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதுவும் உடல் சார்ந்த பாலியல் ரீதியில் செய்யப்படும் வன்முறைகள்தான் அவற்றில் அதிகம். அப்படி ஒரு வன்முறையைப் பற்றி பேசுகிறது "தமிழு' குறும்படம்.

சுமார் 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. செக்ஸ் தொழிலாளியின் மகள் பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது "தமிழு' பாத்திரம். நம் தொழிலுக்கு மகளும் வந்துவிடக் கூடாது என்கிறாள் தமிழுவின் தாய். உடல் வன்முறையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் உயர் ஜாதியினர் வாழும் ஊரின் ஓரத்தில் வாழ்பவர்கள் தமிழுவின் தாய் மற்றும் சார்ந்தோர்கள். உயர்சாதி இளைஞனை தமிழு காதலிக்கிறாள். அவனும் காதலிக்கிறான். பின்பு தன் சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.

திருமணத்திற்கு பின் கொஞ்ச நாளிலேயே மீண்டும் தமிழிடம் வந்து மனைவியைக் குறை கூறுகிறான். ஆனால் தமிழு மறுக்கிறாள். இந்த மறுப்பில் கனமான வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்படுகிறது தமிழுவால்..... இது அவளின் முன்னாள் காதலனால் சாதியைப் பற்றிய பேச்சாக திரிக்கப்படுகிறது. தமிழுக்கு எதிராக ஊரே கிளம்புகிறது. ஊரின் வன்முறைக்கு முன்பே அவள் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறாள்..... அதோடு படம் முடிகிறது.

நம் சமூகத்தில் அடித்தட்டு நிலையில் நிகழும் மோதல்கள் ஜாதீய மோதலாக உருமாறுவது பற்றிய சித்தரிப்பு நல்ல சித்திரம். சில வசனங்கள் "நச்'சென்று இருக்கின்றன. எல்லா பாத்திரங்களில் வருபவர்களும் அவரவர் திறமையை சரியாகப் பயன்படுத்தி இருந்தாலும் இயக்குனர் தான் கைகொண்டிருக்கும் கதையை சிறப்பாக கையாண்டிருந்தாலும் நடிகர்கள் விஷயத்தில் கிராமப்புற அடித்தட்டு மக்களின் உடல் அமைப்புகளை பிரதிபலிக்கும்படியான விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் பாத்திரங்களில் வரும் சில கலைஞர்கள் அந்த கதாபாத்திரத்தை சரிவர, புரியாமல் நடித்திருக்கின்றனர். என்றாலும் ஒரு நல்ல கதையை சமூகத்தில் நிலவும் ஒரு வன்முறையை நன்றாக பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

<b>?</b>
குறும்படத்தை விமர்சனம் செய்தவர்கள் அதன் இயக்குனரையோ கலைஞர்களையோ குறிப்பிடாதது ஏனோ?
-AJeevan
http://tamil.sify.com/pennaenee/fullstory....php?id=13490924
&
http://ajeevan.blogspot.com/

http://ajeevan.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)