Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எச்சரிக்கை....!
#1
<b>சிங்களத் தடைமுகாம்களில் புலனாய்வாளர்களால் போடப்படும் தூண்டில்கள் மீதான விழிப்பு நிலை. </b>

"...தமிழர்களை வீழ்த்துவதற்கு சிறிலங்காப்புலனாய்வாளர்கள் தமது புலனாய்வுச் செயற்பாடுகளுடன் ஒட்டிய வகையில் பல கருமங்களை தடை முகாம்களில் ஆற்றி வருகின்றார்கள்...."
"....எதிரியால் போடப்படும் சூழ்ச்சிகரமான தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாது நூறு ஆயிரம் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த தமிழர் தாயகத்தை பாதுகாத்து பலமாக்குவோம்..."
தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றிணைந்து வாழ்வதைக்கொள்கையாகக் கொண்ட விடுதலைப்போர் இன்று அர்த்தமுள்ள, சகத்திமிக்கதான தமிழத்தேசியமாக வீறுகொண்டு எழுந்து நிற்கிறது.

இத்தேசிய எழுச்சியால் பேரினவாதசக்திகளை எதிர்த்து நிற்கக்கூடிய பலத்தை தமிழினம் பெற்றுள்ளது.

இப்பலத்தை சீர்குலைந்து தமிழர்களை வீழ்த்துவதற்கு சிறிலங்காப்புலனாய்வாளர்கள் தமது புலனாய்வுச் செயற்பாடுகளுடன் ஒட்டிய வகையில் பல கருமங்களை தடை முகாம்களில் ஆற்றி வருகின்றார்கள்.

அக்கருமங்கள் தமிழரின் இலட்சியப்போருக்கு ஓர் முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது.

இம்முட்டுக்கட்டையை ஏற்படுத்த தமிழர்களின் சக்தியே தேவைப்படுவதனால், தமிழர்களை இலக்குவைத்தே புலனாய்வாளர்களால் தூண்டில்கள் போடப்படுகின்றன.

அதாவது தடைமுகாம்களில் எட்வேட், ராஜபக்ஷ, ராஜா, நசீர், திலக்,சமன், மனதுங்கா, நௌபர், பாஸ்கரன், பெரேரா, பண்டிதரட்ணா ஆகிய பல்தரப்பட்ட புனைப்பெயர்களில் புலனாய்வாளர்களாக பணியாற்றுகின்றார்கள்.

இவர்களது பணிசார்ந்த நோக்கங்களாக புலிகள் தொடர்பாக அனைத்தத் தகவல்களையும் சேகரித்தல், தமது புலனாய்வுப் பணிக்கான ஆட்திரட்டல், புலிகளின் மறைமுகச் செயற்பாட்டாளர்களை இனம்காணுதல், விடுதலைப்போருக்கு எதிரான கருத்தூட்டல்களைச் செய்தல், பொய்யான தகவல்களைப் பரப்புதல் போன்றவைகள் இருக்கின்றன.

இவற்றை இன்னும் சற்று கண்ணோக்கில் பார்ப்பது நன்மை பயக்கும்.

அதாவது தமக்குத்தேவையான தகவல்களை சேகரிக்கும் மையத்தை நோக்கியே சிறிலங்காப் புலனாய்வாளர்களின் இலக்கு இருக்கும்.

சிறிலங்கா புலனாய்வாளர்கள் தமக்குத்தெரியாத தகவல்கள் இல்லை என்கிறவகையிலும், தகவல்களை சொல்லாமல் போக முடியாது என்கிற உளவியல் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலும், போலியான நட்புறவை ஏற்படுத்தும் வகையிலும் தமக்கான தகவல்களைச் சேகரித்துக் கொள்வார்கள்.

இதுபோன்ற பணிசார்ந்த நோக்கங்களை எட்டுவதற்காக சலுகைகள் வழங்குதல், ஆசைவார்த்தைகள் கூறுதல், உதவிசெய்தல், அனுதரப்படுத்தல், இனிக் இனிக்க பேசும் உரையாடல், தமிழரின் நலன்களை பேணுபவர்களாக வெளிப்படுத்தல் ஆகியவைகள் தூண்டில்களாக போடப்படுகின்றன.

இவ்யுக்தி அனைத்தும் தமிழர்களது மகிழ்ச்சியையும் நல்லதொரு ஒளிமயமான வாழ்க்கையையும் சிதைப்பதாகவே இருக்கும்.

இதனைக் கருதிக்கொள்ளாது நல்லவர்கள் என்கின்ற ஒரே அளவு கோலால் அளக்க முற்படும் போது சிறிலங்காப் புலனாய்வாளர்களின் உண்மை முகத்தை பார்க்கும் சாத்தியம் இல்லாமல் போய்விடும்.

அதாவது 'ரகுலா' ஆங்கிலப்படத்தில் இரவில் இரத்தம் குடித்து மனிதர்களைக் கொல்லும் பிசாசு பகலில் அப்பாவியாக நல்லவர் போல் பாசாங்கு செய்து மனிதர்களை ஏமாற்றும், இதனை ஒத்த பாசாங்கு போலவே எதிரிப்புலனாய்வாளர்களின் முக மூடிகளாகும்.

இவர்கள் தமிழர்களுக்கு ஏற்படுத்திய அட்டூழியங்கள், அக்கிரமங்கள் ஏராளம். அதிகம்.

தமிழர்கள் வெள்ளைவான் கடத்திக் காணாமல் போயினர். ரயர் எரியும் நெருப்பில் வெந்துபோயினர், சித்திரவதைகளால் ஊனமுற்று வாழ்க்கையை தொலைத்தனர், பாலியல் வன்முறைகளால் மானமிழந்து போயினர், செம்மணி போன்று பல புதைகுழிகளுக்குள் புதையுண்டு போயினர்.

இப்படியான மனித அலவல்களைத் தந்த இப்பிசாசுகளின் நடிப்பில் மயங்கிவிடாது தம்மை நோக்கிப் போடப்படும் தூண்டில்களின் மீதான விழிப்புநிலைதான் தமிழர்களை அனைத்து வழிகளிலும் பாதுகாக்கும். மனிதமனம் ஒரு குரங்கு என்பர். அதனால் மனம் மாற்றம் அடையும் அல்லது தளம்பல் அடையும். ஆனால் தமிழ்ச்சமுதாயத்தின் சுதந்திரமான வாழ்விற்காய் தமிழர்கள் தம் மனதைக் கட்டிக் காத்து பக்குவமாய் வாழ்வதிலேயே தாயகப்பாதுகாப்பு தங்கியுள்ளது.

அதாவது விரைவான பயணம் செய்யவேண்டும் என்பதற்காகவோ, தடையின்றி இலகுவான பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவோ, பொருட்களை தடையின்றி உள்ளே கொண்டு வருவதற்காகவோ மொத்தமாக ஓர் செல்வாக்கை செலுத்தவேண்டுமென்பதற்காகவோ எதிரிப்புலனாய்வாளர்களால் போடப்படும் தூண்டில்களில் சிக்கி கொள்வதனால் தமிழர்கள் பேராபத்தையே சந்திப்பர்.

ஆதலால் ஆபத்தில் சிக்கி வைக்கப் போடும் தூண்டில்களில் இருந்து தப்பிக்கொள்ளும் சில மீன்களைப்போல எதிரிப்புலனாய்வாளர்களை ஏமாற்ற வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும்.

அவ்வாறு இல்லாது இரையுடன் தூண்டில்களை விழுங்கும் மீன்களைப்போல ஏமாந்து போகும் தமிழர்கள் தம் உயிரை தம் வாழ்வை மட்டும் இழந்திடக் காரணமாக இருக்கவில்லை.

மாறாக தமிழ்ச் சமுதாயத்தை, வருங்கால தமிழ்ச்சிறார்களை, பிறக்கப்போகும் சந்ததியினரை மீளா சகதிக்குள் தள்ளி விடும் நாசகாரத் துரோகிகளாகவே இருப்பர்.

ஒரு மனிதன் தன் வாழ்வை இரண்டு விதமாக அமைத்துக்கொள்கிறான்.

ஒன்று இப்படித்தான் வாழ வேண்டும் என்பதாகும். இது வழிகாட்டல்களைக்கொண்ட வாழ்க்கை.

இரண்டாவது எப்படியும் வாழலாம் என்பதாகும். இவ்வாழ்க்கை நெருக்கடிகளையும். பிரச்சினைகளையும் பெருமளவில் கொண்டுவரக் கூடியது.

ஆகவே தமிழர்களைப் பொறுத்தவரையில் இப்படித்தான் வாழவேண்டும் என்கின்ற வழிகாட்டல்களைக்கொண்ட வாழ்க்கைதான் தூண்டில்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கொள்ள உதவும்.

இயேசு பாலைவனத்தில் தங்கி இருக்கும் போது சாத்தானால் கொடுக்கப்பட்ட மூன்று வாழ்க்கை கொள்கைகளை அவர் மறுத்துவிடுகிறார்.

அதில் ஒரு நிகழ்வை மட்டும் இங்கு பார்ப்போம். அதாவது சாத்தான் ஓர் உயர்ந்த இடத்திற்கு இயேசுவை அழைத்துச்செல்கிறது. அங்கிருந்து கீழே தெரியும் எல்லா அரசுகளையும் அவருக்குக் காட்டி அவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமையை உமக்கு கொடுக்க முடியும் நீர் தெண்டவிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவையாகும் என்றது.

இயேசு இவ்வாழ்க்கை கொள்கையை மறுக்கிறார். அவரின் பொதுவாழ்க்கை கொள்கையை சிதைப்பதற்கான தீய எண்ணத்துடனே சாத்தான் ஆசைகாட்டியது. அதனால் இயேசுவை தன் அடிமையாக்க முயற்சிசெய்தது. ஆனால் இயேசுவின் மன உறுதியால் சாத்தான் தோற்கடிக்கப்படாது.

இச்சம்பவமானது மனித குலத்திற்கு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டவும், தீய எண்ணங்களுக்கு அடிமையாகப் போகக்கூடாது என்கிற செய்தியை வெளிப்படுத்தவும் சொல்லப்படுவதாகும்.

சிங்கள தேசத்தின் போர்க் கொடூரம் தமிழர்களது வாழ்வியலை நெருக்குதல்களுக்குள்ளாகியது. அதனால் உளநெருக்கீடுகளுக்குள் தமிழர்கள் வாழும் நிலை.

இதனால் தமிழர்கள் மனம் தொய்வு நிலைக்குள் இருக்கும் என்கிற அடிப்படையில் சலுகைகளால், வசதிவாய்ப்புக்களால் தமிழர்களை உள்வாங்க முனையும் புலனாய்வாளர்கள்.

எப்படி சித்திரவதைகளுக்குள்ளாகி சிறையில் இருக்கும் கைதி ஒருவனுக்கு சித்திரவதை செய்தவனே தன்கையால் ரொட்டித்துண்டை கொடுப்பதுபோல இங்கு புலனாய்வாளர்களது செயல்கள் அமைகின்றன.

தமிழர்கள் இதுவரை காலமும் அல்லல்பட்டு துன்பப்படுகிறார்கள். அவர்களது துன்பியல் வாழ்விற்கு ஒத்தடம் கொடுக்கப்படவேண்டுமென்கின்ற அடிப்படையில்தான் எதிரிப்புலனாய்வாளர்கள் சலுகைகள், உதவிகள், வசதிவாய்ப்புகளை தருகின்றார்கள் என்று தமிழர்கள் எவரும் எண்ணிவிடலாகாது.

தமிழரின் விடுதலைப்போர் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதிலும் பலசாலிகளாக இருக்கும் தமிழினத்தை பலவீனமுள்ளவர்களாக ஆக்கவேண்டுமென்பதிலும் புலனாய்வாளர்கள் பிடிவாதமாகவே இயங்குகின்றார்கள்.

அத்தகைய நிலையிலே தமிழரின் தேசிய உரிமைகளை வென்றெடுக்கப் போராடிவரும் புலிகள் இயக்கத்தின் பலத்தை சிதைக்கத்தக்க புலனாய்வுப் பணிகளையே சிங்களத் தடைமுகாம் புலனாய்வாளர்கள் முன்னெடுகிக்கிறார்கள்.

இப்புலனாய்வாளர்களாலேயே தமிழரின் உயிரும், தமிழரின் மாண்பும் வரலாற்றில் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்படுகின்றது என்பதை தமிழர்கள் மறக்கலாகாது.

தமிழரின் தாயகத்தை, தமிழரின் படைபலத்தை பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. தம் தன்னலங்களுக்கு அப்பால் தமிழினத்தை பாதுகாக்க எண்ணும் கடமையுணர்வை மேலானது.

ஆதலால் எதிரி நம் தீய எண்ணங்களுக்குள் வீழ்த்தபோடும் தனிமனித உளவியல் தூண்டில்களில் மாட்டிக்கொள்ளாது தமிழர்களது, உள உரனை பேணி ஆரோக்கியமான தமிழ் சமுதாயத்தை உருவாக்குவோம்.

எதிரியால் போடப்படும் நாசகரமான தூண்டில்களில் அகப்பட்டுக்கொள்ளாது தமிழ் இனத்தின் நல்வாழ்விற்காக தியாகம்செய்த பதினெட்டாயிரம் மாவீரர்களது கல்லறைகளை புனிதமாக்குவோம்.

எதிரியால் போடப்படும் சூழ்ச்சிகரமான தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாது நூறு ஆயிரம் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த தமிழர் தாயகத்தை பாதுகாத்து பலமாக்குவோம்.

நீலன் ஈழநாதம். & sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)