சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும்
(காவலுர் கவிதன் வெள்ளிக்கிழமை, 23 ஏப்பிரல் 2004, 0:19 ஈழம்) (புதினம்)
...................... ........ ........
............ ....................
.......ஹெல உறுமயவின் சார்பில் பேச அழைக்கப்பட்டபோது, இரு பௌத்த பிக்குகள் ஒரே நேரத்தில் எழுந்து புறப்பட்டனர். அதனால் யார் பேசுவது என்ற சர்ச்சை எழுந்தது. விரும்பியவர் யாரும் பேசமுடியாது, கட்சித் தலைவரே பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, ஐ.தே.மு.க்கு சார்பாக வாக்களித்த பிக்குகளுக்கும், ஐ.ம.சு.மு.க்கு ஆதரவாக வாக்களித்த பிக்குகளுக்கும் இடையில், யாருடைய பக்கமிருந்து பேசுவதற்குப் போவது என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது.
இறுதியில் ஐ.தே.மு.யின் சார்பில் போட்டியிட்ட லொக்கு பண்டாரவிற்கு வாக்களித்த பிக்கு பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டு, முன்னே சென்றார். உடனே ஐ.ம.சு.மு.யினர் பலத்த எதிர்ப்பும் கூச்சலுமிட்டு, பௌத்த பிக்குகளைக் கேவலப்படுத்தும் வகையில் ஏசினார்கள். ஐ.ம.சு.மு.யின் சில உறுப்பினர்கள், அந்தப் பிக்குகளை நோக்கி பத்திரிகைகளையும் பைல்களையும் கடுதாசிகளையும் வீசினார்கள்.
பௌத்த பீடத்திற்கு எதிராக அவதூறாக ஐ.ம.சு.மு.யினர் காரசாரமாகச் சத்தமிட, முன்னே பேசுவதற்கு எத்தனித்த அதிவண.அத்துரலிய ரத்தன தேரர் பெரிய சத்தமாகச் சொன்னார்: 'இப்படி ஹெல உறுமயவிற்கு எதிராக இவ்வளவு அவமரியாதை தரும் ஐ.ம.சு.மு.க்கு ஹெல உறுமயவின் ஆதரவு எப்படிக் கிடைக்கும்" என்று.
அந்தப் பிக்கு எவ்வளவு கூறியும், அவரது உரை முடியும்வரை ஐ.ம.சு.மு.யினரின் காட்டுக் கூச்சல் ஓயவில்லை. பிக்குவின் உரையை யாரும் கேட்கவிடாது சத்தமிட்டுக்கொண்டே இருந்தார்கள் அவர்கள்.
முன்னர் சபாநாயகருக்கான வாக்களிப்பு இடம்பெற்ற நேரத்தில், பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.பவித்ரா வன்னியாராச்சி, வாக்குப்பெட்டிக்கு மேலே ஏறியமர்ந்துகொண்டு, ஐ.தே.மு. அங்கத்தவர்கள் வாக்களிக்க முடியாது தடுத்து, பத்திரத்தைக் கிழித்தெறிய முற்பட்டதாலும் குழப்பங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, சந்திரிகாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்தவர்கள் மிகவும் ஆக்ரோசமாகக் காணப்பட்டதாகவும், கேவலமான வார்த்தைகளால் ஏசியும், கூச்சல் போட்டும், பேப்பர்களை வீசியெறிந்தும் பலவித குழப்பங்களிலும் ஈடுபட்டதனால், பாராளுமன்றத்தில் மிகுந்த களேபரங்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)