Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
சமாதானச் சுருள் திரை மாலை
#1
சமாதானச் சுருள் திரை மாலை

யாழ்பாணத்தின் யுத்தகாலத்துக்கு பின்னர் உள்ள சூழலில் வாழும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வியலை ஊடறுத்துச் செல்லும் உண்மைகளை திரையில் செதுக்கியிருக்கும் அருமையான படைப்புகளே சமாதானச் சுருள் 7 குறும்படங்கள்...........

31.07.2004 சூடு தணியாத மாலைவேளையின் குறிக்கப்பட்ட நேரத்துக்குள் மண்டபத்துக்குள் நுழைய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சினிமா ஆர்வலர்கள் வந்து அமர்கிறார்கள்.

"இக்குறும்படங்களை 3வது தடைவையாக நான் பார்க்கப் போகிறேன்" என்கிறார் ஒரு நண்பர்.

"ஊரை விட்டு வெளியேறி வெகு காலமாகி விட்டது அந்த மண்ணைத் ஒரு முறை இப்படியாவது தரிசிக்க வேண்டும் என்ற ஆவல்" என்கிறார் மற்றொருவர்.

சுவிஸ் மக்களுக்கு இது புதியது.

"என்ன சொல்லியிருக்கிறார்கள்" என்று சுவிஸ் நாட்டவர் வினவுகிறார்.

"பார்த்து விட்டு சொல்லுங்களேன் உங்கள் கருத்தை.............." என்கிறேன்.

மௌனமாகிறார். யோசிக்கிறார்.

மாலை 8.00 மணிக்கு Europe Movi Club தலைவர் மார்க்கஸ் பஸ்லர் வந்திருப்போரை வரவேற்கிறார்.

யாழ் திட்ட இணைப்பாளரும்
அழுத்தம் குறும்பட இயக்குனருமான கா.ஞானதாஸ்
மற்றும்
போருக்குப் பின் இயக்குனர் ஜெயரஞ்சனி ஞானதாஸ் ஆகியோரை பார்வையாளருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அலட்டல் இல்லாமல் இரத்தினச் சுருக்கமாக இருக்கிறது அவரது அறிமுகம்.

பார்வையாளர்கள் கரகோசம் செய்கிறார்கள்.

திரு.திருமதி. ஞானதாஸ் இருவரும் அமைதியாக எழுந்து நிற்கிறார்கள்.

மீண்டும் கரகோசம்.

கரகோசத்தோடு சேர்த்து இருளை கவ்வத் தொடங்குகிறது மண்டபம்.

திரையில்.............

அதிகாலையின் இருள்
களத்தில் கிடந்த ரவைகளைக் கூட புல்லாங்குழலாக்கி
போரினால் ஏற்பட்ட ஊனத்தை மறந்து சமாதானத்துக்காக ஏங்கும் இளம் உள்ளங்கள்....................

அழுத்தம்
கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.

செருப்பு காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்ட சிறுமிக்கு கண்ணி வெடியின் கோரம் அதை சாத்தியப்பட வைத்ததா?

ஓவ்வொரு படத்தின் இறுதியிலும் ஒரு சில நொடிகளின் அமைதிக்குப் பின் கரகோசம் வருகிறது...............

3 குறும்படங்களின் திரையிடலுக்குப் பின்னர் 30 நிமிட இடைவேளை விடப்படுகிறது.

செருப்பு குறும்படத்தில், நிலக் கண்ணி வெடியில் மாட்டிக் கொண்டு காலையிழக்கும் காட்சியில் அதிர்ந்த சுவிஸ் பெண்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள்.

குறும்படங்கள் முடிந்தவுடன் உள்ள கலகலப்பு இல்லாத ஒரு மயான அமைதி.
யாரும் யாரோடும் பேசாதிருக்கின்றனர்.

யுத்தம் நிறைந்து கிடந்த யாழ் மண்ணின் ஒரு பகுதிக்குள் சென்று வந்த உணர்வாகயிருக்கலாம்.

அங்கு நடக்கும் இன்னல்களில் ஒரு சில துளிகளே இவை.

என் நண்பர்கள் என்னைப் பார்ப்பதோடு சரி. என்னிடம் எதுவுமே கேட்பதாக இல்லை.

உணவகத்துக்கு சென்று 30 நிமிடங்களுக்குள் கொஞ்சம் சாப்பிடுகிறார்கள்.

மீண்டும் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள்.

அழுது கொண்டு வெளியேறியவர்களைக் காணவில்லை.

உணவகத்தை நடத்தும் நண்பரிடம் கேட்கிறேன்.

வேறு யாராவது வெளியில் இருக்கிறார்களா என்று.

\"இல்லை.
அந்த பெண்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை\"
என்று சொல்லி விட்டுச் சென்று விட்டனர் என்கிறார்.

காட்சிகள் மீண்டும் குறும்படங்களாக திரையில் விரிகின்றன...........

தடை
மருந்துகளுக்கான தடையினால் ஏற்படும் விபரீதங்கள்.

மூக்குப் பேணி
சுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள்,
மனிதனின் புலனுக்குப் புரியாமலே,
யுத்தத்தை உருவாக்கும் அபாயம்

ஒளித்துப் பிடித்து
127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணி...........

போருக்குப் பின்
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும் , ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.

திரையிடலின் முடிவில் அனைவரது கரகோசமும் மண்டபத்தை நிறைக்கிறது.

தலைவர் திரு.திருமதி. ஞானதாஸ் இருவரையும் அழைத்து அனைவரது கரகோசத்தின் நடுவே நினைவுப் பரிசில்களை வழங்குகிறார்.

குறும்படங்கள் பற்றி கலந்துரையாடப் போகிறீர்களா என்று பார்வையாளர்களைப் பார்க்கிறார்.

பார்வையாளர்கள் யுத்த கோரத்திலிருந்து இன்னும் விடுபட்டதாக இல்லை.
அதிகமானவர்கள் சினிமா மீடியாவில் இருப்பவர்கள்.
அமைதியாகவே இருக்கிறார்கள்.
பேசுவதாக இல்லை.

திரு.ஞானதாஸ் அனைவருக்கும் நன்றி கூறியதோடு பார்வையாளர்கள் திரு.திருமதி. ஞானதாஸ் இருவரைச் சுற்றி நின்று பேசத் தொடங்குகிறார்கள்.

யுதார்த்தம் சினிமாவுக்குள் வரும் போது அது நிஜம்..................
சினிமா தெரிந்தவனைக் கூட பாதித்து மௌனமாக்கிவிடுகிறது என்பதற்கு இந் நிகழ்வு உதாரணம்.

திரைப்பட விழாக்களில் கேள்விகளைத் தொடுத்து இயக்குனர்களை விமர்சிக்கும் நண்பன் ஒருவனிடம்
ஏன் இன்று பேசமல் இருக்கிறாய் என்று கேட்கிறேன்.

இது கடினமாக இருக்கிறது.
அமைதிதான் இங்கே சமர்ப்பணமாக வேண்டும் என்கிறான்.
சுவிஸ் மக்கள் யுத்தங்களைப் பார்த்தவர்கள் இல்லை.
எங்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
அதுவும் பச்சிளம் குழந்தைகள் பாடு நெஞ்சை நெகிழ வைக்கிறது என்கிறான்.

அமைதியோடு கலைகிறோம்........................

மறு நாள் காலையில் மற்றுமொரு சுவிஸ் நண்பன் தொலைபேசி வழி
"உன்னிடம் சொல்லாமல் வந்து விட்டேன் என்று வருத்தமாக இருந்தது.
என்னை மன்னித்துவிடு.
நானும் எனது காதலியும் நேற்று இரவு பேசிக் கொள்ளவே இல்லை.
இன்னும் இதயம் பாரமாகவே இருக்கிறது என்று கூறி தொலைபேசி தொடர்பை துண்டித்துக் கொள்கிறான்.

நானும் இப்போதைக்கு அந்த 7 குறும்படங்களின் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அமைதியாகவேதான் என் தாக்கங்களை வெளிப்படுத்தலாம்...................

[size=15]AJeevan
Reply
#2

\"செருப்பு\"

- குறும்படம் பற்றி சில நிமிடம்
செல்வி தர்மினி பத்மநாதன்,
யாழ் பல்கலைக்கழகம்

சமாதானச்சுருள் திரைப்பட வெளியீடு அண்மையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது பெரும் எண்ணிக்கையில் இரகசிர்கள் அங்கு திரண்டிருந்தனர். 7 குறும்படங்கள் அங்கு திரையிடப்பட்டன. அவற்றில் என் மனதை பாதித்த படைப்புக்கள் \"செருப்பு\" \" போருக்குப்பின் \"என்பனவாகும்

தென்னிந்திய திரைப்படத்தையும், தொடர் நாடகங்களையும் பார்த்து அந்த கற்பனையில் நாம் வாழ கற்றுக்கொள்கின்றோம். எமது தாயகத்தின் பிரதிபலிப்புக்களை ஏனேதா தானோ என்று விட்டுவிடுகின்றோம் போலிருக்கின்றது. ஆனால் நாம் ஒரு முறை எம்மை திரும்பி பார்க்க வேண்டும். எமக்குள் ஆழப்புதைந்த வடுக்களை உரணவேண்டும். இவைதான் காலத்தால் அழியாதவை. அந்த உணர்வுகள் ஒரு முறை எமது தேசத்தை மீட்டுப்பார்க்க உதவும்

\"கடலோரக்காற்று\" \"உப்பில் உறைந்த உதிரங்கள்\" ஆகியவை பல்கலையில் திரையிட்டபோது நிறைந்து வழிந்த ரசிகர்களை \"அம்மா நலமா ? \" திரையிட்டபோது காணமுடியவில்லை.

இருப்பினும் : \"செருப்பு\" குறும்படத்தில் ஆரம்பத்தில் உயிர் பெறுகின்ற களம் வன்னிநிலப்பரப்பு என்பதை உணர்த்துகின்றது. பாழடைந்த கட்டிடம். ஏழ்மை நிறைந்த குடும்பம். அவர்களை பிண்ணனியாக கொண்டு கதை நகர்த்தப்படுகின்றது பொருளாதார வசதியின்மையால் செருப்பு வாங்குவதற்கு சிறுமி உண்டியல் சேர்க்கிறாள். உண்டியல் சேர்த்த பணத்தில் செருப்பு வாங்கியும் அவள் ஆசைக்கு அதை அணியவில்லை என்பதே குழந்தை மனத்தின் சோகம். வெளிப்பார்வை என்பதைவிட அவள் அடிமனதின் ஆழத்தை அவளது ஏக்கத்தை ரசிகர்கள் மீது நேரடியாக உடைக்காமல் மெல்ல மெல்ல நுழைக்கிறார் தயாரிப்பாளர் கௌதம்.

சிறுமி பெண் என்ற ரீதியில் மிக அமைதியாகவே தன் ஏக்கத்தை மனதில் அடக்கி வைத்திருக்கின்றார். தன் நண்பியிடம் ஆசைக்கு ஓரு தடைவ செருப்பை போட்டுப்பார்க் கவிரும்பி கேட்கின்றாள். பாடசாலை போகும்போது வெறுங்காலுடன் வெயிலில் நடந்து போவதும் காலில் கொப்பளங்கள் வருவதும் மனதை உருக்குகின்றுது. அதில் அவளுக்கு ஏற்படும் கவலைகள் . . ?

தொடர்ந்து அவளது தங்கை செருப்பு வாங்கி வந்தததைக்கண்டதும் அந்த ஆசையில் தான் நின்ற பிரதேசத்தையும் கவனிக்காமல் ஓடியபோது அவலம் வந்து சேர்கின்றது. பாதத்தை இழந்த சிறுமி தனக்கு வாங்கி வந்த செருப்பில் ஓன்றை போட்டுப்பார்ப்பதும் \"நான் செருப்பபு வாங்கிட்டன் வாடி \" என்று வெளியில் நின்ற நண்பியை வீட்டிற்குள் கூப்பிடுவதும் அந்த சிறுமியின் உள்ளார்ந்த வேதனையின் வெளிப்பாட்டை காணலாம். இங்கு சிறுமிக்கு செருப்பு முக்கியமில்லை. அவளின் பாதம்தான் முக்கிய கருவாகின்றது. இனி எத்தனை செருப்பு வாங்கியும் என்ன பயன் ?

இளம் தயாரிப்பாளார் கௌதம் மிதிவெடி வெடிப்பதுடனேயே படத்தை முடித்திருக்கலாம் போலும். வாசகர்களின் சிந்தனைக்கு படத்தை தூரப்படுத்தி விட்டிருக்கலாம்.

விளைநிலம் எம் நிலம்
செந்நிலம் -வெடிக்கும்
விதைகளை விதைத்தது
அரக்க கூட்டம் . .
(யாழ்வாணன் கவிதைகள் )

வன்னி நிலத்தில் இன்று எம் உறவுகளை முடக்கி விடும் விதைகள் எத்தனை ? அந்த வகையில் ' செருப்பு' யுத்தமேகம் சூழ்ந்த எமது தாயகத்தின் ஓரு துளியினை ஆவணமாகத்தந்துள்ளது. பிரதேச ஆக்கிரமிப்புமு; அவற்றின் விளைவுகளுமே எண்ணிலடங்காதன. அவற்றின் ஓரு துளியே கௌதமின் ' செருப்பு '

இளம் வயதிலேயே பலரும் பேசக்கூடிய வகையில் எடுத்துக்கொண்ட முயற்சி வாழ்த்துவதற்குரியது. இங்கு ஏதோ ஓர் வகை 'தொற்றல்' இந்த கலைஞனை பீடித்திருக்கின்றுது போலும். குறிப்பாக பேசும் கலை இசை காலம் இடம் சூழல் என்பன அவரின் திறனுக்கெட்டியவரை நகர்ந்து செல்கின்றது.

எமது தேசியமும் அதன் வரலாறுகளும் ஆவணமாக வேண்டிய சூலில் நகர்ந்து கொண்டிருப்பது சிறப்பானது. தேசிய உண்மைகள் பேணப்பட குறும்படமும் ஓர் உத்தியாக இருக்கின்றது. அந்த வகையில் தொடர்ந்தும் இக்கலைஞன் ஈழவரலாற்றை பேணும் தேடலில் வாழும் போது அவனது அர்ப்பணிப்பு, அவன் வரலாறு பேசும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

செருப்பு (The Slipper)
(இயக்குனர்:கௌதமன்)
Reply
#3
வாழ்த்துக்கள்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)