Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் நாட்குறிப்பில்கிறுக்கியது
aathipan Wrote:அன்பின் சகோதரி நளாயினி,



பலர் அந்த உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவில்லை. காதல் என்றால் அவர்கள் மனதில் வேறு ஏதோ வருகிறது. எனது எண்ணத்தில் களங்கம் இல்லை. இது உண்மை. யார் சரி யார் தவறு தெரியவில்லை. எனக்கு என் காதல் தெய்வீகமாகத்தான் தெரிகிறது. நான் காதல் உணர்வுகளை நேசிக்கிறேன். சுவாசிக்கிறேன். வணங்குகிறேன்.மதிக்கிறேன்.

உங்கள் கவிதைகளிலும் காதல் மதிக்கப்படுவதாய் உணர்கிறேன்.
உங்கள் கவிதைகள் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. இன்னும் நான் எழுதுகிறேன். அதற்கு தூண்டுதலாய் இருந்த உஙகள் எழுத்துக்களுக்கு நன்றி.

.

ஐந்து விரலும் ஒருமாதிரியா ஆதி.இல்லைத்தானே. சிலர் காதலை வேறுவிதமாக பாக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பார்வைக்கோளாறு. இல்லை இல்லை மனக்கோளாறு.நான் எப்படியோ அப்படித்தான் மற்றவர்களையும் நோக்குவோம் என்கிறது மனஇயல் விஞ்ஞானம்.காதலை தப்பாக பாற்பவர்களின் கருத்தை ஒரு பொருட்டாக எடுக்காதீர்கள்.வீதியில் போகும் போது நாய் குலைக்கிறது. என்ன செய்கிறோம் ...விலகிப்போகிறோம் .அந்த நாய் விசராகவும் இருக்கலாம் முத்தின விசர்நாயாகவும் இருக்கலாம். அது போல விலகுங்கள் அது தான் இன்னும் பலகவிதைகளிற்கு வழிசமைக்கும்.

<img src='http://www.yarl.com/ecards/images/pic_2003-11-22_090504.gif' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
Reply
<img src='http://nowrunning.com/comingsoon/kakkakakka/07.jpg' border='0' alt='user posted image'>

என் உயிரானவள்...

என்றைக்கு என்னுள் புகுந்தாய்
இன்றுவரை நினைவில்லை....
என்சுவாசத்தோடு சுவாசமாய்
உள்ளே சென்று
இன்று என்னையே
உரிமைகொண்டாடுகிறாய்..

இரவிலே வருகின்ற
மலேரியாக் காய்ச்சல்போல
மாலையில் தான்
உன் காதல் என்னை
வாட்டிவதைக்கிறது..

படிக்கிறேன் என்று
மற்றவர்க்கு பாவனைசெய்து
உன்பெயரை எழுதிவைத்து
உன்னுடன் பேசிக்கொண்டு
இருப்பேன்...

எழுதாதபேனாவை
எழுதிப்பார்க்கக்கூட
உன்பெயர்தான் எழுதுகிறேன்...

தனிமையில்தான்
என்மேல் இரக்கம் கொள்கிறாய்...
புன்னுறுவல் செய்கிறாய்...
பார்க்காமல் பார்க்கிறாய்...

உன்விழியை
எதிர் எதிர் சந்திக்க
எத்தனைதான்
முயன்றாலும்
ஒரு நொடியிலேயே
ஆண்பிள்ளைநான்
தோற்றுப்போகிறேன்..

ஆண்டவன் சந்நிதியில்
நிம்மதி கிடைக்கிறது
உண்மைதான்
உன் சந்நிதியில்
ஒரு நொடியே கூட
மோட்சம் தருகிறது...
Reply
<img src='http://www.infinet-inc.com/images/eyes.jpg' border='0' alt='user posted image'>

கத்தி இன்றி
ரத்தமின்றி
யுத்தம் செய்யும்
உன்விழிகள்
உலக அதிசயம்தான்
Reply
ஆத்திபன் ....மிக அருமையான கவிதைகள்..நீங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதுகின்றீரா? மிக்க அருமை தோழா....தொடருங்கள்....வாழ்துகள்....
அன்புடன்,
சிவா...
Reply
சகோதரி நளாயினி எங்கே? யாராவது விபரம் தாருங்கள்.
Reply
Cry
Reply
ஏப்ரல் மாத்திற்குப்பின் அவர் எதுவும் இங்கு எழுதவில்லை... நான்கு மாதங்கள் ஆகப்போகின்றது... என்னாயிற்று எங்கள் சகோதரிக்கு...
Reply
எனக்கு அந்த அக்காவையே தெரியாதே.... ஆனால் அவவின் கருத்துக்கள் படித்திருக்கிறேன் நன்றாக இருக்கும்
[b][size=18]
Reply
அதிபன்... உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்... மன்னிக்க வேண்டும் இத்தனை நாளாக நான் இவற்றை காணவே இல்லை.. தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இனியும் என் மனதில் கவிதை ஊற்று எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை...

பாலைவனமாகிப்போன என் கனவுளில் அந்த அருவிகளும் காணாமல் போய்விட்டன...

வானம்பார்த்து வாழ்ந்த என் வாழ்கையில் மழைபொய்துப்போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை....
Reply
Quote:இனியும் என் மனதில் கவிதை ஊற்று எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை...
என்ன நடந்தது..?
Reply
aathipan Wrote:இனியும் என் மனதில் கவிதை ஊற்று எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை...

பாலைவனமாகிப்போன என் கனவுளில் அந்த அருவிகளும் காணாமல் போய்விட்டன...

வானம்பார்த்து வாழ்ந்த என் வாழ்கையில் மழைபொய்துப்போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை....
ஊற்று எடுக்காது என்று கு}றினீர்கள்.. பதில் கு}ட கவிதையாகவே வருகிறது... உங்களால் முடியும் தொடருங்கள்.....! தொடர வாழ்த்துக்கள்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
aathipan Wrote:இனியும் என் மனதில் கவிதை ஊற்று எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை...

பாலைவனமாகிப்போன என் கனவுளில் அந்த அருவிகளும் காணாமல் போய்விட்டன...

வானம்பார்த்து வாழ்ந்த என் வாழ்கையில் மழைபொய்துப்போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை....

காதலை வென்றால் மட்டும் தான்
கவிதை வருமா தோழனே !
வாழ்க்கையை காதல் செய்
உலகையே உன் கைக்குள்
அடக்கி விடலாம்.

கனவுகள் பாலைவனத்திலும் வரும்
பசுந்தரையிலும் வரும்.
கற்பனை அருவி சு10றாவழியென்ன
சுழல்காற்றின் அடியிருந்தும் பிறப்பெடுக்கும்.

வானம் பார்த்தே மனித வாழ்வின்
ஜீவனோபாயமே விளைகிறது.
பருவகாலத்துப் பொய்ப்பில்
மழை புவியிறங்க மறுப்பது புதினமில்லை.

கவிதைகள் , கதைகள் , எத்தகு படைப்பும்
ஒவ்வொரு ஜீவனின் உயிருக்குள்ளும்
துளிர் விடுகிறது.
யாரும் யாரையும் நம்பி
அது பிறப்பதுமில்லை , இறப்பதுமில்லை. :!: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
Quote:காதலை வென்றால் மட்டும் தான்
கவிதை வருமா தோழனே !
வாழ்க்கையை காதல் செய்
உலகையே உன் கைக்குள்
அடக்கி விடலாம்
நன்றாக சொன்னீர்கள் சாந்தி அக்கா.. வாழ்க்கையை காதல் செய்தால் எல்லாம் சுபமே..... நன்றிகள்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
நளாயினி அக்கா எங்கே யாருக்காவது தெரியுமா
Reply
shanthy Wrote:காதலை வென்றால் மட்டும் தான்
கவிதை வருமா தோழனே !
வாழ்க்கையை காதல் செய்
உலகையே உன் கைக்குள்
அடக்கி விடலாம்.


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)