Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புரட்சி
#1
ஆகஸ்ட் 13&ந் தேதியை நாக்பூர், கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த பெண்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை, ஒரு அசுரனை வேருடன் அழித்த, தீபாவளித் திருநாள் அது. <img src='http://www.vikatan.com/aval/2004/sep/10092004/p5.jpg' border='0' alt='user posted image'>

பத்து வருடங்களாக இந்தப் பகுதியின் அப்பாவி ஏழைப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்த அக்கு யாதவ் என்ற கொடூரனை, பெண்களே ஒன்று சேர்ந்து சூரசம்ஹாரம் செய்திருக்கிறார்கள்.

நாக்பூர், மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாநகரம். இந்தியாவின் மையமான ஊர். ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளையும் இந்நகரத்தை ஆரஞ்சு நகரம் என்பார்கள். இப்போது ஒரு கொலையால் சிவப்பு நகரமாகி சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

பாலியல் பலாத்காரத் துக்கு எதிராக மாபெரும் புரட்சியே செய்திருக்கும் இந்தப் பெண்களைச் சந்திக்க நாக்பூருக்கு பயணமானோம். <img src='http://www.vikatan.com/aval/2004/sep/10092004/p4.jpg' border='0' alt='user posted image'>
சவீதாஜிதேந்தர் லீலாரகுநாத்


பத்திரிகையாளர்களின் படையெடுப்பு, அரசியல்வாதி களின் அணிவகுப்பு என்று பரபரப்பாக இருக்கிறது நாக்பூரின் கஸ்தூரிபா நகர். எங்கு பார்த்தாலும் அந்த சூரசம்ஹாரம் பற்றிய பேச்சுதான்!

ஊருக்குள் நுழைந்ததுமே அக்கு யாதவ் என்ற அரக்கன் பற்றி விரிவாக சொன்னார் உள்ளூர் பெண்மணி ஒருவர்.

அவனுக்கு 32 வயசுதான் ஆகுது. எங்க ஏரியாக்காரன் தான். கொலை பண்றது, கொள்ளையடிக்கிறது, கற்பழிக்கிறது... இதெல்லாம்தான் அவனுக்கு தொழிலே! அதிலும், பெத்தவங்க கண்ணெதிர்ல இளம்பெண்களை நாசம் செய்யறதுல அவனுக்கு வெறியே உண்டு. <img src='http://www.vikatan.com/aval/2004/sep/10092004/p4a.jpg' border='0' alt='user posted image'>
அஞ்சனா பாய் பிங்கி பகீரதா


அவனோட அராஜகத்துக்கு யாராவது முற்றுப்புள்ளி வைக்க மாட்டாங்களானு கவலையோட நாங்க காத்திருந் தப்ப, கொஞ்ச நாள் முன்னாடி ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளோட தாய் முன்னாடியே பலாத்காரம் பண்ணிட் டான். இனிமேலும் காத்திருக்கக் கூடாதுனு ஊரே முடிவு பண்ணிச்சு. நினைச்சமாதிரியே அவனை வதம் பண்ணிட்டோம்... என்றார், சாதித்த திருப்தியோடு.

ஊர் மக்கள் தனக்கு தேதி குறித்துவிட்டார்கள் என்பதை எப்படியோ அறிந்துகொண்ட அக்கு யாதவ், ஒரு சிறிய வழக்கில் வலியப் போய் சிக்கி, சிறைக்குள் பாதுகாப்பாக இருக்க திட்டமிட்டிருக்கிறான். ஆனால், அந்த வழக்கை ஒட்டி அவன் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட, நீதிபதியின் இருக்கைக்கு அருகிலேயே அவனைக் கொன்றுபோட்டது பெண்கள் கூட்டம்!

இவர்களில் அஞ்சனா பாய், லீலா ரகுநாத், பகீரதா பாய், சவீதா ஜிதேந்தர் மற்றும் பிங்கி என்னும் ஐந்து பெண்களை மட்டும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்ய, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தரப்பும் குரல் கொடுத்தன. தேசிய மகளிர் ஆணையத் தலைவி பூர்ணிமா அத்வானி, ''இது தற்காப்புக்கான தாக்குதல். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இத்தகைய கொலையைச் செய்யலாம் என்று சட்டம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டதோடு, மாலையிட்டு திலகமிட்டு அந்தப் பெண்களை வாழ்த்திவிட்டுப் போனார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையாகிவிடும் என்கிற காரணத்தால் இப்போது அந்த ஐந்து பெண்களும் பெயிலில் விடுவிக்கப் பட்டுள்ளனர். ஐவரில் மூவர் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவர் இருபதுகளில் இருக்கும் இளம்பெண்கள்.

திருவிழாவன்று தெய்வத்தை தரிசிக்க முண்டியடிக்கும் கூட்டத்தைப் போல, இந்த ஐவர் தரிசனத்துக்காக மாலையோடு, வீரமுழக்கமிட்டபடி சாரை சாரையாக நிற்கிறது பெண்கள் கூட்டம். லீலா ரகுநாத் மட்டும் முகம் புதைத்து அழுதுகொண்டே இருந்தார். அவரை நெருங்கி நாம் பேச்சு கொடுக்கவும்,

'எல்லாரும் இப்ப வர்றீங்க. போட்டோ எடுக்கறீங்க. டி.வி&யில போடறீங்க. இவ்ளோ நாள் எங்கய்யா போயிருந்தீங்க? எங்க வீட்டுல பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு, அந்த அரக்கனுக்கு பயந்து அணுஅணுவா செத்துகிட்டிருந்தோமே... அன்னிக்கு உதவுறோம்னு யார் வந்தா? இப்ப எதுக்காக வர்றீங்க? வராதீங்க... போங்க' என்று ஆத்திரத்தோடு வெடித்துக் கதறினார்.

''தம்பி, தப்பா நெனைச்சுக்காதீங்க. அந்தளவுக்கு நாங்க வேதனையை அனுபவிச்சுட்டோம்...'' என்றபடி நம் பக்கம் வந்த மூதாட்டி அஞ்சனா பாய், 'அந்தப் பாவிகிட்ட அவ்ளோ பாடுபட்டுட்டோம். இங்க யாருக்கும் புதுசா கல்யாணம் ஆகக்கூடாது. மறுநாளே வந்து பொண்ணைத் தூக்கிட்டுப் போயிடுவான். எம்மருமகள எவ்வளவு கஷ்டப்பட்டு பொத்தி பொத்தி பாதுகாத்தேன்னு எனக்குத்தான் தெரியும்' என்றபடி முந்தானையை வாயில் புதைத்து கேவினார்.

''போதையில வருவான். ஏதாவது ஒரு பொண்ணுமேல கண்ணு வெச்சுட்டான்னா, அவ்ளோதான். அவன் கூப்பிட்டதும் அடம் பண்ணாம போயிட்டு வரணும். மொரண்டு புடிச்சா அந்தக் குடும்பமே ரத்தக் காயம் படணும். பிளேடு காயம்பட்டு ரத்தம் வழிய வீட்டுக்கு வருவாங்க பொம்பளைப் பிள்ளைங்க. 'ஏண்டா இந்தப் பொம்பள பொறப்பு'னு மனசு வெறுத்துப் போயிடும். எத்தனைப் பொண்ணுங்க தற்கொலைக்கு முயற்சி பண்ணுனது தெரியுமா?'' என்று அஞ்சனா பாய் கண்ணீரோடு சொல்லிமுடிக்க, தொடர்ந்தார் சவீதா...

''அவன் ஜெயிலுக்குப் போன நாட்கள்லதான் நாங்க நிம்மதியா இருந்திருக்கோம். ஆனா, எந்த கேஸானாலும் ஒரு மாசத்துக்குள்ள திரும்பி வந்துடுவான். வந்த உடனே ஒடம்பு திமிர் எடுத்து அலைவான்.

போலீஸ்ல புகார் சொன்னாலும் பலனில்லை. அவனுக்கு சலாம் போட்டுட்டு, அவன் கொடுக்கற காச வாங்கிட்டுப் போயிடும். யாரையும் நம்பாம, நாங்களே அவனை தண்டிக்கணும்னு தீர்மானிச்சோம். போட்டுத் தள்ளிட்டோம்...'' & சொல்லும்போதே ஆத்திரத்தில் அவரது நரம்புகள் புடைக்கிறது.

சோகத்துடன் இருந்த பகீரதா பாய், 'நாங்க அஞ்சு பேர் கஷ்டப்பட்டாலும் இனிமே எங்க ஜனங்க நிம்மதியா தூங்குவாங்க. இந்தச் சின்ன புள்ளயும் இதுல மாட்டிக்கிடுச்சேனுதான் வருத்தமா இருக்கு'' என்று 23 வயது பிங்கியைப் பார்த்துக் கண்கலங்கினார்.

ஆனால், பிங்கிக்கு இதில் வருத்தமெல்லாம் இல்லை. ÔÔஎங்களுக்கு நிம்மதி வேணும். அதான் அவனை கொலை செஞ்சோம். அதுவும் எல்லாருமே சேர்ந்துதான் செஞ்சோம். எத்தனை பேரை ஜெயில்ல அடைக்கிறாங்கனு பார்க்கலாம்ÕÕ என்றார் ஆவேசமாக. ÔÔசட்டத்தைக் கையிலெடுப்பதை ஆதரிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?ÕÕ என்று இவர்களை ஆதரிக்கிற ராஷ்ட்ர சேவிகா சமிதியின் துணைத்தலைவர் பிரமீளா மேடேயிடம் கேட்டோம்...

பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பத்து ஆண்டுகளாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அவன் இத்தனை காலம் தப்பித்திருக்கிறான். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. அந்தச் செயலில் நியாயம் இருப்பதால்தான் இவ்வளவு ஆதரவு குவிகிறது. நாங்களும் ஆதரிக்கிறோம். அக்கு யாதவ்கள் இருந்தால் சட்டத்தைக் கையில் எடுப்பது தவிர்க்க முடியாதது என்றார் பிரமீளா மேடே, ஆக்ரோஷம் குறையாமல்!

அப்பாவிகளின் கோபத்தில் எப்போதுமே ஒரு நியாயம் இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு!

<b>இது தவறான முன்னுதாரணம்</b>

நாக்பூர் நகர கமிஷனராக இருப்பவர் சிவானந்தன், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரிடம் பேசினோம்.

நான் இங்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அக்குயாதவ்மீது அதிகாரப் பூர்வமாக 24 வழக்குகள் இருக்கின்றன. விசாரணையில் மேலும் விவரங்கள் தெரிந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் தரப்பில் நடந்த ஒரே தவறு, மூன்றே போலீஸாரோடு இந்தக் கைதியைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோனதுதான். நானூறு பேர் சூழ்ந்துகொண்ட பிறகு அவர்களால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மற்றபடி, புரட்சி நடந்துவிட்டதாகக் கூறுவதெல்லாம் தவறான முன்னுதாரணமாகி அவரவர் சட்டத்தைக் கையிலெடுப்பதில் கொண்டுபோய் விட்டுவிடும் என்றார்.

VIKATAN.COM
Reply
#2
கமிசனார் கிடக்கிறார் ... அவர் எவ்வளவு வேண்டினாரோ.. போட்டு தள்ளியாச்செல்லோ.. அது போதும்........... கதையை வாசிக்கவே ஒரு பயங்கரமாக இருக்கிறது.... இப்படி பட்டவர்கள் உலகத்தில் இருந்து என்ன பிரயோசனம்... ..

வசி தகவலுக்கு நன்றி
[b][size=18]
Reply
#3
பொறுத்தது போதும் பொங்கிஎளு என்று கிளம்பி விட்டனர். என்றாலும் இதை வீரம் என்று கூற முடியாது
Reply
#4
பட முதல் செய்ய வேண்டியதை பட்டாப் பிறகு செய்திருக்கினம்....எனிப் படாமலும் பாதுகாத்தாச் சரி...ஒரு அசுரனை அழிக்க பல அசுரர்கள் கிளம்புவார்கள்...அதுதான் அசுர குணம்....! என்றாலும் சட்டம் அதுஇது என்று கொண்டு பரீட்சை எழுதிப் பதவிக்கு வாறதுகளைவிட சனத்துக்கு எது அவசியம் எண்டது நல்லா விளங்கிட்டுது...எனிப் பரீட்சையும் தேவையில்ல பதவியும் தேவையில்ல....! வாழ்க தாய்க்குலம்...! என்ன தந்தைக்குலம் இவ்வளவும் நடக்க.... அசுரனை வாழ்த்தி வளர்த்ததோ....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அட... அட... வாழ்க வாழ்க கேக்கவே சந்தோசமாக இருக்கு.. ஆனால் ஒரு கவலை இவ்வளவு நாளும் ஏன் சும்மா விடடு வைத்தார்கள் என்று தான்... எது எப்படியோ... இப்பவாவது முடிச்சார்களே... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)