Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மீண்டும் பறவை காச்சல்?

நைஜீரியாவில் கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சலை உண்டு பண்ணியது ஹெச்.5.என்.1. வகை கிருமிதான் என்று உறுதிசெய்யப்பட்டது
நைஜீரியாவின் பல்வேறு இடங்களில் கோழிகளிடையே பறவைக் காய்ச்சலைத் தோற்றுவித்த்திருப்பது மோசமான ஹெச்.5.என்.1 வகை கிருமியா என்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் முயன்றுவருகிறார்கள்.
நோய் பரவியிருப்பதாக கண்டறிந்ததை அடுத்து இருபத்து நான்கு மணி நேரமும் வேலைசெய்துவருவதாகவும், நோய்கண்ட பறவைகளைக் கொன்று, பண்ணையை வெளியுலகிலிருந்து தனிமைப்படுத்தி வருவதாகவும் நைஜீரிய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்த வடக்கு நைஜீரியாவின் கடுனா அருகேயுள்ள கோழிப்பண்ணையை தாக்கியிருப்பது ஹெச்.5.என்.1 வகை கிருமிதான் என்பதை வெளிநாடுகளில் செய்த பரிசோதனைகளில் நேற்று புதன்கிழமை தெரியவந்தது.
ஆப்பிரிக்காவில் இவ்வகை கிருமி கோழிகளிடையே வந்திருப்பது இதுவே முதல்முறை.
இக்கிருமி 2003ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் தலைதூக்கத் துவங்கியபிறகு பல நாடுகளிலுமாக குறைந்தபட்சம் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
BBC தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நைஜீரியாவில் பறவைக்காய்ச்சல்

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கோழிகளை தாக்கியிருப்பது மனிதர்களையும் தாக்கவல்ல ஹெச்.5.என்.1 வகை கிருமிதான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இவ்வகை கிருமி பரவ ஆரம்பித்திருப்பது இதுவே முதல் முறை.
வைரஸ் கிருமி பறவைகளிடையே இருப்பதாக கண்டுபிக்கப்பட்ட கோழிப் பண்ணை, வெளியுலகிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிருமி தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் கோழிகள் அனைத்தும் தேர்ந்தெடுத்து கொல்லப்படுகின்றன என்று நைஜீரிய அரசு கூறுகிறது.
பறவைக் காய்ச்சல் கிருமி நைஜீரியாவுக்குள் வந்திருக்கக்கூடிய வழிவகைகள் பற்றி அரசு ஆராய்ந்துவருகிறது. சட்டவிரோதமாக கோழிகள் இறக்குமதி ஆவது காரணமாக இருக்கலாமா என்று அரசு சந்தேகிக்கிறது.
நைஜீரியாவில் நோய் பரவ ஆரம்பித்திருப்பது பேராபத்தில் முடியலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
BBC தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நைஜீரியாவில் பறவைக்காய்ச்சல் வந்துள்ள அனைத்துப் பண்ணைகளிலும் தாக்கியிருப்பது எச்.5.என்.1. வகை கிருமிதான்
நைஜீரீயாவில் புதிதாக மூன்று இடங்களில் எச்.5.என்.1. பறவை காய்ச்சல் வைரஸ் கிருமியின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதல்கள் பண்ணைப் பறவைகள் இருக்கும் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
கானோ மாநிலத்தில் இரு இடங்களில் உள்ள பண்ணைகளில் இருந்தும், பிளடோ மாநிலத்தின் ஒரு இடத்தலும் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவிலேயே எச்.5.என்.1 கிருமி முதல் முறையாக நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த புதனன்று வெளிநாட்டில் வாழும் அறிவியல் நிபுணர்கள் இதனை அறிவித்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில், அதிக அளவில் பறவைகளை கொல்வது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பறவைகள் குறிப்பிட்ட இடத்தில் அடைத்துவைக்கப்படுகின்றன.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே பறவைகள் அதிக அளவில் இறந்து வருவதால், வைரஸ் கிருமி பல வாரங்களாகவே நைஜிரியாவில் இருந்து வந்திருக்காலாம் என்று பி பிசியின் நைஜிரியச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
BBC Tamil
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மூன்று ஐரோப்பிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் கிருமி

அன்னப் பறவைகள் சேகரிக்கப்படுகின்றன
மோசமான ஹெச்.5.என்.1. வகை பறவைக்காய்ச்சல் கிருமி தங்கள் நாட்டுக்குள் நுழைந்திருப்பதை மூன்று ஐரோப்பிய நாடுகள் இத்தாலி, கிரேக்கம், பல்கேரியா ஆகியவை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளன.
கிரேக்கத்தின் வடபகுதியில் காட்டு அன்னப்பறவைகளிடையே இக்கிருமி கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் விவசாய அமைச்சு கூறுகிறது.
மத்தியதரைக் கடலிலுள்ள சிசிலி தீவில் அன்னப்பறவைகளிடையே கிருமி கண்டறியப்பட்டதாக இத்தாலிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கேரியாவில், ரொமேனியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் அன்னப்பறவைகளிடம் இந்தக் கிருமி காணப்பட்டதாக ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.
இதனிடையே நைஜீரியாவில் கோழிகளிடையே பறவைக்காய்ய்சல் பரவிய ஒரு இடத்தில் ஆட்கள் பலர் சுகவீனம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், பறவைக்காய்ச்சல் அங்கு மனிதர்களிடம் பரவிருக்கிறதா என்பது பற்றி சோதனைகள் நடத்தப்படுவதாக நைஜீரிய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
BBC தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
தகவலுக்கு நன்றி மதன்
திருப்ப காச்சல் வந்துட்டா அம்மாவை சிக்கின் சமைக்க வேண்டாம் என்று சொல்லணும்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த கிரேக்கம், பல்கேரியா நடவடிக்கை
பறவைக் காய்ச்சலைப் பரப்பும் கிருமியான எச்.5.என்.1. ரக கிருமி தமது நாட்டில் காட்டு அன்னங்களில் காணப்பட்டதையடுத்து கிரேக்கமும் பல்கேரியாவும் பறவைக் காய்சல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.
பல்கேரிய அரசு கருங்கடலுக்குப் பக்கத்திலுள்ள உறைந்துபோன சதுப்பு நிலப்பகுதிகளுக்கு மக்கள் போவதைத் தடைசெய்துள்ளது. அந்தப் பகுதியில் காட்டுப் பறவைகள் அதிகம் புழங்குவதால் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதென்று கூறுகிறது.
கூடவே பல்கேரிய விவசாயிகள் மற்றும் பண்ணைக்காரர்கள் தங்களின் கோழி, வான்கோழி போன்ற சந்தைப் பறவைகளை வெளியே திரியவிடாமல் பண்ணைகளில் அடைத்து வளர்க்கும் படியும் கூறியுள்ளது.
இதேபோன்ற எச்சரிக்கைகள் கிழக்கு கிரேக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள கோழி, வான்கோழிப் பண்ணைகளை அதிகாரிகள் சோதித்து வருகிறார்கள்.
இந்தோனேசியாவில் முன்னர் செய்யப்பட்ட சோதனைகள் அங்கே கடந்த சில நாட்களில் இறந்தவர்களில் இரண்டு பெண்கள் எச்.5.என்.1. ரக பறவைக்காய்ச்சல் கிருமியால் பாதிக்கபட்டிருந்ததாக உறுதியாகியுள்ளது.
BBC தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பிரான்சில் பறவைக் காய்ச்சல் வைரசின் (H5N1) தாக்கத்துக்கு உள்ளாகி இறந்ததாகக் கருத்தப்படும் வாத்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பிரித்தானியா உட்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த மனிதரிலும் தொற்றி மரணம் விளைவிக்க கூடிய புளூ பற்றிய எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன..!
பறவை உணவுகள் உள்ளெடுப்போர் மற்றும் பறவைப் பண்ணைகளில் தொழில்புரிவோர் இது குறித்து அதிகம் கவனம் எடுத்தல் நல்லது..!
http://news.bbc.co.uk/1/hi/uk/4726532.stm

Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பறவை காச்சல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவி இருக்கின்றது. இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகள் தற்போதைக்கு இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கின்றன. அதேபோல் இந்தியாவில் பறவைகாச்சல் தொற்குள்ளான பகுதியில் இருந்து தமிழகத்திற்கு கோழிகளை கொண்டுவருவதும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கு ஐரோப்பாவில் நடவடிக்கை
காட்டுப் பறவைகளில் பறவைக் காய்ச்சல் கிருமித் தொற்று இருப்பதாக தற்போது பிரான்சிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, கொடிய ஹெச்.5.என்.1. வகை கிருமி பரவுவதைத் தடுக்கும் முகமாக மேற்கு ஐரோப்பாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே இந்தியாவின் மஹராஷ்டிர மாநிலத்தில், கடந்த சனிக்கிழமை ஹெச்.5.என்.1. வகை கிருமி பரவியிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு 5 லட்சம் கோழிகள் கொன்றழிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஐந்து லட்சம் கோழிகள் கொல்லப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அண்டை நாடுகள் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி செய்வதற்குத் தடைவிதித்துள்ளன.
BBC tamil
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்தியாவில் கோழி ஏற்றுமதித் துறையில் பெரும் நஷ்டம்

முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் கிருமி கோழிகளிடையே பரவியிருப்பது சென்ற வாரம் தெரியவந்ததை அடுத்து கோழி ஏற்றுமதி தொழில்துறைக்கு நான்கரை கோடி டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தொழில் நடத்துபவர்கள் கூறுகின்றனர்.
மஹராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வந்திருப்பதையடுத்து ஏற்றுமதிகளில் அதிலும் குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதிக்கான கோழி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அனைத்து இந்திய கோழி ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலரான வல்சென் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐரோப்பாவில் பண்ணைக் கோழிகளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்ற பிராஞ்சு மற்றும் நெதர்லாந்து அரசுகளின் வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றிய கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசீலித்துவருகின்றனர்.
தடுப்பூசி போடும் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைப்படுத்த இந்த கூட்டம் பரிந்துரைக்கலாம்.
ஆனால் தடுப்பூசி போட்டாலும் தொற்றுடைய பறவைகள் தொடர்ந்து கிருமியை பரப்பவேசெய்யும் ஆதலால் தடுப்பூசி போடுவது வீண் செலவு என்று கூறி ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற மற்ற நாடுகள் தடுப்பூசி யோசனையை எதிர்க்கின்றன.
BBC tamil
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பறவைக்காய்ச்சல் தொடர்பில் ஆசிய அரசுகள் நடவடிக்கை
ஆசிய அரசாங்கங்கள் பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனால் தற்போது மலேசியாவில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; மலேசியா பறவைக் காய்ச்சலை தடுத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்திருந்ததது.
2004 ம் ஆண்டு தாய்லாந்து நாட்டை ஒட்டி அதிக மக்கள் தொகை இல்லாத ஒரு இடத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பாதிப்பைத் தவிர வேறு ஏதும் பெரும் விளைவு இல்லை என அந்த நாடு தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகில் உள்ள ஒரு பண்ணையில் 40 கோழிகளுக்கு அபாயகரமான எச்.ஐந்து.என்.ஒன்று வகை வைரஸ் தாக்கியுள்ளதாக உறுதி படுத்தியுள்ளது.
அண்டை நாடான சிங்கபூர் மலேசியாவின் தாக்கப்பட்ட பகுதியிலிருந்து அனைத்து பண்ணை பறவை இறக்குமதிகளை தடை செய்யதுள்ளது.
இந்தியாவில் இந்த வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்ட பிறகு மேற்கு மஹாராஷ்டிராவில் பணியாளர்கள் 50 லட்சத்திற்க்கும் அதிகமான கோழிகளை கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அங்கு பறவை காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் அதிகாரிகள் இதுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப் பட்டதாக உறுதியான தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வைரஸில் மாற்றம் ஏற்பட்டு ,ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அது லட்சக்கணக்கானவர்களை தாக்கும் கொள்ளை நோயாக மாறக்கூடும் என அமரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நோயை கட்டுக்குள் வைப்பது என்கின்ற கொள்கையை கடைப்பிடிப்பது, இந்த நோயின் பின்விளைவுகளை சமாளிக்க தேவையான கால அவகாசத்தை மட்டுமே பெறும் என்று அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரியின் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் 170 பேர்களுக்கு இந்த பறவை காய்ச்சல் தொற்றியுள்ளது எனவும், 90 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இது வரை இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவியுள்ளதாக உறுதியான செய்திகள் இல்லை.
இதற்கிடையே இந்தியாவில் பழங்குடிகள் வாழும் மஹாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் அதிகாரிகள் குறைந்தது 7 நோயாளிகளை, குறிப்பாக குழந்தைகளை, அவர்களுக்கு இருமல், காய்ச்சல் ஏற்பட்ட பிறகு முழுவதுமாக தனிமைப்படுத்தியிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
BBC tamil
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
பறவைக்காய்ச்சலை நினைத்தால் பயம்மா இருக்கு..
ஆனால்..பறவைகாய்ச்சலுக்கு எத்தனை பேர் பயப்பிடுகிறார்கள் என்று கொலண்ட் ல ஒரு கணிப்பீடு செய்தார்களாம்..அதில் 5% ஆனவர்கள் தான் பயப்பிடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளதாம். மற்றவர்கள் வந்தால்..வா..வரா விட்டால் போ என்று அக்கறை இல்லாமல் இருக்கிறார்களாம்..  hock:

Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
இந்தியாவில் பறவைகாய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சோதனைக்குட்படுத்தப்பட்ட 95 பேரில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது.
நன்றி NTT
இந்தோனேஷியாவில் மேலும் ஒருவர் பறவைக் காய்ச்சலுக்கு பலி
பறவைக் காய்ச்சலுக்கு காரணமான ஹெச்.5.என்.1 வைரஸினால் மற்றுமொருவர் இறந்ததாக இந்தோனேஷிய அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
தலைநகர் ஜகார்த்தாவைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவரே இவ்வாறு இறந்ததாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் நடத்தப்படும் சோதனைகளில் இது உறுதிசெய்யப்பட்டால், அந்த நாட்டில் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த 20ஆவது நபர் இவராவார்.
அண்டை நாடான மலேசியாவில் இவ்வருடத்தில் முதல் தடவையாக அதிகாரிகளால் செவ்வாயன்று பறவைகளில் இந்த வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இந்த காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் அவதியுறும் 7 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளதா என்று சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை கோழிகளில் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் மஹராஷ்ர மாநிலத்தில் குறைந்தது 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தற்போது நைஜீரியாவில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மேற்கு ஆப்பிரிக்கா பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் எச்சரித்துள்ளது.
நைஜீரிய அரசின் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், கோழிகளின் விற்பனை மற்றும் அவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது தொடர்ந்தால், அதன் மூலம் இந்த வைரஸ் பரவும் அபாயம் உண்டு என்றும், உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் தலைமை கால்நடை மருத்துவர் ஜோசப் டொமன்ஞ் கூறுகிறார்.
நன்றி பிபிசி தமிழ்
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
மிருகங்களுக்கும் பறவைக்காச்சல் நோய் பரவுவதாக விஞ்ஞான உலகம் தெரிவித்திருக்கின்றது, நேற்று முந்தினம் ஜேர்மனி நாட்டில் ஒரு பண்ணை வீட்டில் பூனை ஒன்று பறவைக்காச்சல் (H1N5வைரஸ்) பீடிக்கப்பட்டு இறந்துள்ளது,, இதன் மூலம் உலகம் பாரிய ஒரு அழிவை சந்திக்கப்போகிறது என பலர் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர், காரணம் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு அந்த வைரஸ் பரப்பப்படும் சாத்தியம் பெரிதாக இருக்கவில்லை, ஆனால் பறவைகள் மூலம் வீட்டு பிராணிகளின் மூலம் மனிதர்களை தாக்கப்போகின்றது என்ற உண்மை தற்பொழுது தெரியவந்துள்ளது,,
ஜேர்மனியில் ஒரு அறிவித்தல் விடப்பட்டிருக்கின்றது, வீட்டுபிராணிகளை (பூனை, நாய்) வீட்டிற்குள் வைத்திருக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது,,
அது சரி நம்ம கள பூனைக்குட்டி வீட்டுக்குள்ளே இருங்க,, உள்ளதுக்கேயே உங்களுக்கும் பறவைகளுக்கும் அப்படி இப்படி,,,, :oops:

Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
சும்மா இருப்பா!!
பிரான்சில் பறவைக் காய்ச்சல் எண்டவுடனே எங்கள் வீட்டில் சிக்கினுத் தடை விழுகின்றது. இப்ப விலங்கும் என்றால் பாடு கோவிந்தா தான்!! :oops: :oops:
[size=14] ' '