Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெஞ்சத்தை வருடும் ...
#1
போ த பீப்பிள் (For the People) என்ற பெயரில் வெளிவந்த மலையாளப் படத்தை போ ஸ்ருடன்ற்ஸ் (Four Students) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அதனால் படத்தினைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. ஆனால் அதிலுள்ள பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

குறிப்பாக 'லஜ்ஜாவதியே எனை அசத்துற ரதியே' என்று தொடங்கும் பாடல் மனதை வருடிச் செல்கிறது. எமது பால்யப்பருவ ஞாபகங்களை மீண்டும் கொண்டுவருகிறது. கவிஞரின் அனுபவ ரீதியான யதார்த்தமான கவிவரிகளும், இசையமைப்பாளரின் பொருத்தமான இசையும், பாடகரின் வித்தியாசமான குரலும் (இசையமைப்பாளரே பாடியுள்ளார்) நெஞ்சை நிறைக்கின்றன. கவிவரிகள் நாங்கள் சிறுவயதில் செய்த குறும்புகளை மீண்டும் மனக்கண்ணில் கொண்டுவந்து அதனை நினைத்து ஏங்கவைக்கின்றன. ஏன் நாங்கள் வளர்ந்தோம். அப்படியே கள்ளங்கபடமில்லாத மழலைகளாகவே வாழ்ந்து மடிந்திருக்கக்கூடாது என்று எண்ண வைக்கிறது. போலியும் பகட்டும் வஞ்சமும் நிறைந்த இன்றைய நாகரிக உலகில் எங்கும் பிணக்குகள் தான். ஆனால் அந்த மழலைகள் மட்டும் பட்டாம்புூச்சிகளாச் சிறகடிக்கின்றன.

சிறகடிக்க வைத்த பாடலின் இரண்டு சரணங்களையும் தந்திருக்கிறேன். (வழக்கம் போலவே இதிலும் ஆங்கில வார்த்தைகள் கலந்திருக்கின்றன. ஆங்கிலப் பாடல்களை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், தமிழ்ப்பாடல்களில் கலந்துவருகின்ற ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது)

“புூவரசம் இலையிலே பீப்பீ செய்து ஊதினோம்.
பள்ளிக்கூடப் பாடம் மறந்து பட்டாம்புூச்சி தேடினோம்.
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம்.
பனங்காயின் வண்டியில் பசுமாட்டுத் தொழுவத்தைச்
சுற்றி வந்து பம்பாய்க்குப் போனதாகச் சொல்லினோம்
அடடா வசந்தம். அதுதான் வசந்தம்.
மீண்டும் அந்தக் காலம் வந்து
மழலையாக மாற்றுமா?
……..

காவேரி நதியிலே து}ண்டில்கள் போட்டதும்
கண்ணே உந்தன் து}ண்டில் முள்ளில் குட்டித்தவளை விழுந்ததும்
கைக்கொட்டிக் கேலிசெய்த ஞாபகங்கள் மறக்குமா?
கட்டவண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்துவிட்டு ராஜராஜன் என்றதும்
அடடா வசந்தம் அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும்
காதல் மறந்து போகுமா?



உங்களுக்கும் ஞாபகங்கள் இருக்கும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
--
--
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)