Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
றோவின் தயவில் தேசத் துரோகக் கும்பல் ஒன்றின் உதயம்...!
#21
இக்கட்டுரையானது இன்று தினக்குரல் ஞாயிறு மலரில் வெளிவந்தது. இக்கள பக்கத்துடன் சம்பந்தப்பட்ட கட்டுரை என்பதால் இங்கு தருகிறேன்.

<b>கருணாவின் கட்சியில் பின்னணி யார்?

அரசியலில் படுதோல்வியடைந்த குழுக்கள் சில கருணாவின் போர்வையில் அரசியலுக்குள் வரலாமென முயற்சி

மட்டக்களப்பு- பொலநறுவை எல்லையில் கருணா குழுவினரை தேடிýயழிக்கும் நடவடிýக்கையை விடுதலைப்புலிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களில் இப்பகுதியில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கருணா குழுவின் மார்க்கன் குழு உறுப்பினர்கள் மீது நாகஸ்தன்னையில் இடம்பெற்ற தாக்குதல் குறிப்பிடத்தக்கது. பொலிஸ் காவலரனுக்கு அருகில் வீடொன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் கருணா குழுவினரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. முக்கியமான பலர் கொல்லப்பட்டு விட்ட நிலையில் எஞ்சியிருக்கும் கருணா குழுவினர் ஏனைய தமிழ்க் குழுக்களுடன் இணைந்து செயற்படும் சூýழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை விட மட்டு.

பொலநறுவை எல்லையில் தமிழ் இளைஞர்களுக்குப் பணத்தாசை மற்றும் பொருளாசை காட்டிý தங்களுடன் இணைக்கும் முயற்சியிலும் கருணா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கருணா குழுவுக்கு ஏனைய தமிழ்க் குழுக்கள் உதவுவது போன்று சில முஸ்லிம் கட்சிகளும் உதவுவதாக புலிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டிýயுள்ளனர். மட்டு. பொலநறுவை எல்லைக் கிராமங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குள் இருந்தும் கருணா குழுவினர் செயற்படுவதை புலிகள் அறிந்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவே இவர்களை படை முகாம்களில் தங்கவைத்து தங்களுக்கெதிராக செயற்பட வைப்பதாக புலிகள் குற்றஞ்சாட்டிý வந்த நிலையில், கருணா குழுவினர் தனித்துச் செயற்படுவது போன்றதோர் தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காக படை முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு அருகில் வீடுகளிலிருந்து செயற்பட கருணா குழுவுக்கு படையினர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

நாகஸ்தன்னை பகுதியிலும் இவ்வாறு பொலிஸ் காவல்நிலைகளுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த மார்க்கன் குழு மீதே திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. மார்க்கன் குழு தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்த தங்களின் விசேட படையணி திடPர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட ஐவர் படுகாயமடைந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், மேற்படிý வீட்டிýல் கருணா குழுவுடன் தங்கியிருந்த ஒருவரே (கருணா குழுவைச் சேர்ந்தவர்) இந்தத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவவில் கருணா குழுவினர் தங்கியிருந்த வீடொன்றில் இடம்பெற்றது போன்ற சம்பவமே இங்கும் இடம்பெற்றதாக பொலிஸார் கூýறினர். கருணா குழுவுடனிருந்த ஒருவரே அதிகாலை வேளை இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்று தான் கருணாவின் சகோதரர் ரெஜி மீதான தாக்குதலும் நடைபெற்றதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு கூýறியது.

கருணா குழுவினரின் அனைத்து நடவடிýக்கைகளும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியும். எவரெவர் எங்கெங்கிருக்கின்றனர், எங்கெல்லாம் செல்கின்றனர், இரவு நேரங்களில் எங்கு தங்குகின்றனர், ஒவ்வொரு இடத்திலும் எத்தனை பேருள்ளனரென்ற விபரங்கள் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியும். கொட்டாவ வீட்டிýல் 9 பேர் தங்கியிருந்த போதும் எட்டுப் பேரின் சடலங்களேயிருந்தன. ரெஜியுடன் மேலும் மூýவர் சென்ற போதிலும் மூýவரின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டன. நாகஸ்தன்னையில் எண்மர் வீடொன்றில் இருந்த போதிலும் இருவர் கொல்லப்பட ஐவரே படுகாயமடைந்துள்ளரென பொலிஸ் விசாரணைகள் மூýலம் தெரியவந்துள்ளது.

மேற்படிý சம்பவங்களிலெல்லாம் கருணா குழுவினருடன் இருந்த ஒருவரே தாக்குதல்களை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் கூýறுகின்றனர். இவ்வாறான தாக்குதல்களால் அச்சமடைந்து கருணா குழுவைச் சேர்ந்த சிலர் தப்பிச் சென்றுமுள்ளனர். பலர் கொல்லப்பட, வேறு சிலர் தப்பிவிட எஞ்சியுள்ளவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்த நிலையில் கருணா குழுவை ஒரு இராணுவச் சக்தியாக சித்திரிக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

புலிகளுக்கெதிராக கருணா திடPர் கிளர்ச்சி செய்த போது கருணாவின் பின்னால் ஆயிரக்கணக்கான போராளிகள் நிற்பதாக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் ஏன் அங்கு நிற்கின்றனரென்ற உண்மை கருணாவுக்குத் தெரிந்திருந்தது. அதேநேரம் புலிகள் மேற்கொண்ட அதிரடிý நடவடிýக்கை மூýலம் கருணா மட்டக்களப்பிலிருந்து தப்பி விட அவருடன் சென்றோர் மிகச் சிலரே. எனினும், அவர்களைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிராக திடPர் தாக்குதல்களை நடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிýருந்த வேளையில் புலிகளின் அதிரடிý நடவடிýக்கைகள் மூýலம் கருணா குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்பட இராணுவ புலனாய்வுப் பிரிவின் திட்டங்கள் தவிடுபொடிýயாகின.

கருணா குழுவை ஒரு இராணுவச் சக்தியாக காட்ட முயன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு தோல்வியடைந்த அதேநேரம், அவரையொரு அரசியல் சக்தியாக்கும் நடவடிýக்கைகளும் ஆரம்பமாயிருந்தன. இதில் முக்கிய பங்காற்றியவர் ஈ.பி.டிý.பி.யின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவே. தற்போதும் கருணாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள டக்ளஸ{க்கு இலங்கை அரசின் ப10ரண ஆதரவு கிடைப்பது போல் இந்திய அரசின் ப10ரண ஆதரவுமுள்ளது.

கருணா குழுவை இராணுவ மயப்படுத்த இலங்கை அரசு, இராணுவ புலனாய்வுப் பிரிவினூடாக முயற்சிகளை மேற்கொண்ட அதேநேரம், கருணா குழுவை அரசியல் மயப்படுத்த இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. தனித்து கருணாவை அரசியல் மயப்படுத்தாது, தனது பிடிýக்குள் உள்ளவர்கள் மூýலம் கருணாவை தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்தன. இதற்காக கருணாவுடன் தொடர்ந்தும் டக்ளஸ் தொடர்புகளை மேற்கொண்டு வந்தார். இவ்வேளையில் கருணாவின் புலி எதிர்ப்புப் பிரசாரங்களுக்கு லண்டன் ரி.பி.சி. வானொலியும் ஹொங்கொங்கிலிருந்து செயற்படும் "ஏசியன் ரிபிய10ன் என்ற இணையத் தளமும் ப10ரணமாக உதவின.

லண்டன் ரி.பி.சி. வானொலியின் அமைப்பாளர் ராம்ராஜ், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை (ஈ.என்.டிý.எல்.எவ்.) சேர்ந்தவர். 'ஏசியன் ரிபிய10ன்" இணையத் தளத்தினூடாக புலி எதிர்ப்பு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுபவர் கே.ரி.ராஜசிங்கம் என்பவர். ஆரம்பத்தில் கருணாவின் பேட்டிýயை பி.பி.சி. வானொலிக்கும் ஏற்பாடு செய்தவர் டக்ளஸ் தேவானந்தாவே. இவ்வாறு கருணாவை அரசியல்மயப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில், இவர்கள் கருணா புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அடிýக்கடிý பிரசாரம் செய்து வந்தனர்.

இந்தச் சூýழ்நிலையில் தான் கருணா, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளதாகக் கடந்த வாரம் 'ஏசியன் ரிபிய10ன்" இணையத்தளம் முதலில் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் இது குறித்த அறிக்கை கொழும்புப் பத்திரிகைகளுக்கு நேரடிýயாகக் கையளிக்கப்பட்டது. ஆனாலும், இக்கட்சியை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய முடிýயாத நிலையுள்ளது.

அதேநேரம், கருணா கட்சியின் செயலாளராக ஞா.இ.ஞானராஜா என்பவர் கையெழுத்திட்டிýருந்தார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஈ.என்.டிý.எல்.எவ்.வின் தலைவர் ஞா.இ.ஞானசேகரத்தின் (பரந்தன் ராஜன்) உடன்பிறந்த சகோதரரான (அண்ணன்) ஞானராஜாவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர். புலிகளுக்கெதிராக கிளர்ச்சி செய்யும் வரை ஈ.என்.டிý.எல்.எவ். கருணாவின் விரோதிக் கட்சியாயிருந்தது. ஞானராஜாவை கருணா நேரில் பார்த்திருப்பாரோ தெரியாது. ஆனால், அவர் கருணா கட்சியின் செயலாளர் எனத் தெரிந்த போது இக்கட்சியை உருவாக்குவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவான 'றோ" எவ்வளவு தூரம் பின்னணியில் செயல்படுகிறதென்பது தெளிவா கியுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியான ஈ.பி.ஆர்.எல்.எவ். விலிருந்தும் புளொட் அமைப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டோர் இணைந்து உருவானதே ஈ.என்.டிý.எல்.எவ். இதன் உருவாக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் முக்கிய காரணமாயிருந்தார். 1987 இல் இலங்கை-இந்திய உடன்பாட்டையடுத்து இந்திய இராணுவம் இலங்கையில் தரையிறங்கிய போது, புலிகளை சமாளிக்க வலுமிக்க தமிழ் அமைப்புகளை உருவாக்க வேண்டிýய தேவை இந்திய அரசுக்கு ஏற்பட்டிýருந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் வடக்கு, கிழக்கில் முதன் முதலில் இந்திய இராணுவம் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், இந்த முயற்சி பின்னர் தோல்வியடைந்தது.

ஈ.என்.டிý.எல்.எவ்.வின் கட்சிக் கொடிýயில் மூýன்று நட்சத்திரங்களிலிருந்ததால் அதனை அப்போது 'திறீஸ்ரார்" என்றே மக்கள் அழைத்தனர். அத்துடன் இக்கட்சியின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) இருந்தார். இந்த அமைப்பில் முக்கியமானவர்களெல்லாம் புளொட் அமைப்பிலிருந்து விலகியவர்களே. தற்போது இவர்களெல்லாம் கருணாவின் கட்சியைச் செயற்பட வைப்பதற்காக இலங்கை வந்துள்ளனர்.

அத்துடன் கருணாவின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளும் ஈ.என்.டிý.எல்.எவ்.வும் இணைந்து பொது வேலைத் திட்டத்திற்காக தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூýலம் கருணாவை இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிடிýயில் வைத்துக் கொண்டு கருணாவின் கட்சியின் பெயரில் அல்லது தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஈ.என்.டிý.எல்.எவ்.வே இயங்கப் போகின்றதென்பது வெளிப்படையான உண்மை.

இதற்காக ஈ.என்.டிý.எல்.எவ்.வின் புளொட் மாமா (87 இல் மட்டக்களப்பு புளொட் இராணுவப் பொறுப்பாளர் பின் ஈ.என்.டிý.எல்.எவ்.வில் இணைந்தவர்) மனோ மாஸ்ரர் அல்லது மனோவாத்தி (கிளிநொச்சி மாவட்ட முன்னாள் புளொட் பொறுப்பாளர். பின் ஈ.என்.டிý.எல்.எவ். தேசிய அமைப்பாளர்) ஆகியோரும் கொழும்பு வந்துள்ளனர். அத்துடன் தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணியின் அமைப்பாளர் பா.இராஜரெத்தினம், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை அமைச்சரும் (ஈ.என்.டிý.எல்.எவ்.) வந்துள்ளார்.

இதைவிட அண்மைக் காலமாக கருணாவினது பேட்டிýகளையும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சச்சு மாஸ்ரரின் (மாறன்) பேட்டிýகளையும் ஒலிபரப்பிய ரி.பி.சி. வானொலியின் பொறுப்பாளரும், ஈ.என்.டிý.எல்.எவ்.வின் சர்வதேச இணைப்பாளருமான ராம்ராஜும் கருணாவின் கட்சியை இயக்குவதில் முக்கிய நபர்களாகச் செயற்படுகின்றனர்.

இந்திய இராணுவம் இலங்கையிலிருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈ.என்.டிý.எல்.எவ். செய்த படுகொலைகளும் அடாவடிýத்தனங்களும் எண்ணிலடங்காதவை. இந்திய இராணுவம் இலங்கை யிலிருந்து வெளியேற முன்னரே இவர்கள் இந்தியா சென்று விட்டனர். மிக நீண்ட காலத்தின் பின் தற்போது இவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பி கருணா குழுவை செயற்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கில் கருணாவை ஒரு இராணுவ சக்தியாக உருவாக்க முயன்று அது தோல்வியடைந்த நிலையில் கருணா குழு என்ற போர்வையில் வேறு குழுக்கள் இங்கு அரசியல் சக்தியாகச் செயற்பட முனைந்துள்ளன. இதற்கு இந்திய அரசினதும் அதன் உளவுப் பிரிவான "றோ'வினதும் பின்னணி வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக இலங்கைப் படையினருக்கான இராணுவ உதவிகளை வெகுவாக அதிகரித்து, இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடொன்றில் இந்தியா கைச்சாத்திட இருக்கையில் கருணாவின் கட்சி என்ற பெயரில் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் புலிகளுக்கு எதிரான ஈ.பி.டிý.பி. போன்ற அமைப்புகளையும் ஒன்றிணைத்துச் செயற்பட வைக்கும் முயற்சியையும் இந்தியா ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இன்று புலிகளுக்கெதிரான தீவிர பிரசாரங்களை வெளிநாடுகளில் மேற் கொண்டுவரும் தமிழர் விடுதலைக் கூýட்டணியின் வீ.ஆனந்தசங்கரிக்கும் இந்தக் கூýட்டுகளுடன் நெருங்கிய தொடர்புகளிருப்பது தெரியவந்துள்ளது. ஈ.என்.டிý.எல்.எவ்.விற்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையே நீண்ட காலமாகவே நெருங்கிய தொடர்புகள் இருந்து வரும் நிலையில் இந்தப் புதிய கூýட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போன்றதொரு நீண்ட கடிýதமொன்றை, புலிகளின் தலைவருக்கு அனுப்புவது போல் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ளார்.

அதில், கருணாவுடனான முரண்பாட்டை தவிர்த்து அவருடன் இணைந்து செயற்படுமாறும் ஆலோசனை கூýறியுள்ளார். கருணா குழு புதிய கட்சியை உருவாக்கியுள்ள நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கெதிரான வர்களெல்லோரும் ஒரே நேர்கோட்டிýல் ஒன்றாக இணைந்துள்ளனர்.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை அமைப்பொன்றை, போர் நடைபெற்ற காலத்தில் எதுவுமே செய்ய முடிýயாத சக்திகளெல்லாம் சமாதான காலத்தில் ஒன்றிணைந்து அந்த விடுதலை அமைப்பை சிதறடிýக்க மீண்டும் புறப்பட்டுள்ளன. ஆனால்......


--------------------------------------------------------------------------------</b>
" "
Reply
#22
"கருணாவின் பெயரில்" நடைபெறும் இக்கூட்டுக் கட்சி நாடகத்தில் "றோவினால்" திரட்டப்படும் துரோகக் கும்பல்கள் அணியில் "ஈ.பி.டி.பி", "ஈ.என்.டி.எல்.எப்", "வரதராசப் பெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப்", "சங்கர் ராஜியின் ஈரோஸ்" உடன் "கருணாவையும்" சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்குவதென்றும், ஆனால் தனித்தனி கட்சிகள் ஆக இயங்குவதாகவும்,, அப்போது தான் தமிழர்களில் பல கட்சிகள் "புலிகளுக்கு" எதிராக இருப்பதாக வெளியுலகத்திற்கு காட்டப்படலாமாம்.

<b>இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கும்பல்களின் கூட்டில் "புளொட்" சேர்த்துக் கொள்ளப்படவில்லையாம். அன்றிலிருந்து இன்றுவரை "இந்தியாவிற்கு" "புளொட்" மீது சந்தேகக் கண்தானாம். மற்றும் இக்கூட்டில் "ஈ.என்.டி.எல்.எப்" இணைக்கப்பட்டது "புளொட்" அமைப்பினருக்குப் பிடிக்கவில்லையாம். "புளொட்" அமைப்பானது வெகுவிரைவில் கடந்த காலங்களில் தேசிய நீரோட்டத்தில் இணைந்த இயக்கங்களைப் போல இணையலாமென ஒரு நம்பத்தகுந்த வட்டாரம் அறியத்தந்தது. இதற்கு சில சாதகமான சமிக்கைகளும் தெரியத்தான் செய்கின்றன. ..

1) யுத்த நிறுத்த காலத்திற்குப் பின் சில காலங்களாக நடைபெற்ற களையெடுப்புக்களில் எந்த ஒரு "புளுட்" உறுப்பினர் கூட தாக்கப்படவில்லை.
2) "புளொட்டின்" அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கடந்த காலங்களைப் போலல்லாது "விடுதலைப் புலிகள்" விடயத்தில் மிகமிக மென்மையான போக்கை கடைப்பிடிப்பதை பார்க்கக்கூடியதாகவுள்ளது.
3) புலப்பெயர் நாடுகளில் துரோகிகளினால் நடாத்தப்படும் "தேனீ", "மீன்பாடும்",.. பொஇஒன்ற இணையத்தளங்களில் "புளொட்" அமைப்பிற்கு எதிரான சில கருத்துக்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன்.
4) ........... இப்படிச் சில அறிகுறிகள் தெரிகின்றன. அப்படி இருக்கவும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் "புளொட்" உறுப்பினர்கள் இந்த அரசியல் நகர்வுகள் விளங்காமலோ அல்லது அதற்கு எதிராகவோ செயஏபடுவதை பார்க்கக் கூடியதாகவுள்ளது.

எது எப்படி இருப்பினும் தமிழ்த் தேசியத்திற்காக காலத்தின் தேவை உணர்ந்து "புளொட்" நீரோட்டத்தில் இணையுமாயின்,அதை ஒவ்வொரு ஈழத் தமிழ் மகனும் மகிழ்சியுடன் ஏற்றுக்கொள்வான்.</b>
" "
Reply
#23
À¼í¸û ±øÄ¡õ ¦À⾡츢¡¡?????
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#24
துரோகக் கட்சிகள் ஒன்று சேர்ந்துவிட்டிருப்பதும் நன்மைக்குத்தான். கொஞ்ச நாளில் யார் பெரியாள் என்று தங்களுக்குள்ளேயே சண்டைபிடிப்பார்கர்கள்.
<b> . .</b>
Reply
#25
இன்று இரவு மட்டுநகரில் "கருணாவின்" கட்சியின் துண்டுப்பிரசுரங்களை இலங்கை இராணுவத்தினர் விநியோகித்ததை அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் மட்டுநகரிலிருந்து செயற்படும் கூலிக் குழுக்களான "ஈ.பி.டி.பி", "ராசிக்", "மோகன்" போன்றனவற்றிலிருந்த பெரும்பாலானவர்கள் "கருணாவின்" அணி என்ற பெயரில் இலங்கை புலனாய்வுத் துறையால் இணைக்கப் பட்டிருக்குதாம். ஆனால் இக்கும்பல்களை விட்டு தப்பியோடும் தொகை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாம்.
"
"
Reply
#26
"லங்கா அக்கடமிக்" எனும் அமெரிக்காவிலிருந்து சிங்களவர்களினால் நடாத்தப்படும் இணையத்தளத்தில் அண்மைக்காலங்களாக யாழ்நகரிலிருந்து "கே.எஸ்.ராஜ்குமார்" என்பவர் "புலிகளுக்குள் பிரட்சனை" என்றும் "கருணாவையும் ஒரு பாரிய சக்தி" போன்றும் எழுதி வருவதாக காட்டப்படுகிறது. நானறிந்த வரை மேற்குறிப்பிட்ட பெயரில் ஊடகவியலாளர் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை தமிழ்ப் பெயரில் எழுதினால் தான் பிறர் நம்புவார்களென நினக்கிறார்களோ தெரியவில்லை? இவரின் செய்திகளுக்கு லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்த் தேசியத் துரோக வானொலி போன்றன முக்கியத்துவம் கொடுக்கின்றன.
" "
Reply
#27
உது அந்த கிருஷ்ணசிங்கம் ராஜ்குமாராயிருக்கும் எண்டு நினைக்கிறன். அவர்தான் ஆள் எண்டால் என்னால நிறைய விசயங்கள் அவரைப்பற்றி இங்கே தரமுடியும். அவர்தான் எண்டு யாராவது உறுதிப்படுத்த முடியுமெண்டால் அவரைப்பற்றிய துணுக்கொன்று:

இவர் ஒருமுறை கின்னஸ் சாதனையொண்டு செய்ய வெளிக்கிட்டு தோத்தவர். 24மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவதுதான் அந்த சாதனையின் நோக்கம். ஆனா 16ஆவது மணித்தியாலம் சுறுண்டு விழுந்‌திட்டார் அத்தோட சாதனை காலி. தன்னை எல்லாரும் கவனிக்கவேணும் தன்னைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டதுக்காகத்தான் எதையும் செய்பவர். உந்த ஆசையில ஒண்டுதான் இப்ப அக்கடமிக்கிற்கு கண்டபடி எழுதிறாரோ என்னவோ.
Reply
#28
ThamilMahan Wrote:அவரைப்பற்றிய துணுக்கொன்று:

இவர் ஒருமுறை கின்னஸ் சாதனையொண்டு செய்ய வெளிக்கிட்டு தோத்தவர். 24மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவதுதான் அந்த சாதனையின் நோக்கம். ஆனா 16ஆவது மணித்தியாலம் சுறுண்டு விழுந்‌திட்டார் அத்தோட சாதனை காலி.

எனக்கு ஆளைத் தெரியாது... ஆனால் அவர் இந்த முயற்ச்சி எடுத்ததில் என்ன தப்பு?????
Reply
#29
Quote:"கருணாவின் பெயரில்" நடைபெறும் இக்கூட்டுக் கட்சி நாடகத்தில் "றோவினால்" திரட்டப்படும் துரோகக் கும்பல்கள் அணியில் "ஈ.பி.டி.பி", "ஈ.என்.டி.எல்.எப்", "வரதராசப் பெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப்", "சங்கர் ராஜியின் ஈரோஸ்" உடன் "கருணாவையும்" சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்குவதென்றும், ஆனால் தனித்தனி கட்சிகள் ஆக இயங்குவதாகவும்,, அப்போது தான் தமிழர்களில் பல கட்சிகள் "புலிகளுக்கு" எதிராக இருப்பதாக வெளியுலகத்திற்கு காட்டப்படலாமாம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கும்பல்களின் கூட்டில் "புளொட்" சேர்த்துக் கொள்ளப்படவில்லையாம். அன்றிலிருந்து இன்றுவரை "இந்தியாவிற்கு" "புளொட்" மீது சந்தேகக் கண்தானாம். மற்றும் இக்கூட்டில் "ஈ.என்.டி.எல்.எப்" இணைக்கப்பட்டது "புளொட்" அமைப்பினருக்குப் பிடிக்கவில்லையாம். "புளொட்" அமைப்பானது வெகுவிரைவில் கடந்த காலங்களில் தேசிய நீரோட்டத்தில் இணைந்த இயக்கங்களைப் போல இணையலாமென ஒரு நம்பத்தகுந்த வட்டாரம் அறியத்தந்தது. இதற்கு சில சாதகமான சமிக்கைகளும் தெரியத்தான் செய்கின்றன. ..

1) யுத்த நிறுத்த காலத்திற்குப் பின் சில காலங்களாக நடைபெற்ற களையெடுப்புக்களில் எந்த ஒரு "புளுட்" உறுப்பினர் கூட தாக்கப்படவில்லை.
2) "புளொட்டின்" அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கடந்த காலங்களைப் போலல்லாது "விடுதலைப் புலிகள்" விடயத்தில் மிகமிக மென்மையான போக்கை கடைப்பிடிப்பதை பார்க்கக்கூடியதாகவுள்ளது.
3) புலப்பெயர் நாடுகளில் துரோகிகளினால் நடாத்தப்படும் "தேனீ", "மீன்பாடும்",.. பொஇஒன்ற இணையத்தளங்களில் "புளொட்" அமைப்பிற்கு எதிரான சில கருத்துக்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன்.
4) ........... இப்படிச் சில அறிகுறிகள் தெரிகின்றன. அப்படி இருக்கவும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் "புளொட்" உறுப்பினர்கள் இந்த அரசியல் நகர்வுகள் விளங்காமலோ அல்லது அதற்கு எதிராகவோ செயஏபடுவதை பார்க்கக் கூடியதாகவுள்ளது.

எது எப்படி இருப்பினும் தமிழ்த் தேசியத்திற்காக காலத்தின் தேவை உணர்ந்து "புளொட்" நீரோட்டத்தில் இணையுமாயின்,அதை ஒவ்வொரு ஈழத் தமிழ் மகனும் மகிழ்சியுடன் ஏற்றுக்கொள்வான்.
_________________
"நக்கிற நாய்களிருக்கும் மட்டும் செக்கு நினைக்குமாம் தான்தான் சிவலிங்கமென்று"
தமது உறுப்பினரின் கொலைக்கு கருணாவை சாடுகிறார்; சித்தார்த்தன்.
ஜ சனிக்கிழமைஇ 23 ஒக்ரேபர் 2004 ஸ ஜ முல்லை ஸ
கடந்த வருடகால யுத்த நிறுத்தத்தின்போது கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர்கள் திட்டமிட்டபடி கருணாவினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் புளொட் அமைப்பின் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் வானொலி ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் சித்தார்த்தன். புலிகள் எமது பிரநிதிகள் எவரையும் கொலை செய்யவில்லை என்றும் இரண்டு உறுப்பினர்கள் கடந்த இரண்டு வருடத்தில் கருணாவினால் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டதாகவும் இதனை புளொட் அமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் கண்டிப்பதாகவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் கொலைகள் அனைத்தையும் பல காலத்திற்கு முதலே நிறுத்தி விட்டதாகவும் புளொட் அமைப்புகள் சில உறுப்பினர்கள் இராணுவத்தின் ஒற்றர்களாக செயற்படுவதாகவும் இதனால் சில சிக்கல்களை புளொட் அமைப்பு எதிர் நோக்குவதாகவும் மேலும் தெரிவித்தார்.

யுத்த நிறுத்த காலத்தில் அதிகம் பாதிப்பிற்கு உட்படாத இயக்கம் புனொட் என்பது
" "
Reply
#30
இன்றைய ஞாயிறு "தினக்குரல்" வாரமலரில் பாதுகாப்பு நிலமை தொடர்பான கட்டுரை........


<b>கருணாவை வைத்து காய்நகர்த்தல்

மீண்டும் நேரடிýயாக 'றோ"வின் தலையீடு?

மட்டக்களப்பில் கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அடுத்தடுத்து படுகொலைகள் தொடர்கின்றன. கடந்த வாரம் மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியில் நான்கு கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு சார்பில் போட்டிýயிட்டு வெற்றி பெற்ற கிங்ஸ்லி இராஜநாயகத்தின் கொலையும் அடங்கும். இந்தக் கொலையுடன் மக்கள் மத்தியில் பீதியும் அச்சமும் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக மட்டக்களப்பில் கருணாவின் கட்சி என்ற போர்வையில் சில நடவடிýக்கைகள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருணாவின் கட்சியின் பெயரால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரே சீருடையில் இந்தப் பிரசுரத்தை விநியோகித்துள்ளனர். பொதுமக்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாத போதிலும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் பல்வேறு ஐயங்களும் இதன் மூýலம் நீங்கியுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு நகருக்குள்ளும் புறநகர் பகுதியிலும், இராணுவ முகாம்களுக்கு அருகிலும் பொலிஸ் காவல் நிலைகளுக்கு அருகிலும் பிரதான வீதிகளில் கருணாவை கடுமையாகச் சாடிý பெயின்ற்களால் சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனை தினமும் பெருமளவு மக்கள் பார்வையிடுகின்ற அதேநேரம், படைமுகாம்களுக்கும் பொலிஸ் காவல் நிலைகளுக்கும் அருகில், பிரதான வீதிகளில் ஆற அமர இருந்து எவ்வாறு கருணா குழுவுக்கு எதிராக பெயின்ற்களால் சுலோகங்களை எழுத முடிýந்தது என்ற கேள்வியும் பிறக்கிறது.

மட்டக்களப்பு நகரிலும் புறநகர்ப் பகுதியிலும் மட்டுமல்லாது தூர இடங்களிலும் ஒரே நாளில் ஒரு இரவில் வீதிகளில், அதுவும் படைத் தரப்பு நிலைகளுக்கு அருகில் கருணாவுக்கு எதிராக எழுதப்பட்ட சுலோகங்களுக்கு பின்னணியில் படையினர் இருப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். தொட்டிýலையும் ஆட்டிýப் பிள்ளையையும் கிள்ளிவிடுவது போன்ற செயல்களில் இவர்கள் இறங்கியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

கருணாவின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், வரிக்கு வரி எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையுமுள்ளது. இந்தத் துண்டுப் பிரசுரத்தை நகரின் பல்வேறு பகுதிகளிலும் படையினரே சீருடையில் விநியோகித்ததால் இந்தப் பிரசுரத்தை அவர்களே எழுதி அச்சிட்டிýருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஏற்கனவே ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டிý.எல்.எவ்.) யுடன் இணைந்து கருணா தனது கட்சியை அமைத்துள்ளதுடன் இவ்விரு கட்சிகளும் இணைந்து தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி என்ற கூýட்டணி ஒன்றையும் அமைத்துள்ளன. ஆனாலும் கருணா குழுவைப் போன்றே ஈ.என்.டிý.எல்.எவ்.விலும் விரல் விட்டு எண்ணக் கூýடிýயவர்களே அங்கம் வகிப்பதால் இக்கட்சிகளின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே செயற்படவுள்ளதாக ஊகங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரை காலமும் இலங்கைப் பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடிýத்து வந்த இந்தியா, இலங்கை- இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டிýன் மூýலம் அரசியல் ரீதியாக மட்டுமன்றி இராணுவ ரீதியிலும் இலங்கை விவகாரங்களில் நேரடிýயாகத் தலையிடவுள்ளது. இதற்கு முன்னோடிýயாகவே 1980 களின் நடுப்பகுதியில் இந்திய உளவுத்துறையின் (றோ) ப10ரண ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஈ.என்.டிý.எல்.எவ். கருணா குழுவுடன் சேர்ந்துள்ளது.

இலங்கை- இந்திய உடன்பாட்டுடன் இந்தியப் படைகள் இலங்கை வந்த போது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வையும் ஈ.என்.டிý.எல்.எவ்.பையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டது போன்று, இலங்கை- இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுடன் கருணா குழுவையும் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் புலிகளுக்கெதிராகப் பயன்படுத்த "றோ' மீண்டும் முனைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தியப் படை இலங்கைக்கு வந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் ஈ.என்.டிý.எல்.எவ்.வும் இந்தியப் படையுடன் வடக்கு, கிழக்கிற்குள் நுழைந்தன. மக்களை அச்சுறுத்தும் விதத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். மக்களை அச்சுறுத்தும் விதத்தில் இவர்களது செயற்பாடு அமைந்தது. அதுபோன்றே தற்போது மட்டக்களப்பிலும் அடுத்தடுத்து புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மட்டக்களப்பு கல்வியங்காட்டுப் பகுதியில் தமிழ் தேசியக் கூýட்டமைப்பின் முக்கியஸ்தர் கிங்ஸ்லி இராஜநாயகம் சுட்டுக் கொல்லப்பட்டார். கருணா குழுவே இவரைக் கொலை செய்ததாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மட்டக்களப்பில் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு கட்டமே கிங்ஸ்லி இராஜநாயகத்தின் கொலையாகவுமிருக்கலாமெனக் கருதப்படுகிறது.

ஆனாலும், மட்டக்களப்பில் ஏதாவது கொலைகள் நடைபெற்றால் அதற்கான பழி உடனடிýயாகவே விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டு விடுகிறது. கடந்த வாரம் புலிகளுக்கு நெருங்கியவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட போதும் அப்பழியையும் புலிகள் மீது படைத்தரப்பு சுமத்தியது. ஆனாலும், தேச விரோதிகளாலே இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூýறி அவர்களைப் புலிகள் நாட்டுப்பற்றாளர்களாகவும் அறிவித்தனர்.

இதேநேரம், புதிய கட்சி ஆரம்பிப்பதற்கும் கருணாவுக்கும் அவ்வளவு தொடர்பு இல்லையென்றும் றோ மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கருணாவைப் பயன்படுத்தி இக்கட்சியை ஆரம்பித்து அதற்குள் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் ஊடுருவ வைத்துள்ளதாகவும் கூýறப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக பெரும் சவால் விடுத்த கருணாவால் ஏன் தனித்து கட்சி அமைக்க முடிýயாத நிலை ஏற்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.

கருணாவின் முக்கிய சகாக்களெல்லோரும் கொல்லப்பட எஞ்சியிருக்கும் அவரது குழுவை, இராணுவப் புலனாய்வுப் பிரிவே தனது கட்டுப்பாட்டிýல் வைத்து இயக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கருணாவின் பெயரைப் பயன்படுத்தி புலிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அதேநேரம் கருணா குழுவின் கட்சியின் பெயரிலும் விடுதலைப்புலிகள் என்று வர வேண்டுமென்பதும் இவர்களது திட்டமாகும். கருணா தொடர்ந்தும் கொழும்பில் படை முகாமொன்றினுள் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எல்லாமே தலை கீழாகி விடுமென்று இவர்களது எண்ணம்.

அதேநேரம், கருணாவால் இனி ஒரு போதும் தனித்துச் செயற்பட முடிýயாதென்பதும் அனைவரும் அறிந்தது. இதனால் தான் கருணாவைத் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் கொண்டு வருவதற்காக அவரது கட்சியில் ஈ.என்.டிý.எல்.எவ்.வை சேர்ந்தவர்களையும் புகுத்தி அதேநேரம் கருணாவின் கட்சியுடன் ஈ.என்.டிý.எல்.எவ்.வை இணைத்து தமிழீழ மக்கள் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதனையும் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் வைத்திருக்கத் தீர்மானித்துள்ளனர்.

கருணா இன்று ஒரு கைதியைப் போல் படைமுகாம் ஒன்றில், வைக்கப்பட்டிýருப்பதால் அவரால் எதுவுமே செய்ய முடிýயாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெயரையும், அவர் அமைத்ததாகத் கூýறப்படும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தி இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதுமான நடவடிýக்கையில் இறங்குவார்களென்றும் எதிர்பார்க்கப்படும் அதேநேரம் இவர்களது அனைத்துச் செயற்பாடும், கிழக்கில் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதுடன் அங்கு பிரதேசவாதத்தையும் கிளறி விடுவதுமாயிருக்கப் போகிறது.

ஆனாலும், வடபகுதித் தலைமை கிழக்கை அடக்கியாள முற்படுகிறது. வடபகுதித் தலைமையை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடிýயாதெனக் கூýறியே கருணா விடுதலைப் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஆனால் கருணா இன்று அமைத்துள்ள கட்சியின் செயலாளர் வடபகுதியைச் சேர்ந்தவர். அவர் கூýட்டுச் சேர்ந்துள்ள ஈ.என்.டிý.எல்.எவ்.வும் வடபகுதித் தலைமையையே கொண்டுள்ளதால் பிரிவதற்கு மட்டும் பிரதேச வாதம், கூýட்டுச் சேர்வதற்கு எல்லாம் மறந்து விட்டதா அல்லது பின்னணியில் இருப்பவர்களின் விருப்புக்காக இவரும் அவர்களுடன் சேர்ந்து விட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆரம்பத்தில் கருணா புரட்சி செய்த போது, இந்தியாவின் பின்னணி குறித்து அவ்வளவாக ஊகங்கள் எழாவிட்டாலும் தற்போதைய கருணாவின் கட்சியின் பின்னாலும் அவரது கட்சியுடன் கூýட்டுச் சேர்ந்தவர்களின் பின்னாலும் றோ இருப்பதாகக் கூýறப்படுவதால் கருணாவின் கிளர்ச்சியின் பின்னணியிலும் றோ இருந்திருக்கலாமென்ற ஊகங்கள் எழுகின்றன.

அதேநேரம் கருணா மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கருணாவின் பேட்டிýகளை தமிழ் ஒலிபரப்புக் கூýட்டுத்தாபனம் (ரி.பி.சி.) லண்டனிலிருந்து அடிýக்கடிý ஒலிபரப்பியது. அண்மையிலும் கட்சி அமைக்கப் போவதாக அவர் கூýறியதை ஒலிபரப்பியது. ஆனால், கருணா புதிய கட்சியை அமைத்து விட்டதாகக் கூýறியபின், இதுவரை கருணாவின் பேட்டிý ரி.பி.சி.யில் ஒலிபரப்பாகவில்லை.

ரி.பி.சி. வானொலியை லண்டனிலிருந்து இயக்கும் ராம்ராஜ், ஈ.என்.டிý.எல்.எவ். வின் சர்வதேச அமைப்பாளர். இவரே கருணாவைப் பேட்டிý கண்டு ரி.பி.சி.யில் ஒலிபரப்பி வந்தார். ஆனால், ஈ.என்.டிýல்.எல்.எவ். உடன் கருணா கூýட்டுச் சேர்ந்த பின் அவரது பேட்டிý ரி.பி.சி.யில் ஒலிபரப்பாகாததும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கையை விட்டு தப்பிச் சென்று எங்காவது ஒரு நாட்டிýல் தஞ்சமடைவது தான் கருணாவின் நோக்கமாயிருப்பதாக ஆரம்பத்தில் கூýறப்பட்டது. ஆனாலும், அதற்கு அவருக்கு இடமளிக்கப்படவில்லை.

கருணாவை வைத்துக் கொண்டுதான் கருணாவின் பெயரில் புலிகளுக்கெதிராக எதனையும் செய்ய முடிýயுமென்பது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நோக்கம். அதனால் அவரை விட்டுவிட்டால் எதுவுமே செய்ய முடிýயாது என்பதும் அவர்கள் அறிந்த விடயம். இதனாலேயே அவரை இங்கு வைத்துக் கொண்டு, அவரது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்தது, அவரது பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்து அதனையும் தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்து கிழக்கில் புலிகளுக்கெதிரான நடவடிýக்கைகள் மூýலம் அங்கு தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும்.

இந்தப் பின்னணியில் இவர்களுடன் 'றோ"வும் சேர்ந்துள்ளதால் வடக்கு - கிழக்கைப் பிரித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தும் நடவடிýக்கைகள் இனி முனைப்படைந்துவிடும், இதற்கான வசதி வாய்ப்புகளை இலங்கை அரசு ஏற்படுத்திவரும் சூýழ்நிலையில் கருணாவின் கட்சியின் பெயரால் இராணுவத்தினரே துண்டுப் பிரசுரங்களை அச்சடிýத்து அவர்களே அவற்றை மக்களுக்கும் விநியோகித்து வருகின்றனர்.

ராஜீவின் கொலையின் பின்னர் இலங்கை விவகாரத்தில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிýத்து வந்த இந்தியா, தற்போது இலங்கைச் சமாதான முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையிலிருக்கையில் அதனை நீக்கி மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு உதவி செய்யாது இலங்கைப் படையினருக்கு முற்று முழுதாகப் போர்த்தளப்பாடங்கள் அனைத்தையும் வழங்கும் விதத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டிýல் கைச்சாத்திடவுள்ளமை அவர்களது நோக்கத்தை நன்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

நிலைமைகள் இவ்வாறிருக்கையில் கருணாவுக்கு இனி கிழக்கில் இடமில்லை என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றுள்ளன. ஏற்கனவே கிழக்கை தமிழர்களிடமிருந்து பறிப்பதற்கான குடிýயேற்றத் திட்டங்கள் வேகமாக அமுல்படுத்தப்பட்டு தமிழர்களின் தாயகப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகையில் கருணாவின் செயற்பாடுகள், மட்டக்களப்பிலும் தங்கள் இருப்பைக் கேள்விக் குறியாக்கி விடுமென்பதை தமிழ் மக்கள் நன்குணர்ந்துள்ளனர்.

பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும் சொந்த இனத்தைக் காட்டிýக் கொடுத்து சுகபோகம் தேட பலர் முனைந்துள்ளதை மட்டக்களப்பு மக்கள் நன்கறிவர். வடக்கு - கிழக்கு நிரந்தர இணைப்பிலேயே கிழக்கு மக்களின் தாயகப் பிரதேசங்கள் உறுதிப்படுத்தப்பட்டிýருக்குமென்பதையும் அவர்கள் நன்குணர்வர். தமிழ் மக்களின் பலத்தின் அடிýப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு ஓடோடிý வந்தது. பேச்சுக்களும் நடைபெற்று பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தரப்பு எப்படிýப் பேரம் பேசுகின்றதென்பதையும் அந்தப் பேச்சுக்களில் நேரில் கலந்துகொண்டு நன்கறிந்த பின்பும், வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தது போல் செயற்பட்டு எல்லாவற்றையும் போட்டுடைத்து விட்டு கிழக்கு மக்களை மீண்டும் ஆரம்பத்திற்குக் கொண்டு போகும் முயற்சியில் கருணா ஈடுபட்டுள்ளதை அந்த மக்கள் நன்கு புரிந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.</b>
" "
Reply
#31
"எடுப்பார் கைப்பிள்ளை" கருணா தற்போது இலங்கை புலணாய்வுத் துறையினரால், இந்திய றோவிடம் கையளிக்கப்பட்டு, குடும்பத்துடன் இந்திய தலைநகர் டில்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கொழும்புச் செய்தியொன்று தெரிவிக்கிறது. பாதுகாப்புக்காகவும், துரோகக் கும்பல்களின் கூட்டை தமது கையில் வைத்திருக்கவும் இந்திய றோ விரும்புகிறதாம். இனி கறுணாவின் நடமாட்டம் வரதராஜப்பெருமாளின் நடமாட்டம் போல மர்மமாகவே இனி இருக்கப் போகிறது.

இத்துரோகக் கும்பல்களில் இந்தியாவின் நாட்டமானது, புதிய அரசு பதவியேற்றப்பட்ட பின் இந்திய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் முன்னால் இலங்கக்கான இந்தியத் தூதுவருமான "டிக்சிற்" இனாலேயே மேற்கொள்ளப் படுகிறதாம்.

இந்த டிக்சிற் என்பவரே இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கும், அதன் பின் இந்திய இராணுவம் எமது பகுதிகளுக்கு வந்து இரத்த வெறியாடியதற்கும், இனி செய்யப் போகும் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் மட்டுமல்லாமல் 87ல் துரோகக் கும்பல்கள் "ஈ.என்.டி.எல்.எப்", "ஈ.பி.டி.பி" தோற்றத்திற்கும் காரண கர்த்தாவாவார்.
" "
Reply
#32
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

என்ர சோகத்தை கேட்பாரில்லையோஓ????????உந்த "ஈ.என்.டி.எல்.எப்" இருந்து எனக்கே தெரியாமல் என்னோடு சேர்த்ததென்ட நாயளுக்கு, தமிழும் எழுதத் தெரியாது!!! இனயத்தளமொன்டு தொடங்கிறமென்டு காசைப் பறிச்சாங்கள்!! தொடங்கினதிலும் என்னவெளுதுவதென்று தெரியவில்லை!! நாயள் தமிழ்நாட்டிலை "அண்ணாநகர்", "வடபழனி" .. போன்ற இடங்களில் களவெடுத்ததுகளை கொண்டு வந்து எழுதச் சொன்னால்??

ஐயோ அய்யய்யோ அடிச்சுக் கொண்டுவந்த காசையெல்லாம்ம்ம்ம் ... ம்ம்ம்ம்!!!!!!!!

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)