Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலஸ்தீன அதிபர் யசீர் அரபாத் கோமாவில்...!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40467000/jpg/_40467863_arafat_ap203body.jpg' border='0' alt='user posted image'>

bbc.com

பலஸ்தீன அதிபர் யசீர் அரபாத் இனந்தெரியாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டு சுயநினைவிழந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது...!

யசீர் அரபாத்துக்கு வயது 75 என்பதும் இவர் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக இஸ்ரேலுக்கு எதிராக போராடி வந்த பலஸ்தீன விடுதலை இயக்கத் (PLO) தலைவராக பல காலம் மக்களுக்காய் வாழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது...!

-------------------------------------

<b>Arafat in coma at Paris hospital</b>

Palestinians are nervously waiting for news from Paris
Palestinian officials say Yasser Arafat is in a coma at the intensive care unit of the Paris hospital where he is being treated for an unexplained illness.

bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
-சோகமான தகவல்

சென்ற நு}ற்றாண்டில் மனிதப் படுகொலையின் அவலத்தைப் பதிவாக்கிய சோக வரலாறையுடையது யுூத இனம். ஆனால் சென்ற நு}ற்றாண்டின் கடைசியிலும் இந்த நு}ற்றாண்டின் தொடக்கத்திலும் பாலஸ்தீனத்தின் அவலத்தைத் தொடர்பவர்களான வரலாற்றின் சோகப் பதிவையும் இவர்கள் பெற்றுள்ளதானது நகை முரணா?

-மனித வாழ்வில் அனுபவப்பாடமென்பது, தான் பெற்ற துன்பியலை வேறொன்றுக்குப் புகட்டுவதுதானோ?

-வார்த்தை ஜாலங்களை நம்பி ஏமாந்த தலைவராக மிக வேதனையான நிலையில அரபாத் கவலைக்கிடமாக உள்ளார்.
-இவரைச் சொல்லி இதே பாடத்தை நாம் பெறாதிருக்க எமக்கு மட்டுமல்ல உலகிற்கும் ஒருபாடத்தைத் தந்துள்ளார்.

இந்நிலையிலாவது ஐ நா -வும், உலகும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முயலுமா?

எம் வாழ்வு கேள்விகளும் அதைத் தேடும் விடைகளுமானதுதானே!
-முகிலன்
Reply
#3
பாலஸ்தீன அதிபர் யசீர் அரபாத் அவர்கள் வெகுவிரைவில் குணமடைந்து மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என நம்புவோம்.
<b>
?
- . - .</b>
Reply
#4
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

உந்தாளும் உலகத்தை நம்பி முழு முட்டாளானதுதான் கண்ட மிச்சம். கொண்டுபோய் கூட்டுக்குள்ளே அடைத்து வைத்திருந்துவிட்டுட்டு மேலே போகேக்குள்ளே அனுப்பியிருக்கிறாங்கள்.

உந்தாள் போகேக்குள்ளேயும் எமக்கென்ன உலகத்திற்கே "நம்ப நட நம்பி நடவாதே" என பல பாடங்களைச் சொல்லியல்லோ செல்லுது.

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#5
கறுணா Wrote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

உந்தாளும் உலகத்தை நம்பி முழு முட்டாளானதுதான் கண்ட மிச்சம். கொண்டுபோய் கூட்டுக்குள்ளே அடைத்து வைத்திருந்துவிட்டுட்டு மேலே போகேக்குள்ளே அனுப்பியிருக்கிறாங்கள்.

உந்தாள் போகேக்குள்ளேயும் எமக்கென்ன உலகத்திற்கே "நம்ப நட நம்பி நடவாதே" என பல பாடங்களைச் சொல்லியல்லோ செல்லுது.

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
தன்னைத் திருத்தினால் உலகம் தானாய் திருந்தும்
Reply
#6
<b>தொடர்ந்தும் கோமாவில் அராபத் : நிலைமை கவலைக்கிடம்</b>

பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் (வயது 75) கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இஸ்ரேலிய அரசால் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அராபதின் உடல் நிலை மோசமடைந்தையடுத்து ஜோர்டான் வழியாக அவர் பிரான்ஸ் கொண்டு செல்லப்பட்டார்.

பாரிசில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு லுகேமியா அல்லது புற்று நோய் இருக்கலாம் என்று கருதப்பட்டு அதற்கான உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந் நிலையில் அவரது உடல் நிலை நேற்று படுமோசமடைந்தது. அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். அடுத்தடுத்து மாரடைப்புகளும் ஏற்பட்டதால், அவரது நிலைமை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.

இந் நிலையில் அராபத் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய டிவி நேற்று செய்தி வெளியிட்டு புரளியைப் பரப்பியது. பின்னர் அச் செய்தி திரும்பப் பெறப்பட்டது.

இப்போதுள்ள நிலையில் அராபத் பிழைப்பது கடினமே என பாரிஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் இறந்தால் அவரது உடலை காஸா பகுதியில் தான் அடக்கம் செய்ய அனுமதிப்போம், ஜெருசலேமில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.

ஆனால், தன்னை ஜெருசலேமில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என அராபத் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடக்கத்தது.

இந்த இடத்தை மௌன்ட் கோவில் என யூதர்களும், ஹராம்ஏஷெரீப் என இஸ்லாமியர்களும் அழைக்கின்றனர். இந்த இடத்துக்கு இருவருமே உரிமை கோரி வருகின்றனர்.

இந் நிலையில் அராபத்தின் உடல் நிலை மிகவும் மோசமாகி வருவதால், அவரது இறந்து உடல் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிய வாய்ப்புள்ளது. இதையடுத்து தனது பாதுகாப்பை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)