Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கார்த்திகைப் புூ புூத்திடும் நாள்
#1
[size=18]கார்த்திகைப் புூ புூத்திடும் நாள்

<b>--புதுவை இரத்தினதுரை--</b>

எழுதும் வரிகளே உருகிக் கசியும்
கவிதை இவர்.
அடையாளமற்றிருந்த இனமொன்றின்
முகவரி இவர்.
விதி வலியதல்ல
வலியதே விதியாகிறது என
எழுதிய புதுவிதியிவர்.
பிறப்புக்கு இறப்பால் அர்த்தம் சொல்லி
சிறப்புற்ற சீவன்முத்தர்கள்.
தலை சாய்த்து வளைந்தாடுவதே
வாழ்வெனக் கருதும் நாணற்புற்களிடையே
நிமிர்ந்தெழும் வழியுணர்த்திய நிர்மலர்கள்.
எப்படியென்றும்
எங்கணம் சாத்தியமானதென்றும் அறிய
நாளைய ஆய்வுக்காரர்களுக்காக
நடப்பட்டுள்ள கல்வெட்டுக்கள்
நேற்று இருந்ததெனவும்
இடையில் இல்லாதழிந்ததெனவும்
மீண்டும் இன்று முளைத்தெழுந்ததெனவும்
சொல்லப்படும் இனமானத்தினதும்
வீரத்தினதும் சொந்தக்காரர்கள்.
குச்சுக்குடிசைகளின் கூரைமேற் சுடர்ந்த
தாமிர கலசங்கள்.
அறியப்பட்டனவாகவும்
அதிகம் அறியப்படாதனவாகவும்
கல்லறை கிடக்கும் காலச்சாட்சிகள்.
வீரத்தின் மணிமுடி தரித்து
ஒரு காலம் இப்படியும் இருந்தோமெனச் சொல்லி
புதைக்கப்பட்ட காலப்பெட்டகங்கள்
ஈழத்தமிழருக்கு எழுப்பம் அருளிய
தேவப் பிறவிகள்
படைகொண்ட பரம்பரையென
மீண்டும் நிறுவிய மகுடர்.
சிதையுண்டு சிதிலமாகிய தேசிய கோபுரத்தை
புனரமைத்து வர்ணம் புூசியோர்.
இவனால்இதுமுடியுமெனக் கணித்து
தலைவனுக்கு இடது வலது ஆனோர்.
சாவு வாழ்வின் முடிவல்ல
தொடக்கமுமாகலாம்எனச்சொல்லி
வாழ்வுக்குப் புதிதான வழிகாட்டிகள்.
வருடமொரு கவிதையால்
இவர்களை வரையமுடியாது.
கார்த்திகை மாதத்தில் புூப்பதால்
மற்றவைகளிலிருந்து மாறுபட்டு
அதிசயமாய் விளைவதால்
கானகத்தில்கரைந்துறைவதால்
கழுத்தில் நஞ்சணிவதால்
மஞ்சளும்சிவப்புமாய் மலர்வதால்
கார்த்திகைப் புூவே
மாவீரருக்குக் கனகச்சிதமானது.
இவரே கார்த்திகைப் புூ
மாவீரர் நாள்
கார்த்திகைப் பூ புூத்திடும் நாள்.

<b>நன்றி: </b>ஈழநாதம் (27-11-2004)
<b>கணனித் தட்டச்சு :</b> திரு (ரஷ்யா)
Reply
#2
கார்த்திகை பூக்கு அருமையான விளக்கம் இக்கவித்தையில் ஒலிக்கிறது. இதனை இங்கு வழங்கிய திருவுக்கு நன்றிகளும் தொடர்ந்து வழங்க வாழ்த்துகளும்.
[b][size=18]
Reply
#3
நன்றிகள், திரு,
புதுவையாரின் புதுமையான கவிதைகளை தரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)