Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்த் தேசியம்
#1
வணக்கம்...

இங்கு தேசியம் என்றால் என்ன என்கிற கேள்வியும் அது சார்ந்து தேசியத்துக் ஆதரவாய் செயற்படுதல் என்றால் என்ன என்கிற கேள்வியும் எழுந்தது. எனவே முழுமையாக அதற்கு விடையளிக்க முடியாவிட்டாலும் பின்வரும் கட்டுரை உதவியாக அமையும் என்று நம்புகிறேன். வாசித்துப் பயன் பெறுக:

<b>எஸ்.பொவின் தமிழ்த்தேசியம்</b>
<b>Badri Seshadri,
Chennai, Tamil Nadu, May 2004</b>

ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.

என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன? <b>'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம்.</b>
<b>அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். </b>

அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது.

இந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஈழத்தமிழர் நிகழ்த்தும் விடுதலைப் போருடன் இணைக்கப் பட்டதினால், பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று. ஓர் இனம் தன் அடையாளத்தினை எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ அதுதான் அந்த இனத்தின் தேசியம்.

ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது.

எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.

* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.

* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.

* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.

* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது.

* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.

* தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]

* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.

* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார்.

* தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.

நன்றி: தமிழ்த்தேசியம்.அமை
தொடுப்பு: http://www.tamilnation.org/diaspora/articles/espo.htm


Reply
#2
இணைப்புக்கு நன்றி -!

வாசித்தாலும் - விளங்கி கொள்ளமாட்டார்கள் என்பதல்ல- விளங்கி கொள்ள மறுப்பார்கள்- ! 8)
-!
!
Reply
#3
நல்லதொரு தகவலை நல்ல நேரத்தில் இணைத்து இருக்கிறீர்கள் இளைஞன்.
நான் தமிழன் என்று கத்துவதில் இல்லை தேசியம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் ஆசிரியார்.
இணைப்புக்கு நன்றி

Reply
#4
இதை தான் பலர் பலதரம் சொல்லீட்டு இருக்கிறம். மணி கட்டின மாடு சொன்னா தான் கேட்குமாக்கும்...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
இணைப்புக்கு நன்றி
Reply
#6
இணைப்புக்கு நன்றி இளைஞன்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)