Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியபெருங்கடலில்இன்றுகாலை 6.40 மணிக்குமிகபயங்கரநிலநடுக்கம்
#1
இந்திய பெருங் கடலில் இன்று அதிகாலை 6.40 மணிக்கு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமித்ரா தீவு அருகில் தோன்றிய இந்த நில நடுக்கம் ரிக்டேர் ஸ்கேல் அளவுப்படி 8.1 அளவுக்கு பதிவானது.

கடலுக்கு அடியில் தோன்றிய நிலநடுக்கம் மிக பெரிய அதிர்வை தென்ஆசியா பகுதியில் ஏற்படுத்தியது. இதன் விளைவாக இந்தியா-இலங்கை, இந்தோனேசியா உள்பட பல நாடுகளில் பேரழிவு ஏற்பட்டது. தென் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பேரழிவு ஏற்பட்டது.

காலை 6.35 மணிக்கு சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கின. மக்கள் அலறியடித்து ஓடினார்கள். 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னை மக்கள் இடையே பீதி ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அதிர்வுகள் உண்டாகின. இதனால் இந்திய பெருங்கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடல் தண்ணீர் சுமார் 50 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை கொந்தளித்தது.

தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரிமுனை வரை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் ஊருக்குள் கடல் தண்ணீர் புகுந்தது. சென்னை, விசாகப்பட்டினம், நெல்லூர், தூத்துக்குடி துறைமுகங்களில் கடல் தண்ணீர் பல அடி உயரத்துக்கு எழுந்தது.

சென்னையில் கல்பாக்கம், எண்ணூர், தண்டையார் பேட்டை, திருவொற்றிïர், காசிமேடு, துறைமுகம் , மெரீனா கடற்கரை, சாந்தோம், பட்டினம்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மிïர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங் கேணி, கோவளம், பழவேற்காடு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு கடுமையாக இருந்தது. கடல் தண்ணீர் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊருக்குள் புகுந்தது.

இதனால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடல் தண்ணீரில் பல்லாயிரக்கணக்கான குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டன.

மெரீனா கடற்கரையில் சீறி பாய்ந்த கடல் தண்ணீரை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உயிர் பிழைக்க மெயின்ரோட்டுக்கு ஓடினார்கள். கடல் தண்ணீர் அவர்களை துரத்தி மூழ்கடித்தது.

மெரீனா கடல் பகுதியில் பொங்கிய கடலின் சீற்றம் காரணமாக கடல் தண்ணீர் மெயின் ரோடு வரை வந்து விட்டது. மெரீனா கடற்கரையே காணாமல் போய் விட்டது போல கடல் தண்ணீர் நிறைந்திருந்தது.

எம்.ஜி.ஆர். அண்ணா சமாதிகளும் கடல்தண்ணீரில் மிதந்தன. அயோத்தியாகுப்பம் பகுதியில் இருந்த குடிசைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.பல குடிசைகள் கடல் தண்ணீர் புகுந்த வேகத்தில் காணாமல் போய் விட்டன.

பட்டினப்பாக்கம், எலியாட்ஸ் கடற்கரை, வெட்டு வாங்கேணி, உள்ளிட்ட கடலோர ஊர்கள் அனைத்திலும் கடல் தண்ணீர் புகுந்தது. கடல் சீற்றத்தின் இந்த எதிர்பாராத தாக்குதலால் கடலோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள் நிலை குலைந்து போனார்கள்.

கடல் தண்ணீர் சீற்றத்துக்கு குடிசைவாசிகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஏராள மான குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானவர்களை கடல் தண்ணீர் அடித்துச் சென்று விட்டது.

கடலோர பகுதி மக்களின் உடைமைகள் அனைத்தும் கடல் தண்ணீரோடு தண்ணீராக போய் விட்டது. அதிகாலை நேரத்தில் குடிசைக்குள் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் நூற்றுக்கணக்கானவர்கள் கடல் தண்ணீரில் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

கடல் அலைகள் ஆர்ப்பரித்து வந்ததால் கூவம் ஆற்றுக்குள் கடல்தண்ணீர் வெள்ளம்போல பெருக் கெடுத்து ஓடி வந்தது. இதனால் சென்னை நகருக்குள் பல மைல் தூரத்துக்கு கடல் தண்ணீர் புகுந்தது.

இதனால் சென்னைக்குள் கடல்தண்ணீர் மளமள வென்று வருவதாக மக்கள் மத்தியில் பீதி பரவியது. இதையடுத்து கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு குடும்பம், குடும்பமாக வெளியேறினார்கள்.

பல இடங்களில் மக்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு உயிர்ப்பிழைக்க ஓடிய காட்சி பரிதாபமாக இருந்தது.

ஈஞ்சம்பாக்கம் அருகில் உள்ள வெட்டுவாங்கேணியில் கடலோரத்தில் சுமார் 5 ஆயிரம்குடிசைகள் இருந்தன. அந்த குடிசைகள் அனைத்தையும் கடல்தண்ணீர் அடித்துச் சென்றது.

கடல் அலை ஒரு பனை உயரத்துக்கு தண்ணீர் சிறி எழுந்து வந்ததால் 5 ஆயிரம் குடிசைகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

சென்னையில் கடலோர பகுதிகளில் இருந்த குடிசைகளும் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அந்த குடிசைகளில் வாழ்ந்த ஏழை எளியவர்கள் எல்லாரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை. சாவு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. 10 மணிக்கு கிடைத்த முதல் தகவல்படி கடல் தண்ணீரில் மூழ்கி சுமார் 100 பேர் வரை பலியாகி விட்டது தெரிந்துள்ளது.

கடலோர பகுதிகளில் காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடி அலைவது பரிதாபமாக இருந்தது. குடிசை வாழ்மக்கள் கண்ணீரும் கம்ப லையுமாக அங்கும் இங்கும் ஓடினார்கள்.

கடலோர குடிசை பகுதிகளில் மக்களின் அழுகை குரல் கேட்ட வண்ணம் உள்ளது. முழுமையான தண்ணீர் வடிந்த பிறகே இந்த நில நடுக்கம் எத்தனை உயிர்களை சாவு கொண்டது என்பது தெரிய வரும்.

கடலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித் துள்ளது. புதுச்சேரி, வேளாங் கண்ணி, நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சென்னையில் சாவு எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு பல்லாயிணரக்கில் இருக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கம், பையனூர், திருபோரூர், ஆலத்தூர், நாவலூர் ஆகிய ஊர்களில் கடல் தண்ணீர் புகுந்து மக்கள் வீட்டை விட்டு காலி செய்து விட்டனர். அங்கு கடல் தண்ணீர் மீண்டும் மீண்டும் கொந்தளித்து ஊருக்குள் வந்தபடி இருந்தது.

கோவளத்தில் ஊரே காலியாகி விட்டது. மக்கள் மூட்டை மூச்சுகளுடன் வெளியாகி விட்டனர். பழவேற்காடு பகுதியில் 25 மீனவ கிராமங்கள் கடல் தண்ணீரில் மூழ்கி விட்டன.

லைட்ஹவுஸ் குப்பம், தாங்கள்திருபுழம் பகுதிகள் கடலுக்குள் மூழ்கி உள்ளன. அந்த ஊர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். அவர்களை படகு மூலம் மீட்கிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் தண்ணீரில் மூழ்கி இருப்பவர் களை மீட்க கடலோர காவல் படையும், ராணுவமும் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள் ளது. ஹெலிகாப்டர்கள் கடலோரங்களில் தாழ்வாக பறந்து தண்ணீரில் தத்தளிப் பவர்களை மீட்கிறார்கள்.

மெரீனா கடற்கரையில் நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. அவர்களை தேடி உறவினர்கள் கண்ணீர் மூழ்க அலைந்தனர்.

மெரீனா கடற்கரையில் தண்ணீர் ஊருக்குள் வந்து விட்டது என்பதை அறிந்ததும் திருவல்லிக்கேணி, மயி லாப்பூரைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். திடீரென ஏற்பட்ட மற்றொரு கடல் கொந்தளிப்பு அவர்களையும் இழுத்து சென்றது.

இதனால் சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 10-30 மணிக்கு சென்னை பெரிய ஆஸ்பத்திரிக்கு 45 பிணங்கள் கொண்டு வரப்பட்டன. காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
Reply
#2
ராசா உதெல்லாம் அவங்களுக்கு பெரிய விசயமே????? இல்லையே உதவிட பெரிய விசம் இலங்கை அரசாங்கத்துக்கு ராணுவ உதவி செய்யனும் இலங்கை நேவிக்கு பயிற்சிகுடுக்கனும்
பாத்தியே அப்பு கடல்மாதாவுக்கு தன்னும் பொறுக்கலை அப்பு உவர் இந்திய நேவி தளபதி கொஞ்சநாளைக்கு முன்னமும் பொய் சொன்னவரடா தங்கடமீனவரை சிங்கள நாயள் கொல்லவில்லையாம்

அப்பு அரசன் அன்றுகொல்லுவான் தெய்வம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

என்டாலும் ராசா இறந்தது பொதுமக்கள் அவையளுக்கு அப்புவின் ஆழ்ந்த அனுதாபங்கள்

Cry Cry Cry Cry
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)