Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சடலங்களை மீட்பதில் கிழக்கில் அவல நிலை
#1
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடல் பெருக்கத்தினால் இப்பிரதேசம் தொடர்ந் தும் மயான பூமியாகக் காட்சியளிக்கின்றது. நேற்று திங்கட்கிழமையும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வடக்கு-கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளும் மனித சடலங்களாலும் காயமடைந்த மக்களாலும் நிரம்பி வழிகின்றன.
மீட்கப்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு கரையோரப் பிரதேசங்க ளில் நீர் தேங்கிநிற்பதால் சடலங்களை அடக் கம் செய்வதிலும் பாரிய சிரமங்கள் எதிர்நோக் கப்படுகின்றன. இதனால் சடலங்கள் மேட்டு நிலப்பிரதேசங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டு வருகின்றன.
கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பாலான குடும்பங்களில் எவருமே உயிர் தப்பாமல் அனைவருமே இயற்கையின் சீற்றத்திற்குப் பலியாகியுள்ளனர். இதனால் வைத்தியசாலைகளில் உள்ள அவர்களது சட லங்களைப் பொறுப்பேற்க எவருமே இல்லாத நிலைகாணப்படுகின்றது. இதனால் அநாதர வான நிலையில் நூற்றுக்கணக்கான சடலங் கள் காணப்படுகின்றன.
பல பிரதேசங்களில் தொடர்ந்தும் சடலங் கள் மீட்கப்பட்டு வருகின்றன.மேலும் சில இடங்களில் சடலங்கள் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல பிரதேசங்களில் மீட் புப்பணிகளை மேற்கொள்ளமுடியாத அளவுக் குத் தொடர்ந்தும் கடல் நீர் தேங்கிநிற்கின்றது. மீட்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே நீர்மட்டம் உயர்ந்து செல்வதாகவும் மீட்புப்பணியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்க ளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு வைத்தியர்களுக்கும், சுகாதாரப்பணியாளர் களுக்கும் பற்றாக்குறை நிலவுவதால் பணி யில் இருப்போர் திண்டாடுவதையும் அவதா னிக்க முடிகின்றது.
பல இடங்களிலும் வழமையான அரசு நிர் வாகம் முற்றாகச் சீர்குலைந்துள்ளது. அனைத்து அதிகாரிகளும், தமது அலுவலகக் கடமைகளை இடை நிறுத்திவிட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலேயே கவனம் செலுத்தி வருகின்ற னர்.
கிழக்கில் பாதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த தமிழ் - முஸ்லிம் இளைஞர்கள் நிறு வன ரீதியாக ஒன்று சேர்ந்து நிவாரணப் பொருள் களைத் தத்தமது பகுதிகளில் சேகரித்து பாதிக் கப்பட்ட மக்களுக்குக் கொண்டுசென்று வழங்கி வருகின்றனர்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமங் களை எதிர்நோக்கி வருகின்றனர். பெரும்பா லான பிரதேசங்களில் மின்சாரம், தொலை பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இவ் வாறான பிரதேச மக்களுக்கு வெளியிடங் களுடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக் கப்பட்டுள்ளன.
பல கரையோரப் பிரதேசங்களில் வீதிகளில் மரங்களும், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கம்பங்களும் சாய்ந்து வீழ்ந்து காணப்படுவ தால் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத் துண்டிக்கப் படுவதால் பொருள்களுக்கு அன்றாடம் விலை அதிகரித்துக்கொண்டு செல்கிறது. எரிபொருள் களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களி லும் நீண்ட வரிசை காணப்படுகின்றது.
கடல் நீர் வடிவிலே எமன் வருவதால் கடலுக்கு மீனவர்கள் எவரும் செல்லவில்லை. இதனால் மீனுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவு கின்றது. இறைச்சிக்கடைகளில் நீண்ட வரிசை காணப்படுகின்றது.
பெரும்பாலும் மீனவக் குடும்பங்களே இந்த அனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். பொது அமைப்புக்கள் சமைத்த உணவுப் பார்சல்களையும் உடுபுடைவைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
வடக்கு-கிழக்கு மாகாண கரையோரப் பிரதேச வீடுகளில் மரண ஓலம் ஓங்கி ஒலிக் கின்றது. உடன்பிறப்புக்களையும் தாய்தந்தை யர்களையும் பெற்ற பிள்ளைகளையும் இயற் கையின் சீற்றத்திற்குப் பலிகொடுத்த சோகம் தாழாது மக்கள் கதறி அழுத வண்ணமே உள்ளனர். பெரும்பாலான வீடுகள் மரண வீடுகளாகவே உள்ளன.
பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர், அரச அலுவலர்கள் அனைவரினதும் விடு முறைகள் யாவும் ரத்துச்செய்யப்பட்டுள்ளதால் அனைத்து உத்தியோகத்தர்களும் மக்களுக் கான நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் ஈடு பட்டு வருகின்றனர்.
இயற்கையின் சீற்றம் இன, மத, குல, வேறு பாடுகள் எதுவும் இன்றி அனைவரையுமே அடித்துச் சென்றுள்தால் நிவாரணப் பணிகளி லும் ஆங்காங்கே இன ஐக்கியத்தைக் காணக் கூடியதாக உள்ளது

உதயன்
Reply
#2
இங்கு என் சகோதரனின் நண்பர் ஒருவருக்கு 28 குடும்ப அங்கத்தவர்கள் இறந்துவிட்டார்கள். எப்படி ஆறுதல் கூற <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)