12-29-2004, 02:45 PM
http://www.tamilnet.dk/tamilan/html/module...rticle&sid=1159
<b>தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு அலைகளின் ஆலோசனை !</b>
புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அரிய பணியை ஆற்றியுள்ளது. ஆனால் அது போதியதல்லää பணிகள் மிகமிக நெடியவை என்று அதன் பொறுப்பாளர் றெஜி அவர்கள் நேற்று தொலைக்காட்சியில் பேசும்போது தெரிவித்தார்.
ஐ.நா சபையின் உதவி வழங்கும் நிறுவனங்களும் உடனடி உதவிகளுக்குத் தயார் ஆனால் நீண்ட உதவிகளை வழங்க தமது பொருளாதாரம் இடம் கொடுக்காது என்று தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இந்த அவலத்தை வெற்றிகொள்ள எது வழி இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
அனைத்துப் பணிகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு சரியான இலக்கைத் தொட வேண்டிய நிலை உள்ளதால் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் கவனத்திற்கு இது குறித்த நமது எண்ணங்களைத் தருகிறோம்.
முதலாவதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எத்தனை என்ற புள்ளிவிபரம் துல்லியமாக எடுக்கப்பட வேண்டும். வீடமைப்புää தொழில்ää மறுவாழ்வுää ஆகியவற்றை ஏற்படுத்தி அவர்களை நம்பிக்கையுடன் வாழவைக்கும் திட்டத்திற்கு முதலில் பாதிப்பின் சரியான பட்டியல் அவசியம்.
அப்படி ஓர் அறிக்கை தயாரித்தால் அடியோடு பாதிக்கப்பட்ட குடும்பங்கள்ää இடைநிலைப் பாதிப்பிற்குள்ளான குடும்பங்கள்ää ஓரளவு பாதிப்பிற்குள்ளான குடும்பங்கள் என்று மூன்று பிரிவுகள் தோன்றும். இவற்றில் அடியோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியலை முதலாவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் குடும்பங்களை நகர வாரியாக கொத்தணிகளாகப் பிரிக்க வேண்டும். இது கட்டம் ஒன்று.
கட்டம் இரண்டு வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உதவி புரியும் பணி ஒவ்வொரு வெளிநாட்டுக்கு வழங்கப்பட வேண்டும். கட்டம் மூன்று ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் பொறுப்பாக வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தை நியமிக்க வேண்டும். கட்டம் நான்கு அடுத்த ஆறு மாதங்கள் இதற்காக பணியாற்றி தாம் பொறுப்பெடுத்த குடும்பத்தை ஒவ்வொரு புலம் பெயர் குடும்பமும் மீட்டெடுத்து நம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும். அப்படிச் செய்வதுதான் உண்மையான நம்பிக்கை ஒளி.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இது குறித்த பணியைச் செய்ய ஒவ்வொரு குழு நேரடியாக செல்ல வேண்டும். அவர்கள் நாடு திரும்பி புலம் பெயர் மக்கள் மத்தியில் நம்பிக்கை தரும் பூரண அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு குடும்பத்தையும் பொறுப்பெடுத்த குடும்பம் நேரடியாக சென்று அவர்களின் உண்மையான தேவையை அறிந்து அதை பூர்த்தியாக்க வேண்டும். இருப்பிடம்ää தொழில் இதற்கான ஏற்பாடுகளை கணிசமான அளவு செய்து கொடுத்துää அதன் பின்னர் அவர்களாக மீண்டெழவும் ஒரு வெற்றிடம் வைத்துப் பணியாற்றினால் போதுமானது. சுமார் ஆறு முதல் ஒரு வருடத்தில் இதைப் பூர்த்தி செய்ய முடியும்.
சரியாக திட்டமிட்டு செயலாற்றினால் இதை எட்டித் தொட்டு இந்த அவலத்தை உடனடியாக வெற்றி கொள்ள வழியிருக்கிறது. அதேவேளை பணியின் அளவு பெரிதாக இருந்தால் அதற்கேற்ப வலுவுள்ள குடும்பங்களை தெரிவு செய்து பணியை ஒப்படைக்கலாம். அடுத்த பணியாக இடைநிலை குடும்பங்கள்ää சாதாரண பாதிப்புக் குடும்பங்களுக்கு பொதுவான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நேரடியாக செய்யலாம்.
இது ஒரு நுட்பமான விஞ்ஞான வடிவமைப்புச் செயற்பாடுää உள்ளார்ந்த நுட்பாந்திரங்கள் பல இதில் பின்னி நிற்கின்றன. பேரவலங்களால் சீரழிந்த இனங்கள் தம்மை மின்னல் வேகத்தில் சீரமைத்த வரலாற்றோடு தொடர்புடைய பணி. எனவேதான் திட்டத்தை செயற்படுத்த முன்னர்ää செற்படுத்த முற்படுவோருக்கு பல வகுப்புக்கள் எடுத்து விளக்க வேண்டும். பயன் பெறு வோருக்கும் இது குறித்த விளக்கää உளவியல் வகுப்புக்கள் அவசியம். மேலும் பணியாளருக்கு சமுதாய உளவியலைப் புரியும் நுட்பங்களை கற்றுக் கொடுத்துää இங்குள்ள ஈகோ பிரச்சனையை வெல்லும்படியாக பணியாற்ற வைக்க வேண்டும். அதேவேளை தமிழர் தாயகத்தின் இதர தேவைகளையும் கருத்தில் கொண்டு இதைக் கட்டமைக்க இடமிருக்கிறது. இது ஓர் எண்ணம்ää ஆலமரம் போல கிளைவிட்டு பரவிää நலம் தர இதில் நிறையவே இடமிருக்கிறது. இதை தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் கவனத்திற்கு தருகிறோம்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இதுவரை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களை தனது காரியாலய ஊழியர்களின் கண்ணளுடாகவே பார்த்துள்ளது. அடுத்த கட்டமாக அதன் பார்வை முப்பரிமாணம் கொண்டதாக அமைந்தால் மட்டுமே அதன் அடுத்த கட்டப் பாரிய பணிகளைச் சுலபமாகச் செய்யலாம்.
ஆறு மாதத்தில் தமிழீழத்தையே போரின் அடையாளமே தெரியாத தேசமாக மாற்ற வேண்டிய பணியும் காத்திருக்கிறது. அப் பணியின் ஆரம்பக் கட்ட வேலை இதுவாகும். இதை தமிழீழத்தில் இருக்கும் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையகத்தின் மேலான பார்வைக்கு முன் வைக்கிறோம்.
<b>www.alaikal.com
அலைகள் ஆசிரிய பீடம். 29.12.2004</b>[/size][size=24]