Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவர்களும் பெண்கள்
#1
இவர்களும் பெண்கள்....

கதிரவன் அலைந்தோய்து போன அமைதியான அந்த வடக்குக் கரைக் கடல் மேற்பரப்புக்குள் தோய்ந்து மூழ்கின்றான். வடலி நிழலை மறைத்துத் தன்னந்தனியே நிக்கின்றது விசாலத்தின் வீடு. ஒரு காலத்தில் பலருக்கு உள்ளூர் சைவக்கடை. இவள் வீட்டுக்கு ஊருக்குள் ஒர் பட்டம். 'வேசி வீடு'. வஞ்சகமின்றி எல்லோரும் ஏனோ, செல்லமாகவே கூப்பிடப் பழகிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். விபரணம் ஏன்? போன வருஷம் வரை உரார் பலர் புளங்கிய இடமானாலும், இன்று சனம் வருவது அரிதாகிவிட்டது. காரணம் விசாலத்துக்கோ வயசாகிவிட்டது. மன்னிக்கவும் அவளது கட்டிலுக்கு. "விசாலம் நச்சாலும், துணையேது..? இத நாஞ்சொல்லேல...." ஊரில் புண்ணியவான்கள் கள்ளுக்குப் பின் ஞானத்தில் உபதேசிப்பது காதில் விழுவதுண்டு. "அட கள்ளேறுறவன் கூட" விசாலத்தின், இன்று ஈடாடிக்கொண்டிருக்கும் கட்டிலிற் சுருண்டு கிடக்கும் பஞ்சு மெத்தை சொல்லும் ஆயிரம் கதை-பகல் கதைகள் கூட உண்டாம், பசிக்கென்ன நேரமா குறிச்சிருக்கு.

வளையில் தொங்கும் கொழுக்கியில் ஜாம் போத்தில் விளக்கைக் (சென்.ஜோன்ஸ் பெடியன் கண்டுபிடிப்பு) கொழுவி விட்டு வாசல் கதவுக்குப் பின்னால் சப்பாணி கட்டுகிறாள் பேதை. அவள் எப்பொழுதும் முன்னால் வருவதில்லை. கதவுக்கு முன்னால் வருவதை பலர் விரும்புவதுமில்லை, ஏன் வந்ததும் இல்லை, அந்தப் புண்ணியாவன் ஜி.எஸ் (G.S-Grama Sevegar-கிராம உத்தியோகத்தர்) ஐத்தவிர. பாவம் மனுசனும் அறுவத்தஞ்சிலேயே போச்சேந்திட்டிது. மற்றவ எல்லாரும் கொல்லைப் புற குசினிக் கதவிலதானே புழங்கிறது. இன்று விசாலத்திற்கு வயது நாற்பத்தைந்தாகிறது. சற்று திரும்பிப் பார்த்தால், மண்வீட்டுக்கு வந்து, பின்னர் கல்லாக்கி இருபத்தைந்து வருடம். கல்லுக் குறுணல்கள் பெருங்கைகள் விசிறிய பணத்திற் தான்.

இவ்வளவு காலமும் ஓடாத்தேஞ்சதுதான் மிச்சம். இருந்த ஒரு பிள்ளையும் காலிற்குக் கீழில்லை. இடஞ்சலாப் போடுமெண்டு ஒருக்கா வெளீல அனுப்பினதுதான். திரும்பவே இல்லை. கண்ணுக்கெட்டாத் தூரத்தில் எங்காவது ஊதாரியாகத் திரிவானாக்கும். இதுதானே வழக்கம். விபரமேதும் தெரியாது.

முகட்ட அண்ணாந்து யோசிச்சா.... அந்த G.S தான் படிக்கல். அன்றைக்கு வேட்டையாடி புலி அந்தாள் தான். றேஷன் காட்டில் கையெழுத்து வாங்கச்சென்ற போது சூறையாடப்பட்டாள் விசாலாச்சி (பொருத்தமான சொல் பாலியல் வன்தாக்குதல்) G.S வடிவிற் பிடித்தது சனி. G.S க்கோ நாற்பதாகியும் வீட்டுச் சாப்பாடு இல்லை.

சம்பவத்தை அறிந்தது ஊர். இனிக்கேட்க வேண்டுமா? விஷயம் ஊர் முழுவதும் தெரியவர, கெஞ்சிக் கதறினாள்- G.S இன் காலிலேயே பழிகிடந்தாள் விசாலம். பயனேதுமில்லை. அந்த முரட்டுக் காளைக்கோ மனம் கசியவில்லை.
சம்பவம் ஏற்பட்டு ஒரு கிழமை கூட ஆகவில்லை. விசாலத்தின் புறக்கதவை விரல் மொளிகள் நொருக்க ஆரம்பித்து விட்டன. என் செய்வது.... வயலுக்கும் போக முடியாது. அரங்கேற்றம் தான் ஆகிவிட்டதே. மீண்டும் சலங்கையைக் கட்டுவதில் சங்கடம் இருதாலும், சமூகவழக்கம் அரங்கிற்கான பாதயைத் தானே வகுத்துள்ளது. அன்றிலிருந்து மெத்தையோடு மெத்தையா திரௌபதியின் (அவளுக்கும் உடன்பாடு இருக்கவிலைத் தானே) கதி வீசாலத்துக்கு. ஆரம்பத்தில் கடினமாக இருந்த்தாலும், எலாவற்றையும் பழக்கப் படுத்திவிட்டாள் இந்தப் பரத்தை. (சூட்டப்பட்ட பேர்)

காமுகரின் முகங்களோ, பெயர்களோ நினைவிலில்லை.
புறக்கதவும் சாத்தப் பட்டுவிட்டது....

எல்லாம் நாலு சுவருக்குள்ளேயே நடந்தேறிவிட்டது

வாசகர்களே விழித்து விடுங்கள்.....! இனியும் உறக்கமேன்....
இது கதையல்ல நிஜம்.... விசாலங்கள் பல இன்றும் உருவாக்கப் படுவது தான் பரிதாபம்.....

இவர்களை இழிப்பதை விட்டு விட்டு....வீரவாள் ஏந்துங்கள்.........

காண்போம் சமுதாய விடுதலை.....உண்மையான......சம நீதியுள்ள....

இவை என் ஏக்கங்கள்.... நீங்களும் ஏங்குவீர் என எண்ணுகின்றேன்....


விகடன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
ஏமாற்றுக்காரர்கள் கிள்ளி எறியப்பட வேண்டியவர்கள். பெறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் தாம் தப்புச் செய்யும் போது மற்றவர்கள் என்ன செய்வார்கள்? மற்றவரின் மனங்களை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இந்த சமூகத்தை என்ன செய்யலாம்? இது தான் யதார்தம் ஆகிவிட்டது. இதனால் தான் என்னவோ இவர்களுக்காய்.. இவர்களின் பக்கமிருக்கும் நியாயங்களை எவரும் பார்ப்பதில்லை. வெறும் வார்த்தைகளில் பத்திரிகைகளிலும் ஏனெய ஊடககங்களிலும் எழுதும் பலர் ஆனால் இவர்களுக்கு நீதி கிடைக்க யாராவது முயற்ச்சிதார்களா? என்றால் அதற்கான பதில் 0 ஆகத்தான் இருக்கும் உதவ நினைப்பவர்களுக்கு இந்த சமுதாயம் தடையாக உள்ளது. எங்களது வீம்பு கௌரவம் தடையாக உள்ளது. அதையும் மீறி உதவினால் உதவியவரும் கட்டக்கதைகளுக்கு ஆளக நேரிடும் என்ன செய்வது. எங்கள் சமுதாயத்தில் இது (கட்டுக்கதை கட்டுவது) ஒரு பொழுது போக்குப் போன்றது எங்கள் சமுதாயம் என்று திருந்தும்..
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எது நியாயம் என்று இலகுவில் தீர்மானிக்க முடியாது...! ஆண்கள் குற்றவாளியாக பெண்கள் தான் பெரிதும் காரணம்...தங்கள் சுயநலத்துக்காக ஆண்களை பாவித்துவிட்டு தூக்கி எறிய முற்படும் பெண்களே அதிகம் ஆண்களால் வஞ்சிக்கப்படுகின்றனர்...! பின்னர் அவர்களே நான் ஒரு ஆணால் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என்று கூறி அனுதாபம் தேடி தங்கள் அநாகரிகங்களுக்கு நியாயம் சொல்லி சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றனர்...!

இவர்களின் செயலில் நியாயம் தேட முதல் தங்கள் அளவில் தங்கள் பாதிப்புக்கு விளக்கம் சொல்லி இவர்கள் செய்யும் சமூகச் சீர்கேடு நோக்கிய அநியாயச் சேவைகளை நிறுத்த வேண்டும்...! ஏன் இப்படியான பெண்கள் தங்கள் பாதிப்புக்கு நீதி தேடாமல் தாங்களா ஓர் அசிங்க முடிவை எட்ட முனைகின்றனர்..????! அந்தளவுக்கு உலகில் நீதி இறந்து விட்டதா என்ன...!!!!!!

ஒரு பெண் ஒருவனால் பாதிக்கப்பட்டாலும் அவள் இன்னொருவனால் பாவிக்கப்படமால் அவளால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள எத்தனையோ வழியிருக்க...ஏன் அவற்றைத் தேடாமல்... மற்றவர்களும் தங்களைப் பாவிக்க அனுமதிக்கின்றனர்...????!

இன்று ஆண்களும் தான் பெண்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்...அதற்காக ஆண்கள் இப்படியா சமூகச் சீரழிவுக்கு வழிகோலுகின்றனர்...! உண்மையில் இவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதற்கு வருந்துகிறார்களா....இல்லை...அதை வைத்தே தங்களைப் பாவித்து இலாபமும் பெற்று அனுதாபமும் தேடுகின்றனரா...என்பதே இன்றைய கேள்வி...!

சட்டத்தின் முன் அனுதாபத்துக்கு இடமில்லை...இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதே பார்க்கப்பட வேண்டும்..பெண் என்பதற்காக இரங்க வேண்டும் என்பதல்ல... சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் மனிதர்களாகவே நோக்கப்பட வேண்டும்... உணர்ச்சிகள் உணர்வுகள் அதன் விளைவுகள் மனிதனாக எல்லோருக்கும் சமன்...! எனவே இவர்களின் உள் நோக்கம் என்ன அது சமூகத்தைச் சீரழிக்கும் நோக்குடையது என்றால் இப்படியான விசாலாச்சிகள் விலக்கப்பட வேண்டியவர்கள்... இல்ல மரண தண்டனைக்குரிய குற்றவாளிகள்...! இவர்களை பாவிக்க முற்படும் ஆண்களும் விலக்கப்பட வேண்டியவர்கள்... அவர்களுக்கும் தண்டனை ஒன்றுதான் வேறில்லை...! :evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தகவறுகள் எங்கு நடந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவையே.. அது சரி இது கதையல்ல நிஜம் என்றால்.. இந்த GS ஐ போட ஆள் இல்லையா.. இந்த விசாலாச்சியைப்போல் எத்தனை பெண்களை சீரழிச்சிருக்க கு}டும்..
அதுக்காக விசாலாச்சி செய்தது சரி என்றில்ல.. அந்த GS கதையை அண்டைக்கே முடிச்சிருக்க வேணும். அப்ப கதவுகளை தட்டிய கைகளும் அடங்கி இருந்திருக்கும்.. :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
அந்த ஜீ எஸ்ஸப் போட்டிருந்தா சமூகத்தில் ஒருத்தன் தான் அழிந்திருப்பான்...அந்த ஜீ எஸ்ஸையே சாட்டு வைச்சு இப்படி விசாலாச்சிகள் எழுந்தா அப்படி ஜீ எஸ்களுக்கு சமூகத்தில் பஞ்சம் ஏது...!

எனவே ஜீ எஸ்ஸுக்கு முதல் விசாலாட்சிகளை போட்டுத்தள்ள வேணும்...ஈவு இரக்கம் தயவு தாட்சண்ணியம் இந்த இடத்தில் தேவையில்லை...! அன்று ஒரு விபச்சாரிக்காக இறைமகன் இரங்கினார்..காரணம் அவள் தன் தவறை உணர்ந்து திருந்த விளைந்ததால்...ஆனால் இன்று இந்த விசாலாட்சிகள் தவறென்று தெரிந்தும் கதவு தட்டப்படக் காத்திருக்கிறார்கள் என்றால்....கடவுள் கூட மன்னிக்க மாட்டார்...!

இவர்களை சமூகத்தில் இருந்து விலக்க வேசிப்பட்டம் தேவையில்லை... புள்ளட் போதும்....! :evil: :evil: Idea
(தமிழீழத்தில் விபச்சாரம் மரண்தண்டனைக் குற்றம்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
சாதாரன விசாலாச்சியை.. இப்படியான விசாலாச்சியாய் ஆக்கக் காரணம் முதன் முதலில் அந்த GS தானே.. அந்தாளை முடிச்சிருக்கணும் முதலில.. அப்ப தான் அடுத்த GS க்கு பயம் வரும் பட் அதை விசாலாச்சி செய்யத்தவறிட்டா... {இதை மற்றவர்கள் ஆவது செய்திருக்கலாம்} அடுத்தபடி விபச்சாரி விசாலாச்சியைப்போடலாம்.. :twisted: :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
சாதாரண விசாலத்தை.... விபச்சாரி ஆக்கவில்லை ஜீ எஸ்.... விபச்சாரி ஆனது விசாலம்.... அதற்கு சாட்டு ஜீ எஸ்...!

ஜீ எஸ்ஸப் பிறகு போடலாம்...விபச்சாரியை உடன தட்டோனும்...விட்டா இவளா...பல ஜீ எஸ்களை உருவாக்கிடுவாள்.... மொத்தத்தில உதுகள் எல்லாமே தட்ட வேண்டிய கேசுகள்....டோன்ட் வொறி....! உதுகளுக்கு மன்னிப்புத் தேவையில்லை....!

பெண்கள் தான் சமூகத்தில் பல கெட்டதுகள் பெருகக் காரணம்....!எனவே அவர்கள் தொடர்பில் விழிப்பாய் இருப்பது அவசியம்....பெண் என்பதற்காய் இரங்கவோ வக்காளத்து வாங்கவோ கூடாது.... அவர்களின் உள்நோக்கத்தைக் கண்டறிவதே அவசியம்...குற்றங்கள் குறைய வழிவகுக்கும்....! :evil: :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நாங்கள் பெண்களிற்காய் வக்காளத்து வாங்கவில்லை.. ஆனால் இந்த விசாலாச்சியை சீரழிச்சது அந்த GS தானே அதற்காக அவ விபச்சாரியாய் மாறனும் என்று நான் சொல்லல..?? பட் அப்படி செய்த GS ஐ முதலில போடனும் என்றம் இது ஆண் என்பதற்காய் அல்ல.. ஒரு சேவையாளனாய் இருந்து கொண்டு இப்படி மிருகத்தனமாய் நடந்து கொள்பவர்களை தான் முதலில் களைந்து எடுக்க வேண்டும்.. Idea அதுக்கு பிறகு இப்படி சமுக சீர்கேடுகளை தப்புகளை செய்து கொண்டு அதற்கு காரணங்கள் காட்டுறவையை போடணும் அப்படி என்று நாங்க நினைக்கிறம்.... இங்க விசாலாச்சி GS ஐ சீரழிக்கல GS தான் விசாலாச்சியை சீரழிச்சிருக்கார்.. அதுக்கப்புறம் விசாலாச்சி சமுகத்தை (மற்றவர்களை கதவை திறந்திருக்கா) சீரழிச்சிருக்கா.. ஆரம்பத்தில தொடங்கினவரை தானே முதலில போடணும்.. Idea :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அப்படி என்றீங்க அப்ப சரி..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
மன்னரிட்டை சொன்னால் எல்லாரையும் போட்டிடுவார்... கவனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#11
kuruvikal Wrote:இவர்களை சமூகத்தில் இருந்து விலக்க வேசிப்பட்டம் தேவையில்லை... புள்ளட் போதும்....! :evil: :evil: Idea
(தமிழீழத்தில் விபச்சாரம் மரண்தண்டனைக் குற்றம்...!)

ஜீ.எஸ்மாரை விரட்ட என்னத்தைக் கொடுப்பது குருவிகள் ? ஆண் - பெண் இருபாலருக்குமிடையிலான பிரச்சனையை தனியே பெண்கள் மீதே சாட்டப்படுவது உங்கள் ஒருபக்கத்தனமான உங்கள் தீர்வை வைப்பது :?: :?: :?: :?:
:::: . ( - )::::
Reply
#12
º¢Ä ¦Àñ¸û..... «Û¾¡Àõ §¾ÎÅÐñÎ...... «¾ü¸¡¸ «Å÷¸û ¾¡ý ¬ñ¸û ¾ôÒ ¦ºö Ðñθ¢È÷¸û ±ýÚ ¬ñ½¢¨ÄÅ¡¾õ §ÀºÓÊ¡Ð.....
¿ ...¿¡öìÌ ¦ºì¦¸ýÉ.... º¢... ±ýý...
Ó¾ø...GŠ ìÌ §À¡¼ ºÃ¢...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
Ó¾ø...GŠ ìÌ §À¡¼ ºÃ¢...
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)