01-02-2005, 09:18 AM
இலங்கையில் நிவாரண உதவிகளைச் செய்ய அமெரிக்க 1500 துருப்பினர் வருகின்றனர்
கடற்கொந்தளிப்பு காரணமாக இலங்கையில் இதுவரையில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 28627 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது; காணாமல் போனோர் எண்ணிக்கையும் 5040ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு வெளிநாடுகளின் உதவி பெறுமளவில் குவிந்துவருகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா தனது மரைன்ஸ் சிறப்புப் படையினர் 1500 பேரை ஹெலிகாப்டர்களை தாங்கிச்செல்லக்கூடிய பெரிய கப்பலொன்றில் இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லுன்ஸ்டட் இம்முடிவை வெளியிட்டுள்ளார்.
தரையிலும் நீரிலும் செல்லவல்ல ஹோவர்கிராஃப்ட்டுகள் 5இ மரைன்ஸ் ஹெலிகாப்டர்கள் 5 ஆகியவை அடுத்த வார இறுதிக்குள் இலங்கை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்பாக நாளைய தினமேஇ சுமார் 200 மரைன்ஸ் படையினர் இலங்கையைச் சென்றடைவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
நிவாரண உதவிப் பொருட்கள் மீட்புப் பணிகளில் உதவக் கூடிய நவீனக் கருவிகள் ஆகியவை அக்கப்பலில் கொண்டுவரப்பட இருப்பதாக அமெரிக்கத் தூதர் கூறியுள்ளார்.
ஊ130 ரக விமானம் ஒன்றிலும் மேலும் பல பொருட்கள் வரவிருப்பதாகவும் தேவைப்படும் பட்சத்தில் கூடுதலான அமெரிக்கச் சிப்பாய்கள் உதவிகளைச் செய்வதற்காக இலங்கைக்கு அனுப்பப்படலாம் என்றும் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அமெரிக்கா தடை விதித்திருக்கும் பட்சத்தில்இ அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உதவிகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்கத் தூதர்இ மனிதாபிமான தேவைப்படும் அனைவருக்கும் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் என்றும் இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Source : BBC

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&