Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீணடிக்கப்பட்ட முயற்சி!
#1
இன்று லண்டனில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் உல்லாசப்பயணிகள் கூடும் பகுதியுமான TRAFALGAR SQUARE என்னுமிடத்தில் சுனாமி பேரலையால் பாதிப்புள்ளாகியிருக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளின் அவலங்களை வெளியுலகுக்கு உணர்த்தவும், உதவி வழங்கும் உலக நாடுகளின் உதவிகள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியும் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மிகக் குறுகிய அவகாசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்று கூடலானது, என்ன காரணத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டதோ, அக்காரணம் நிறைவேற்றப்படாமல் வீணடிக்கப்பட்டிருந்தது.அங்கு பேசிய ஒரிருவரைத் தவிர ஏனையோர் தமிழ் மொழியிலேயே பேசி செல்ல வேண்டிய இடங்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை எடுத்துச் செல்லத் தவறிவிட்டார்கள். ஏறக்குறைய இந்நிகழ்ச்சியானது லண்டனில் வாழும் தமிழர்களுக்காவே தமிழில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நடாந்த நிகழ்ச்சியாகி விட்டது.

அங்கு வந்திருந்த பலர் தங்களது ஏமாற்றங்களையும், விரக்தியையும் அமைப்பாளர்களுக்கு நேரடியாகவும், தமக்குள் கதைத்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தமிழில் பாடினார்கள், தமிழில் பேசினார்கள், தமிழில் பேசினார்கள் - யாருக்கு புரிவதற்கு? யாருக்கு கேட்பதற்கு?

இவ்வொன்றுகூடலானது..

1) அனர்த்தம் நடந்து இரு கிழமைகளாகிவிட்ட பின்பு நடந்த போதிலும் ஏன் ஒருநாள் முன்னறிவிப்பில் நடாத்தினார்கள்?
2) இவ்வொன்று கூடலின் முக்கிய செய்தியென்ன?

மொத்தத்தில் "IBC" இலும், "TTN" இலும் பேசிய அதே குரல்கள், அதே பாசையில், அதே மக்களுக்காக, வேறொரு இடத்தில் பேசிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
"
"
Reply
#2
செருப்பாலையடிச்சாலும் என்னத்தையோ மாத்தேலாதெண்டு ஊரிலை ஒரு மொழி சொல்லுவினம் எங்கடை பெரியவங்க. அதைத்தான் உதுவளுக்கும் பொருந்தும். :oops:
Reply
#3
ஆமாம்! வேதனைக்குரிய செயல், எந்தக் காரணத்திற்காக ஒன்று கூடினோமோ அணைத்தும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. அங்கு கூடியிருந்தோரில் ஒரு சிலர் ஒன்றுகூடலை ஒழுங்கு செய்தவர்களின் கவனத்திற்கு கொண்டு வர முற்பட்ட போதிலும், அவர்கள் அதைக் கவணத்திலெடுக்கவில்லை.

அங்கு வந்தோர் பலர் "இப்படியாக நடக்குமென்று தெரிந்திருந்தால் வீட்டிலேயே நின்றிருப்போம்" என்றும் "IBC, TTN கேட்ட அதே வசனங்களைத்தானே இங்கும் கேட்கிறோம்" என்றும் அங்கலாய்த்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இவ்விடயத்தில் கனடாவில் உட்பட ஏனைய நாடுகளில் மிக நேர்த்தியாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட நிகழ்சிகள் செய்யப்பட்டதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது, மற்றும் அவர்களின் அந்நாட்டு ஊடகங்களை நோக்கிய செயற்பாடுகலுமே அந்நாட்டு ஊடகங்கள் ஓரளவேனும் உண்மை நிலைமையை கொண்டுவர முற்பட்டது.

ஆனால் மாறாக லண்டனில் ஒரு நல்ல தேவையான காரியத்தை செயற்படுத்த முற்படுகையில் பலர் பல ஊறுகளை விளைவிக்க முற்படுவதும், அவற்றில் தடங்களை ஏற்படுத்த முற்படுவதும், தமது கட்டுப்பாடை மீறி நடந்தி விடாமல் தடுப்பவர்களும் மலிந்து போயுள்ள நாடாக லண்டன் மாறியிருப்பது வேதனையான விடயமாகும்.
" "
Reply
#4
<b>கனடாவில் இன்று தேசிய துக்க தினம் - தமிழ் மக்களின் 'ஈர நினைவுகளின் கூடல்" மாலை நடைபெறவுள்ளது </b>

<span style='font-size:21pt;line-height:100%'>கனடாவில் இன்று நாடளாவிய ரீதியில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சுனாமியினால் உயிரிழந்த மற்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கனடாவின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று நாடளாவிய ரீதியில் அனைத்துக் கொடிகளும் நடுக்கம்பங்களில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் தலைநகர் ஒட்டாவாவில் ஆரம்பமாகும் தேசிய அரசாங்கத்தின் துக்க தின வைபவத்தில் பிரதமர் போல் மார்ட்டின் தலைமையேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கனடாவின் ஆளுனர் நாயகம் உட்பட முக்கிய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனனர்

தமிழர்கள் பெருமளவில் வாழும் ஒன்ராரியோ மாகாண அரசும் தனது அஞ்சலி நிகழ்வுகளை இன்று நடத்தவுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மாகாண முதல்வர் கலந்துகொள்ளவுள்ளார்.

மேற்குக் கரேயோர நகரான வாங்கூவரில் நடைபெறவுள்ள நிகழ்வில் மாலை 7 மணிக்கு மொழுகுவர்த்தி ஆராதனை இடம்பெறவுள்ளது.

கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி.), நடத்தும் 'ஈர நினைவுகளின் கூடல்\" என்ற நிகழ்வு ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. கனடாவின் பல்வேறு மட்ட அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பில் கிரஹாம், தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்ற்றன், ஓன்ராரியோ மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் ரோரி, ரொறன்ரே நகர முதல்வர் டேவிற் மில்லர் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று மாலை 4:30 தொடக்கம் 7:00 வரை, ரொறன்ரோ டவுன்ரவுனில் அமைந்துள்ள நேத்தன் பிலிப் சதுக்கத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. </span>
நன்றி
புதினம் இணையம்
[b][size=18]
Reply
#5
தற்போது "CTR" வானொலியின் இணையத்தளம் மூலம் கனடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈர நினைவுகளின் ஒன்று கூடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அங்கு செய்யப்பட்ட ஒழுங்குகளையும், அங்கிருக்கும் எழுச்சியையும் கேட்கும்போது ஒருபுறம் சந்தோசமாகவும் மறுபுறம் வேதனையாகவுமிருக்கிறது..... "ஏன் லண்டனில் இப்படியாக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு செய்யப்படவில்லையென்று"? இங்குவாழும் ஈழ்மக்களுக்கு உணர்வில்லையா? நாம் அனர்த்தம் நடைபெற்ற பின் இன்றுவரை எந்த புலம்பெயர் நாடுகளிலும் எமது மக்களின் துயர்துடைக்க வழங்கப்படாத நிதியை அள்ளி வழங்கினோம்! அள்ளி வழங்குவோம்!

அப்படியிருக்க ஏன்?
"
"
Reply
#6
கனடாவில் நடை பெறும் நிகழ்வுகள் கனடியத்தமிழ் வானொலியூடாகவும் ஏக காலத்தில் அனைத்துலக ஓலிபரப்புக் கூட்டுத்தானத்தின் ஊடாகவும் நேரடியாக ஒலிபரப்பாகின்றது அதே நேரம் ரொரன்ரோவின் செய்தித் தொலைக் காட்சியான சீ.பி24 ஊடாகவும் நேரடியாக அந்த நிகழ்வுகள் ஒலிபரப்பாகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நடை பெறுகிறது
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
இந்த நினைவு கூரல் நிகழ்விற்கு ரொன்ரோவை மையமாக வைத்து இயங்கும் கனேடிய ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.
cbc வானொலி மற்றும் தொலைக் காட்சி மற்றும் citytv தொலைக்காட்சி என்பன நிகழ்வு பற்றிய அறிவித்தல்களை விடுத்ததுடன் citytvயின் செய்தி ஒளிபரப்பான city pulse 24 இல் நிகழ்வுகள் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டன.
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)