Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
TROக்கு மருந்து அனுப்ப தடை?
#1
<span style='font-size:30pt;line-height:100%'>TROக்கு மருந்து அனுப்ப தடை?

சில இந்திய நண்பர்கள் இந்தியாவில் இருந்து TROக்கு மருந்து அனுப்ப முயலும் போது எத்தனை தடைகளை எதிர்ப்புக்களை எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது. படித்து பாருங்கள் ..........</span>

TRO-வுக்கு மருந்துகள்

சென்ற வாரம் ஈழநாதன் வலைப்பதிவிலும், பின்னர் என் பதிவில் ரோஸாவசந்த் எழுதியதையும் பார்த்து, TRO அமைப்புக்கு சென்னையிலிருந்து சில மருந்துப் பொருட்களை வாங்கி அனுப்ப முடிவு செய்தேன். வெள்ளிக்கிழமைக்குள் (31.12.2004) கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 25,000 மதிப்புள்ள சில மருந்துகளை வாங்கி பெட்டியில் கட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவை, சுனாமி உதவிப்பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லும் என்று சொல்லியிருந்தது.

வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினாலும் ஏதோ காரணங்களுக்காக இந்த மருந்துகள் ஏற்றிச் செல்லப்படவில்லை. முதலில் சென்னை சுங்கத்துறைப் பரிசோதனைக்காக (மருந்துகள்தானா என்று...) சனி, ஞாயிறு செலவானது. திங்கள் அன்று அதைத் தாண்டி, கிளம்பலாம் என்றால், இலங்கை தூதரக அனுமதியில்லாமல் பொருட்களை எடுத்துச் செல்லமுடியாது என்று ஸ்ரீலங்கன் சொல்லிவிட்டது.

இலங்கைத் தூதரகத்தார், TRO அனுமதிக்கப்பட்ட நிவாரண உதவிக்குழு அல்ல என்று சொன்னார்கள். அவர்களிடம் இரண்டு நாள்கள் போராடி, கடைசியாக நேற்று அனுமதி பெற்று பெட்டியை அனுப்பினோம். அனுமதி பெற, மருந்துகளை "சுகாதார அமைச்சரகம், கொழும்பு-10" க்கு அனுப்ப வேண்டுமென்றும், அங்கிருந்துதான் TRO மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கைத் தூதரகம் சொன்னதால் அப்படியே செய்தோம். வேறு வழி தெரியவில்லை.

அனுப்பிய பொருளுக்கான Airway Bill-இல் மருந்துப் பொருட்கள் யாருக்கு (TRO) என்பதனை விளக்கி, சுகாதார அமைச்சரகத்தைச் போய்ச்சேர்ந்ததும் TRO-வுக்குத் தகவல் சொல்லச் சொல்லி எழுதியுள்ளோம். நேற்று இரவு இந்த பில் பிரதியினை தோலைநகல் மூலம் TRO கொழும்பு அலுவலகத்துக்கு அனுப்பி, அங்கிருந்த ஒருவரிடம் பேசினோம். அவர்கள் இன்று பொருட்களை எடுத்தபின் (எடுக்க முடிந்தால்!) எங்களுக்குத் தகவல் சொல்வதாகச் சொல்லியுள்ளனர்.

மேற்கொண்டு இன்னமும் சில மருந்துப் பொருட்கள் (கிட்டத்தட்ட ரூ. 20,000) என் அலுவலகத்தில் இருக்கிறது.

இன்று TRO-வுக்கு சரியான முறையில் கிடைத்த செய்தி தெரிந்தால் அதை அனுப்ப வேண்டும்.

இதற்கிடையே ஸ்ரீலங்கன் விமானச்சேவை இனி பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லப்போவதில்லை என்றும் அதற்கென கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் சொல்லியுள்ளனர். அதுபற்றிய விவரங்கள் இன்றுதான் எனக்குத் தெரியவரும்.

இன்று காலை 9.05 வானொலிச் செய்தியில் கேட்டது: "விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது."

<b>பத்ரி, 10:31, தனிச்சுட்டி, 8 மறுமொழிகள்
8 மறுமொழிகள்:</b>

பத்ரி,
உங்கள் முயற்சி பாராட்டிற்குரியது.

இந்திய அரசு, குறைந்தபட்சம் இலங்கை அரசை வடக்கு பகுட்திகளுக்கு சரியான நிவாரணம் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டும்.

<b>நம்பி.

By: Nambi, at 10:45</b>

பத்ரி, இவ்விடத்திலே நான் எதைப் பாராட்டாக எழுதினாலும், வெறும்வாய்மொழியாகவே தோன்றலாமென்பதாலே, "நன்றி" என்ற தனி வார்த்தையோடு நிறுத்திவிடுகிறேன்.

/"விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது."/

இது விடுதலைப்புலிகளின் அமெரிக்க இராணுவம் இந்திய உதவிக்கடற்படை ஆகியவை வடகிழக்குக்குச் செல்வதன் பின்னாலான கருத்தாக இருக்கலாம்.

<b>By: -/பெயரிலி., at 10:55</b>

badri, please clarify me. ±ó¾ ¿¡ðÎ «ÃͧÁ, §ÅÈ ¿¡ðÎ ´Õ ¿¢ÚÅÉòÐìÌ («Ð ¾ý þɧÁ ¬É¡Öõ) «ó¾ ¿¡ð§¼¡¼ «ÃÍ «ÛÁ¾¢ þøÄ¡Á §¿Ã¢¨¼Â¡ ¦À¡Õû¸¨Ç «ÛôÀÓÊÔÁ¡? «Ð ¦¾Ã¢ïº¡¾¡ý þó¾¢Â¡ ¦ºöÂÈÐ ºÃ¢Â¡ þø¨Ä¡ýÛ ¦º¡øÄÓÊÔõ. I repeat, I asking not about Jsri, an individual but a Government.

<b>By: Jsri, at 10:58</b>

நன்றி பத்ரி,நேற்று சரியான தகவல் கிடைக்காமையினால் குழம்பிப்போயிருந்தேன்.உங்கள் பதிவின் மூலம் நேற்றுத்தான் அனுப்பப்பட்டதைத் தெரிந்துகொண்டேன்.
உங்கள் பதிவும் முக்கியமானது TRO நிறுவனம் இலங்கை நிர்வாக சேவைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம்,அவர்களிடம் முறையான அனுமதிப்பத்திரம் உள்ளது அப்படியிருக்க அவர்களுக்கு அனுமதியில்லை என்ற கூற்று துவேஷத்தின் எல்லையைச் சுட்டிக்காட்டுகின்றது.அதனை இங்கே சுட்டிக்காட்டியதற்கு நன்றி

<b>By: Eelanathan, at 11:09</b>

மிக்க நன்றி பத்ரி.
சரியான நேரத்தில் உதவியுள்ளீர்கள்.

<b>By: வசந்தன், at 12:36</b>

பத்ரியின் இடைவிடாத முயற்சிக்கு, தளராமைக்கு பாராட்டுக்கள்.

எனக்கு இன்னும் ஒழுங்கான இடத்திற்கு போய் சேர்ந்ததா என்பது சரியாய் புரியவில்லை. அப்படியே TROக்கு கொழும்பில் போய் சேர்ந்தாலும் (அதுவும் இன்னும் நிச்சயமாகவில்லை என்றே நினைக்கிறேன்), பாதிக்கபட்ட மக்களிடம் போய் சேருமா என்று ஒரு பிரச்சனை இருக்கிறது. பத்ரியின் முயற்சிகள் வீணாகாது என்று நம்புவோம். ஈழநாதன் urgent என்று சொல்லி அந்த மருந்துகளை கேட்டிருந்தார். பணம் கூட இல்லை, வெறும் அவசர தேவையான மருந்துகளுக்கு இத்தனை பாடா!


இந்தியா வேறு ஏதாவது சொல்லியிருந்தால்தான் ஆச்சரிய படவேண்டும்.கனடா, நார்வே, இன்னும் அமேரிக்கா வேறு நிலை எடுத்தாலும் இந்தியா இதைத்தான் சொல்லும். இன்னும் புரியாதது மத்திய அரசை வற்புறுத்த கூடிய(அதற்கு முய்டற்சியாவது செய்ய கூடிய) ராமதாஸும் வைகோவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். அவர்களின் இந்த துரோகத்தை மன்னிககவே முடியாது.

<b>By: ROSAVASANTH, at 13:39</b>

ஜெயஸ்ரீ: உங்கள் கேள்விக்கான பதில் எளிது. இலங்கை அரசு ஆரம்பம் முதலே உதவிப்பொருட்கள் நேரிடையாக தங்களிடம் வந்துசேரவேண்டும் என்றும் யாராவது பொருட்களை நேரிடையாக விடுதலைப்புலிகள் பகுதிக்கு அனுப்பினால் அது சரியானதாக இருக்காது என்றும் சொல்லிவந்துள்ளனர்.

அதே நேரம், விடுதலைப்புலிகள் அமைப்பும், அது சார்ந்த சில தொண்டார்வ நிறுவனங்களும் இலங்கை அரசிடமிருந்து சரியான உதவிகள் தம்மிடம் வந்துசேர்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த தமிழர்கள், உதவிகளில் பாதியாவது நேரிடையாக தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்று சொல்லியுள்ளனர். கனடா அரசும், அவ்வாறே செய்துள்ளது.

ஆகவே கொடுக்கவேண்டும் என்ற மனநிலை இருந்தால், இலங்கை அரசை வற்புறுத்தி, நேரிடையாக உதவிகளை இந்தியா தமிழர் பகுதிகளில் செய்திருக்க முடியும். கனடாவால் முடிந்தது, இந்தியாவால் எளிதாகவே முடிந்திருக்கும். ஆனால் இந்திய அரசுக்கு அந்த மனநிலை இல்லை.

எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் இந்த நேரத்தில் அது முக்கியமே அல்ல. இப்பொழுது செத்துக் கொண்டிருப்பவர்கள் உயிர்தான் முக்கியம். இந்த நேரத்தில் அரசியல் பிரச்னைகள் வெளியே வரவே கூடாது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் சண்டையே நடந்து கொண்டிருந்தாலும், பாகிஸ்தானில் ஒரு நிலநடுக்கம் வந்தால் இந்தியா உடனடியாக உதவிகளை அந்நாட்டு மக்களுக்குச் செய்தாக வேண்டும். அதைப்போலத்தான் இங்கும்.

இந்தியா, இலங்கை அரசு வழியாகத்தான் உதவிகளைச் செய்வேன் என்கிறது. ஆனால் இங்கு உதவி என்பது பல்வேறு வகைப்பட்டது. பல இடங்களில் இந்திய ராணுவம் மருத்துவக் கப்பல்களை அனுப்பியுள்ளது. ஆனால் இவை யாவும் திருகோணமலை தவிர்த்து பிற தமிழர் பகுதிகளில் அல்ல. பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுகின்றன. ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன. இதையெல்லாம் இந்திய அரசு நேரிடையாகவே செய்யவேண்டும். இலங்கை அரசின் மூலமாக எப்படிச் செய்வது? உதவிப் பொருட்களை இலங்கை அரசிடம் கொடுத்தாலும் கூட, இலங்கை அரசு நல்லபடியேதான் நடக்கிறது என்றாலும் கூட, பொருள்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேர்வதற்கு வெகு நாள்களாகி விடும்.

ஆனால், இந்தியா நேரிடையாக இதை அனுப்பினால் வேகமாக, போகவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்ந்துவிடும்.

தமிழர் பகுதிகளுக்குத் தேவையான மருந்துகள் இந்தியாவில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்திய அரசு மனது வைத்தால் நாளைக் காலைக்குள் அத்தனையையும் - அதிகமாகப் போனால் ரூ. 10 கோடி ஆகுமா? அவ்வளவுதான் இருக்கும் - சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்துவிடலாம்.

அதை விடுத்து, தாம் விடுதலைப் புலிகள் பகுதிகளுக்கு உதவிகளை நேரிடையாக அனுப்பினால், அதன்மூலம் ஒரு வகையில் விடுதலைப் புலிகளை அங்கீகரித்ததாகி விடும் என்பதால் அவர்களை முழுதாக நிராகரிப்பது போல இந்தியா நடந்து கொள்வது மிகவும் மோசமான, அநாகரிகமான செயல். அதைக் கண்டிக்க வேண்டியது நியாயமான இந்தியக் குடிமக்கள் அனைவரின் கடமை. அவ்வாறு செய்வதால் நாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்று ஆகாது.

<b>எங்கோ, ஐரோப்பாவில் தெருவில் போகிறவர்கள் எல்லோரும் மூன்று நிமிட மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். அடுத்த வீட்டில் இருந்துகொண்டு, "உன் துக்கம் என் கண்ணில் படவில்லை, உன் இருப்பையே நான் அங்கீகரிக்கவில்லை" என்பது போல நாம் நடந்து கொள்வது மிகக் கேவலமான செயல்.</b>

<b>By: Badri, at 14:45</b>

பத்ரி, மிக அற்புதமாய் எழுதியுள்ளீர்கள். இதைவிட தெளிவான வார்த்தைகளால் சொல்லமுடியாது. இதை அப்படியே ஒரு தனி பதிவாக எழுதுங்கள்.

<b>By: ROSAVASANTH, at 15:15</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)