Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாயிபாபா பற்றிய புலனாய்வு நிகழ்ச்சி
#1
<b>சாயிபாபா பற்றிய புலனாய்வு நிகழ்ச்சி</b>

:? "யேசுவாகவும் ,புத்தனாகவும், உலக மதத்தை தோற்றுவித்தவராக எண்ணிய சாயிபாபாவை, நான் நேரடியாக பார்க்க எண்ணி, 21வருடங்களுக்கு முன் அவரை நான் என் மனக் கண்ணால்தான் பார்க்க ஆசைப்பட்டேன். அவரைப் பார்த்தால் மனதில் ஓர் அதிர்வு ஏற்படும்........................."

:oops: "சாயிபாபாவை இவ்லகின் தேவன் என எண்ணியிருந்த எனக்கு, என் மகனை இப்படிப் பண்ணியிருப்பதாகத் தெரிந்த போது........................."

தொலைக் காட்சிக்காக தயாரிக்கப்பட்ட புலனாய்வு நிகழ்ச்சியின் வானோலி வடிவம் நாளை (20.06.2004) BBCதமிழ்ஒலியில்..............................
http://www.bbc.co.uk/tamil/2115.ram
Reply
#2
நன்றி அஜீவன். சாய்பவிடம் பல மர்மங்கள் இருப்பதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். ஒருவேளை அதற்கு விடைகிடைக்குமோ இந்த நிகழ்ச்சியில்.
Reply
#3
vasisutha Wrote:நன்றி அஜீவன். சாய்பவிடம் பல மர்மங்கள் இருப்பதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். ஒருவேளை அதற்கு விடைகிடைக்குமோ இந்த நிகழ்ச்சியில்.

நிச்சயம் கிடைக்கும்.

இலங்கையில் வாழ்ந்த பகுத்தறிவாளர் டாக்டர் கோவுர் இவர் செய்வது பித்தலாட்டம் என்று, 1960-1970 களில் கூறி சர்ச்சையை எழுப்பினார்.

சாயிபாபாவை நேரில் சந்திக்கப் போன கோவுரும் புட்டபர்த்திக்கு போய் சாய்பாபா செய்யும் சாகசங்களை போலவே சாகசங்களை செய்து காட்டினார்.

மக்கள் கோவுர் காலில் வீழந்த போது, இவை எப்படி செய்யலாம் என்பதை விளக்கி, நானும் உங்களைப் போல் ஒரு சராசரி மனிதன்தான் என்று விளக்கினார்.

அத்துடன் மக்களை மடையர்களாக்கும் தந்திரக்காரர்களுக்கு, அவர் விடுத்த சவாலை வெல்ல முடிந்தால் 1960களில் ஒரு லட்சம் ருபாய் தருவதாக கூறி வங்கியில் வைப்பிலிட்டார். அது இன்னும் வங்கி வைப்பிலிருக்கிறது.

கோவுரின் மாணவர் டாக்டர்.காலோ பொண்சேகாவும், மாணவர்களும் இன்றும் அதை தொடர்கிறார்கள்.

<img src='http://www.uni-giessen.de/~gk1415/kovoor4.jpg' border='0' alt='user posted image'>
He who does not allow his miracles to be investigated is a crook,
he who does not have the courage to investigate a miracle is gullible,
and he who is prepared to believe without verification is a fool.
- Dr Abraham T. Kovoor -

<span style='font-size:22pt;line-height:100%'>
I invite miracle performers like <b>Satya Sai Baba</b>, Pandrimalai Swamigal, Neelakanta Tathaji, Nirmala Devi Srivastava, Pujya Dadaji, Dattabal, Triprayar Yogini. Gtirudev Anandamurthi, Kamubhai, Chinmayanand, Acharya Rajneesh, Muktanand, Swami Rama, Swami Haridas, Sivabalayogi, Bhagavan Gnanananda, Gurumaharaj-ji, Maharshi Mahesh Yogi, Hazarath Ali, Dr. Vadlaimudi, C. S. Teerthangar, R.P.Tiwari, Uri Geller, Ne1iya Michailova, Jeane Dixon, Sybil Leek and the numerous \"professors\" of astrology and palmistry, in India and numerous other gurus, swamijis, mahatrnas, acharyas, andas, babas and bhagavans who have found fresh pastures and wealthier gullibles in Western Countries, to take up my challenge and prove to skeptics like me that they are not hoaxers.

(From B. Premanand SCIENCE VERSUS MIRACLES - VOL - I)</span>
இதோ தொடுப்பு:
http://www.indian-skeptic.org/html/kovoor.htm
Reply
#4
அற்புதங்களையே ஆண்டவன் என்று நம்புவர்கள் இருக்கும் வரை இவை தொடரும் அஜீவன் அண்ணா
\" \"
Reply
#5
þÐ ÀüȢ §ÁÖõ Å¢ÀÃí¸¨Çò ¾¡Õí¸û அஜீவன்
Reply
#6
<span style='color:red'>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

அது எந்த வகையிலும் தகும் .....................

ஆனால்
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
என்ற MGRன் அடிமைப் பெண் பாடல் வரிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

சிலரை
சில காலம் ஏமாற்றலாம்
எல்லோரையும்
எல்லாக் காலமும்
ஏமாற்ற முடியாது.

இதுவே அரங்குக்கு வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

டாக்டர் கோவுருக்கும் சாயிபாபாவுக்கும் நடந்த போராட்ட சவால்களில் எனக்கு நினைவிலிருக்கும் சில துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இந்தியாவிலும் இலங்கையிலும் புட்டபர்த்தி சாயிபாபாவின் (சிறீ சர்டி சாயிபாபாவல்ல.) புதுமைகள் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கிய காலம்........................அது
:twisted: சாயிபாபாவின் படங்களிலிருந்து திருநீறு கொட்டுகிறது.
:twisted: பாபாவின் படத்துக்கு சாத்தும் மலர்கள்; வாடாமல் இருக்கிறது
என்று செய்திகள் பரவிய போது பாபாவின் பக்தர்கள் வீடுகளுக்கு மக்கள் திரளாகப் போய் இவற்றைப் பார்க்கத் தொடங்கினார்கள்.

Confusedhock: ஒரே பரபரப்பு.....................
Confusedhock: பத்திரிகைகளில் இது பற்றிய தொடர் செய்திகள்.
Confusedhock: கேட்டதெல்லாம் கிடைக்கிறது.
Confusedhock: பாபா ஒரு பக்தருக்கு ராடோ கைக்கடிகாரம் ஒன்றை அவரது சக்தியால் கணப் பொழுதில் எடுத்துக் கொடுத்தார்.
Confusedhock: குழந்தைப் பேறற்றவர்களுக்கு குழந்தை வரம் கொடுக்கிறார்.....................
இப்படி ஏகப்பட்ட வதந்திகளும் செய்திகளும்..........

தந்தை பெரியார் தரப்பினர் தமிழகத்தில் இவற்றுக்கெதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தந்தை பெரியாரின் நண்பரான டாக்டர் கோவுர் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதிலும் ஏமாற்றுக்காரர்களை நேருக்கு நேர் அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று தோலுரிப்பதிலும் முன்னணியில் நின்ற மனோதத்துவ வைத்தியராக & நிபுணராக இருந்ததால் இலங்கையிலும் உலக அரங்கிலும் இவைகளைப் பற்றிய உண்மைகளைப் பரப்பினார்.
(இலங்கையின் சிங்கள மாந்திரீகர்களுடனும்தான்)

இருப்பினும் இன்னும் இவற்றை நம்புவோரும் இவரது பக்தர்களும் அதிகரித்திருப்பதற்கு காரணம் ஏமாறுபவர்களும் பகுத்தறிவற்று உணர்ச்சிகளுக்கு முதன்மையளிப்பவர்களும் பெருகியிருப்பதேயாகும்.

1960களில் இலங்கை வரவிருந்த சாயிபாபாவுக்கு கோவுர் விடுத்த சவால் என் எதிரில் தாங்கள் செய்யும் புதுமைகளை இலங்கை மக்களுக்கு செய்து காட்ட வேண்டும்.

உங்களைப் போல் என்னாலும் அவற்றை செய்து காட்ட முடியும்.
(இலங்கையில் பல மேடைகளில் கோவுர் இவற்றைச் செய்து, இவற்றை எப்படிச் செய்வது என விளக்குவது இவரது பண்பு.
(அக் காலத்தில் தொலைக்காட்சிகள் இருக்காதது வேதனையாக இருக்கிறது.இவை சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் சினிமா சுருள்கள் இருக்க வேண்டும்.)

Quote:[size=15]\"நீங்கள் இலங்கை வரும் போது,
நீங்கள் ஒரு பக்தருக்கு உங்கள் சக்தியால் கொடுத்த ராடோ கைக்கடிகாரம் போல ,
எனக்கு ஒரு வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் வரவழைத்துத் தர வேண்டும்.\"

:?: \"உங்கள் தலைக்குள் அல்லது அங்கிக்குள் ஒரு கடிகாரத்தை மறைக்கலாம் ,
ஒரு மோட்டார் சைக்கிளை எப்படி மறைக்கிறீர்கள் என்று பார்க்க ஆசை................\"
என்று சவால் விட்டார்.</span>

இப்படியான சவால்களால் இலங்கை வருவதாக இருந்த சாயிபாபா வரவேயில்லை.
கோவுரின் மாணவர்கள் இருப்பதால் இன்றும் இவரால் வர முடியவில்லை.

அவர் இலங்கை வராததால் கோவுர் 1970களில் ( திகதிகள் ஞாபகமில்லை) கோவுருக்கு பாதுகாப்பு வழங்க முடியாதென்று இந்திய அரசு கூறியதைக் கூட சட்டை செய்யாது சாயிபாபாவின் கோட்டையான புட்டபர்த்திக்கு தடைகளையும் மீறி தனது ஆதர்வாளர்களுடன் (தி.க. மற்றும் இந்திய-உலக பகுத்தறிவாளர்களுடன்) சென்ற போது சாயிபாபா வெளியே வராமல் ஒளிந்து கொண்டார்.

முதலில் பாதுகாப்பளிக்க மறுத்த இந்திய அரசு இந்திரா காந்தியின் பணிப்பின் பேரில் கோவுருக்கு போலிசாரின் பாதுகாப்பை அளித்தது.

அங்கேதான் பாபா செய்யும் அதே சாகச விளையாட்டுகளை பாபாவின் கோட்டைக்கு முன்னால் கோவுர் செய்து காட்டி விளக்கினார்.ஆனாலும்..................?

<span style='color:red'>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

____________________________________________________________________________________________________________
குறிப்பு:

டாக்டர் கோவுர் ஆரம்பத்தில் யாழ்நகரிலும் பின்னர் கொழும்பிலும் வாழ்ந்தார்.

இவரது டயறிக் குறிப்புகள் வீரகேசரி தமிழ் பத்திரிகைகளில் தொடராக வந்து, பின்னர் வீரகேசரிப் பிரசுரங்களாக [size=18]மனக் கோலம் </span>என்ற பெயரில் புத்தகங்களாக வெளியாயின.

இது தவிர இலங்கை தமிழ் வானோலியில் (யாழ்-அண்ணா கோப்பி நிறுவனத்தின் ஆதரவில் வரணியுூரான் அல்லது கே.எம்.வாசகர் தயாரித்தது என நினைக்கிறேன்) நாடகங்களாக ஒலிபரப்பாகின.

இவரது மனோவியல் பிரச்சனை சம்பந்தமான ஒரு தம்திகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை புணர்ஜென்மம் (முத்துராமன் நடித்தது) எனத் தமிழிலும் சினிமாவாகியது................

Quote:மாஜிக் செய்யும் டேவிட் கொபர்பீல் போன்றவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால் அவரும் ஒரு பாபாவாகியிருப்பார்.http://www.davidcopperfield.com/
Reply
#7
ஏற்கனவே முன்பு இதுபற்றி நிறைய எழுதியுள்ளோம். http://www.yarl.com/kalam/viewtopic.php?t=859
<b>
?

?</b>-
Reply
#8
தகவல்களுக்கு நன்றி அஜீவன். நீங்கள் சொல்வது போல ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இப்படி நடக்கத்தான் செய்யும்.
Reply
#9
<img src='http://www.yarl.com/forum/files/sai1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/sai2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/sai3.jpg' border='0' alt='user posted image'>

1. முதலில் தண்ணீர் குடிப்பது போல பாவனை
2.லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக் கும் கைக்குட்டையை கையிலெடுக்கிறார்.

3. வாயைத் துடைப்பது போல் பாவனை

4. அப்படியே லிங்கத்தை வாயினுள் திணிக்கிறார்.

கவனிக்க: இடதுகை விரல்கள்

5. வாய்க்குள் லிங்கம் சென்றதும் முகத்தைத் துடைப்பது போல் ஒரு நடிப்பு. 6. மீண்டும் தண்ணீர் நடிப்பு

5,6,7-படங்களில் கவனியுங்கள் உதவியாளரின் பரபரப்பு.

7. வாந்தி எடுப்பது போல் நடிப்பு

8, 9 வாயில் வைத்திருந்த லிங்கம் வெளியே வருகிறது.


<img src='http://www.yarl.com/forum/files/sai5.jpg' border='0' alt='user posted image'>
இருமல் வரவழைத்துக் கொண்டு கைக்குட்டையை எடுத்து முகம் துடைப்பது போல் அதனுள் இருக்கும் லிங்கத்தை வாயினுள் திணித்துவிட்டு பின்னர் சிறிது நேரத்திலேயே வழக்கம் போல லிங்கத்தைக் கக்குகிறார். எப்போதும் முன்புறம் பார்வையாளர்கள் தள்ளியே அமர வைக்கப்பட்டு
இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் கைக்குட்டை இல்லாமல் பாபாவால் லிங்கம் கக்க முடியாது.

ஏனெனில் லிங்கம் கைக்குட்டையில் தான் இருக்கிறது.

<img src='http://www.yarl.com/forum/files/sai6.jpg' border='0' alt='user posted image'>

விபூதி வழங்கும் மோசடி
1. இடது கையில் வைத்துள்ள விபூதி உருண்டைகளுக்கு மேல் பக்தர்களி டமிருந்து காகிதக் கவர்களை வாங்கி வைத்து மறைத்துக் கொள்ளுகிறார்.

2. இடது கையிலிருக்கும் விபூதி உருண்டை வலது கைக்கு மாறுகிறது.

3. விபூதி உருண்டை நசுக்கி தூளாக்கப்படுகிறது.

4..பக்தர்களுக்கு விபூதி வழங்கல்.

கடவுள் அவதாரம் எனக்கூறிக் கொள் ளும் சாயிபாபாவை பல ஆண்டு களாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தி வருவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல முறை சாயிபாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். பாபா செய்யும் மேஜிக்கு களை தி.க. பிரச்சாரகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்து காட்டி வருகின்றனர். நாம் இப்படிப் பகுத்தறிவு பரப்புரைகளை செய்து வரும் நிலையில் சாயிபாபாவின் முன்னாள் சீடர்கள் இணைய தளத்தில் இந்த வேலையை செய்து அசத்தியுள்ளனர். முன்பு ஒரு முறை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சாயிபாபா முன்னாள் சீடர் மலேசியாவைச் சேர்ந்த ஹரிராம் ஜெயராம் என்பவர் சாயிபாபா வின் மோசடி குறித்து தனது கருத்தை கடிதம் வழி எழுதியிருந்தது இங்கு நினைவு கூறத் தக்கது.

இப்போது இவரைப் போன்றே சில சீடர்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த தனி இணைய தளத்தையே துவக்கியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதிலுள்ள படங்க ளையே இங்கே கொடுத் திருக்கிறோம். வீடியோ படமாக இணையத்தில் இந்தப் படம் வழங்கப்பட்டுள்ளது.

சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக் கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறையச் செய்திகள் காணப்படுகின்றன.

1960-களிலேயே அங்கொன் றும் இங்கொன்றுமாகச் சில கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இணைய தளத்தில், டேவிட், மற் றும் ஃபயே பெய்லி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் (Findings) எனும் அதிகார பூர்வமான ஆவ ணம் இங்கு முதல் இடத்தைப் பெறுகிறது. அது இணைய தளத்தில் தோன்றியது முதல் பல செய்திகள் அடுத்தடுத்து வந்தன. பக்தர்கள் கோபத்துடனும் குழப் பத்துடனும் தங்களுடைய நிலையை வெளிப்படுத்தினர். ஆனால் சாய்பாபாவின செயல் களுக்கு இலக்கானவர்கள், அவற் றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பாராட்டுதல்களைத் தெரிவித்த னர்; இதுவரை எதையும் வெளிப் படுத்தாமல் இருந்தவர்கள், இப் பொழுது தைரியமாகத் தங்களு டைய அனுபவங்களைகூட முன் வந்தனர். டேவிட் மற்றும் ஃபாயே பெய்லி நீண்டகாலம் சாய்பாபா வின் பக்தர்களாக இருந்தவர்கள். தவறான பாலியல் உறவு, மோசடி, கொடுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றுடன், சாய் பாபாவைக் கொலை செய்ய முயன்ற ஒரு செய்தியை அவர்கள் சொல்லு கிறார்கள். அதன் விளை வாகப் பல முக்கியமானவர்கள் சாய்பாபா இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.

பெய்லியின் கண்டுபிடிப்பு களும், அவற்றிற்கு முன்னும் பின் னும் சொல்லப்பட்ட ஒவ்வொன் றும் இந்த இணையதளத்தில் ஆங்கில மூலத்தில் தரப்பட்டிருக் கிறது. முந்தைய பக்தர்கள் டச்சு மொழியில் கொடுத்துள்ள செய்தி கள் ஆங்கில மொழி பெயர்ப்பு களாகத் தரப்படும்.

சொல்லப்படும் செய்திகளை நம்ப முடியாமல் தலையாட்டுப வர்கள்கூட, திறந்த மனத்துடன் இணைய தளத்தைத் தொடர்ந்து படிப்பார்கள் என நம்புகிறோம். தங்களுடைய சொந்த ஆராய்ச் சியை மேற்கொள்ளத் தொடங்க ஆவல் கொள்ளுவார்கள் எனவும் நம்புகிறோம். உதவி செய்யவும் மேற்கொண்டு தகவல்களைத் தரவும் பலர் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

பாபாவின் போதனைகளில் முக்கியமாக வரும் பாலியல் பக்த ரின் ஆன்மீகக் கண்ணோட்டத் தைக் குறைந்துவிடுகிறது. அவரின் ஆ°ரமத்தில் ஆண்களும் பெண் களும் தனித் தனியாகத்தான் தங்க வைக்கப் படுகின்றனர். திருமண மான தம்பதிகள் மட்டும் சேர்ந்து இருக்கலாம். கடந்த சில ஆண்டு களாக இது மாறிவிட்டது. ஆண் பக்தர்களை மட்டும் பாபா தனியாக அழைத்து தரிசனம் தருகிறார். அப்போது எவரும் உடன் இருப்பதில்லை. எந்தப் பெண்ணையும் அவர் தனியாக அழைத்துப் பேசவதில்லை.

பாபாவின் ஓரினச் சேர்க்கை பற்றி முதன் முதலாக எழுதிய அமெ ரிக்கக்h தால் ப்ரூக் 1970-71-இல் பாபா வுடன் ஒன்றரை ஆண்டுகள் தங்கி யிருந்தார். தனி தரிசனங்களின் போது பாபா அவரைத் தழுவிக் கொண்டு அவரது பாலுணர் வைத் தூண்டினார் என்று அவர் கூறினார்.

1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சி னையை எழுப்பினர். சாயிபாபா தங்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள் ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த போது, பாபா தங்களைக் கெடுத்து விட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் ஹார்ட் என்பவர் 1990 இளவேனில் காலத்தில் பாபா வைத் தனியாகச் சந்தித்தபோது அவரைத் தழுவிக் கொண்ட பாபா அவரின் உறுப்பைத் தூண்டிவிட் டதாகக் கூறப்பட்ட பிரச்சினை ஹாலந்தில் 1992 ஜனவரியில் பேசப்படத் தொடங்கியது.

கடந்த ஆண்டு இதுபோன்ற பல கதைகள் வெளிவந்தன. இண் டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து 20 புகார்கள் பட்டியலிடப்பட்டுள் ளது. இவற்றில் 10 நிகழ்ச்சிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களே நேரில் கூறியுள்ளனர். மற்ற 10 நிகழ்ச்சிகளில் இரண்டாம் தரப்பு மனிதர்கள் தகவல் தந்துள்ளனர்.

இத்தகைய தனிச் சந்திப்புக ளின்போது பாபாவுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக அமெ ரிக்காவைச் சேர்ந்த தால் ப்ரூக், சாம், யங், 15 வயதுச் சிறுவன், °வீ டன் நாட்டைச் சேர்ந்த கான்னி லார்சன் இங்கிலாந்தின் கெயித் ஹார்டு, இரானின் செயித் கொராம் ஷெகல், ஜெர்மனியின் ஜென்° சேத்தி, ஆ°திரேலி யாவின் ஹான்° டி க்ரேகர் ஆகிய 8 பேர் நேரடியாகத் தகவல் தந்துள்ளனர்.

பாபாவுடன் 16 ஆண்டுக ளாகப் பாலியல் உறவு கொண்ட தாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பாடியா தெரிவித்துள் ளார். 1986-இல் பாபாவைச் சந் தித்த 23 வயது °வீடன் இளை ஞர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்), இங்கிலாந்து நாட்டு மைக்கேல் பெண்டர் (பின் னர் தற்கொலை செய்து கொண் டார்) 1989-இல் பாபாவைப் பலமுறை தனியாகச் சந்தித்தவர், °வீடன் நாட் டைச் சேர்ந்த 18 வயதுச் சிறுவன் 1998-1999-இல் பாபாவை 8 முறை தனியாகச் சந்தித்தவன், மற்றும் இந்திய மாணவர்கள் பலரும் சாய்பாபா தங்களுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டு தகவல் தந்துள்ளனர்.

பாபாவைத் தனியாகச் சந்தித்த போது தங்களின் உறுப்புகளைத் தூண்டிவிட்டதாக அbரிக்கா வின் எம்.டி., ஜெட் கெயர்ஹான், நெதர்லாந்தின் மாத்திஜி° வான் டெர் மீர், இங்கிலாந்தின் டேவிட் பால் டிப்மெக் ஆகியோர் தகவல் தந்துள்ளனர்.

இவை தவிர பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்க ளின் குடும்பத்தினர் என ஏராள மானவர்களின் குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் குவிந்துள்ளன. அத்தனையும் எழுத பக்கங்கள் போதாது. என்றாலும் உண்மை தொடர்ந்து அவைகளை வெளி யிடும்.

வெகு மக்களைச் சென்றடை யும் ஊடகங்கள் இது போன்ற உண்மைகளை வெளியிடத் தயங் குகின்றன. டெகல்கா.காம் இணைய தளம் பா.ஜ.வினர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல் இந்த சாய்பாபா முன்னாள் சீடர்களின் இணையதளமும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


-இளையமகன்,


கு.வெ.கி.ஆசான், த.க.பாலகிருட்டிணன் உதவியுடன்.
நன்றி: http://www.unmaionline.com/
<b>
?

?</b>-
Reply
#10
தகவலுக்கு நன்றி.
Reply
#11
தெளிவான தகவல்களுக்கு நன்றியண்ணா.


சாமிவேடம் போட்டு.............. :evil:
ஆனால் பல பக்தர்கள் பாபா மீது அதிக பக்தி வைத்திருக்கிறார்களே. பாபாவின் அற்புதங்கள் என்றெல்லாம் ஆச்சரியத்துடன் அதிசயமாக சொல்லுவார்களே. :?: :evil:
----------
Reply
#12
vennila Wrote:ஆனால் பல பக்தர்கள் பாபா மீது அதிக பக்தி வைத்திருக்கிறார்களே. பாபாவின் அற்புதங்கள் என்றெல்லாம் ஆச்சரியத்துடன் அதிசயமாக சொல்லுவார்களே. :?: :evil:
அவர் செய்வது அற்புதமல்ல மஜிக். அதை இந்த தளத்தில் தெளிவாக விடியோ மூலம்
விளக்கியுள்ளனர். இந்த பக்கத்தை போய் பாருங்கள். பல விடியோ பதிவுகள் உள்ளன Arrow .
http://home.hetnet.nl/~ex-baba/engels/movies.html


சாய்பாபாவின் மஜிக் தெளிவாக தெரியும் விடியோ இது. சாய்பாபாவின் உதவியாளர் கையிலிருந்து பாபாவின் கைகளுக்கு சங்கிலி மாறுவதை தெளிவாக காணலாம். Arrow Arrow http://www.rfjvds.dds.nl/videos/baba2.ram
Reply
#13
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)