01-14-2005, 08:03 PM
200 கி.மீ. தொலைவில் உள்ள தைவானுக்கு கடலில் பாலம்
சீனா திட்டம்
பீஜிங், ஜன. 14_
சீனாவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள தீவு தைவான். 1949_ம் ஆண்டு நடந்த உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகு இந்த இரண்டும் பிளவு பட்டு தனித்தனி நாடுகளாகி விட்டன. இருந்தபோதிலும் சமீப காலமாக 2 நாடுகளுக்கு இடையே வர்த்தக தொடர்பு ஏற்பட்டு உள்ளது.
தைவானுக்கு கடலில் பாலம் அமைத்து சாலைப் போக்கு வரத்தை தொடங்கலாம் என்று சீன மந்திரி சுன்ஷியான் தெரி வித்து இருக்கிறார். 24 ஆயிரத்து 100 கோடி அமெரிக்க டாலர் செலவில் 20 அல்லது 30 ஆண்டு களில் இந்த பாலத்தை கட்டி முடிக்கலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அப்படி ஒரு பாலம் கட்டப் பட்டால் அது உலகத்தின் புதிய அதிசயமாக இருக்கும்.
அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தில் உள்ள செகண்ட் லேக் பாண்ட் சார்ட் ரெய்ன் பாலம்தான் உலகிலேயே மிக நீளமானது ஆகும். 38.4 கி.மீ. நீளம் உள்ளது ஆகும். இது 1969_ம் ஆண்டு கட்டப்பட்டது.