Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுயாட்சிக்கான தேவையை விடுதலைப் புலிகள்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>சுயாட்சிக்கான தேவையை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்: பிரான்ஸ் ஏடு புகழாரம்! </span>
பிரான்சிலிருந்து மீரா பாலகணேசன் புதன்கிழமை 19 சனவரி 2005 17:53 ஈழம்


இலங்கைத் தீவகத்தில் ஆழிப்பேரலை நிகழ்த்திய பின்னர் மக்களைப் பாதுகாக்கும் பராமரிக்கும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; உலகின் பார்வைக்கு சுயாட்சிக்கான நியாய காரணத்தையும் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் என பிரான்சின் பிரபல ஏடான மெட்ரோ தெரிவித்துள்ளது.

மெட்ரோ ஏடு தெரிவித்துள்ள கருத்துகள்:

ஆழிப்பேரலை ஓய்ந்த சில கணங்களில் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றினார்கள்.

கடலில் மிதந்த பிணங்களை மீட்டெடுக்கும் பணியிலும் மிகச்; சிறப்பாக இயங்கினார்கள். அவர்கள் முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைத்தனர்.

அதன்பின்னர் பாதுகாப்பு அரண்களை அமைத்து கொள்ளைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான செயல்களில் இறங்கி இருந்தார்கள். வாகனங்களில் காயப்பட்டவர்களை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச்; சென்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்தம் வழங்குவதிலும் அவர்கள் முன்நின்றார்கள். ஒளிää ஒலிப்பதிவுக் கருவிகளுடனும்ää கணனிகளுடனும் விடுதலைப் போராளிக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் முகங்களை புகைப்படம் எடுத்தார்கள். அடையாளம் காண்பதற்காக அவற்றை ஆவணப்படுத்தினார்கள்.

அதன் பின்னர் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கும்ää புதைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

'அவர்களின் இராணுவம் மிக நன்றாக வேலை செய்யும் திறன்மிக்கதாக இருந்தது என்று உதவி செய்வதற்காக தமிழீழத்திற்கு வருகை தந்திருந்த பிரித்தானியாவைச்; சேர்ந்த மருத்துவர் ரூபன் துரைராஜா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் அக்கறையாக இருந்தனர்.

இப்பேரழிவின் போது சிறிலங்கா அரசோ செயலற்றதாக இருந்தது.

1983ல் இருந்து இலங்கைத் தீவகத்தின் வடக்கிலும்ää கிழக்கிலுமாக விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடிவருகிறது.

இரத்தம் சிந்திய தற்கொடையின் மூலம் நன்கு அறியப்பட்டவர்களாக விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள்.

2002ம் ஆண்டிலிருந்து போர் நிறுத்தச்; செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஆழிப்பேரலைää இரண்டு முகாம்களுக்கிடையிலும் ஒரு சாமாதனத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்கு ஆதரவளிக்கலாம்.

ஒன்றாக வேலை செய்வதற்கான உடன்பாடுகளையும் எட்டலாம்ää சமாதானப் பேச்;சுக்களும் உருவாகி இலங்கையில் அவர்களிடையே ஒரு மாற்றம் நிகழலாம் எனவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.


நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
புனர் வாழ்வுக் கழகம் - விடுதலைப் புலிகள் நிவாரணப் பணிகளை கனடிய தேசிய தொலைக் காட்சி பாராட்டு

ரொறன்ரோவிலிருந்து இ.பத்மன் புதன்கிழமை 19 சனவரி 2005 20:30 ஈழம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தமிழர் புனாவாழ்வுக் கழகத்தினதும் விடுதலைப் புலிகளினதும் நிவாரணப் பணிகள் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கனடிய தேசிய தொலைக் காட்சி பாராட்டியுள்ளது.

சி.பி.சி தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆய்வாளர் பிரையன் ஸ்ருவேட் என்பவரே இந்தப் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

சி.பி.சி. தொலைக்காட்சி நேற்றிரவு ஒளிபரப்பிய செய்தித் தொகுப்பில் பிரையன் ஸ்ருவேட இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த கால போராட்ட அனுபவங்களும் கட்டுக்கோப்பான ஒழுங்கு முறைகளுமே இந்த நிவாரணப் பணிகளை வடக்கு கிழக்கி;ல் திறமையாக செயற்படுத்த முடிந்தது எனவும் பிரையன் ஸ்ருவேட் நேற்றைய ஒளிபரப்பில் தெரிவித்துள்ளாh.;

சுனாமியின் தாக்கத்தின் பின்னர் தென்னிலங்கை மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு சி.பி.சி தொலைக்காட்சி பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நேரடியாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையள் உங்கடை பாசையிலை இதுவும் புதினத்திலைதான் சுட்டது.

உலமெல்லாம் வாழத்துகிறது. உண்மையான பேப்பர்காரங்களுக்கு எல்லாம் விளங்குது. <span style='font-size:30pt;line-height:100%'>ஆனால் இஞ்சை கொஞ்சப்பேர் தாங்களும் பேப்பர்காரங்கள் எண்ணுகினம் தாங்களே தங்களுக்கு பத்திரிகைக்காரர் என்று பேர் வைச்சுக்கொண்டிருக்கினம் அவையளுக்குத்தான் இன்னமும் தெரியவில்லை( சிலவேளை தெரிஞ்சுகொண்டும் தெரியாததுபோல நடிக்கினமோ என்ன இளவோ?) அவையள்தான் த.வி.பு கழகத்தை கணக்கு கேட்கினம்</span>.பிள்ளையள் சுனாமியிலை அழிஞ்ச அழிவுகளை நினைக்கும்போது கண் கலங்குது.
ஆனாலும் அழிவிலைதான் எங்களை உலகமே புரிந்துகொண்டுள்ளது. பாருங்போவன் எல்லாநாட்டு பத்திரிகைகளும் புலிகளை போட்டிபோட்டுக் கொண்டு பாராட்டுது. ஒண்டின்ரை அழிவிலைதான் இன்னொன்று ஆரம்பம் என்கிறார்கள். அது உண்மைதான் போலுள்ளது.
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

[size=18]<b> !</b>
Reply
#3
எணேய் சின்னாச்சி பேப்பரிலை பேனையால எழுதுற எல்லாரும் பத்திரிகை காரரோணை.இதுகளைபாத்து வயிறெரிஞ்சு கொண்டிருப்பனம்.நானும்தான ஒண்டுஉங்களுக்கு தர எழுதிவைச்சிருக்கிறன்.ஆனா...............அப்புக்கு பயமாயிருக்கு
; ;
Reply
#4
[quote=shiyam]எணேய் சின்னாச்சி பேப்பரிலை பேனையால எழுதுற எல்லாரும் பத்திரிகை காரரோணை.இதுகளைபாத்து வயிறெரிஞ்சு கொண்டிருப்பனம்.நானும்தான ஒண்டுஉங்களுக்கு தர எழுதிவைச்சிருக்கிறன்.ஆனா...............அப்புக்கு பயமாயிருக்கு

அப்புக்குப் பயப்படற அளவுக்கு என்ன எழுதி வைத்திருக்கிறீங்க Confusedhock: :wink: :?:
----------
Reply
#5
எடதம்பி நீ எனரை பேரன்மாதிரி தப்பாகவே தரப்போறாய். உங்கினை தேசியத்துக்கு துரோகம் செய்கிறவையளையும் இணையத்திலை வம்பு செய்கிறவையளையும் பற்றி சொல்லுறதுக்க பயப்பிட்டு ஒளிச்சு தாறதுக்கு கடிதத்திலை எழுதிவைச்சிருப்பாய். எடபொடியா அப்புவுக்கு தனிமடலில் அனுப்பி வையடா தம்பி. இந்த மாதிரி வேலை செய்யிறவையை அப்புவுக்கும் பிடிக்காதடாதம்பி. நல்ல குடுவை குடுப்பார். உன்னாணையடா தம்பி மறந்து போகாமல் அப்புவுக்கு அனுப்பிவையடா தம்பி
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

[size=18]<b> !</b>
Reply
#6
இல்லை சின்னாச்சி ஒல்ட் இஸ் கோல்ட் கப்பெண்டு பிடிச்சிட்டியள்
; ;
Reply
#7
shiyam Wrote:எணேய் சின்னாச்சி பேப்பரிலை பேனையால எழுதுற எல்லாரும் பத்திரிகை காரரோணை.இதுகளைபாத்து வயிறெரிஞ்சு கொண்டிருப்பனம்.நானும்தான ஒண்டுஉங்களுக்கு தர எழுதிவைச்சிருக்கிறன்.ஆனா...............அப்புக்கு பயமாயிருக்கு

அப்புவின்ரை வாழ்க்கையிலை நீங்கள் தலையிடாதவரைக்கும் பிழைச்சியள் சியாம்.
:::: . ( - )::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)