01-29-2005, 10:54 AM
முருங்கைக் கீரையைத் துவட்டலாகச் செய்து உண்போம். குழம்பு வைப்போம். கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வேக வைத்து, வெந்த பருப்பு சேர்த்து மசித்து விடவும். முருங்கைக்கீரை மசியல் மிகவும் ருசியாக இருக்கும்.
--------------------------------------------------------------
அடைமாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். வீட்டில் சோள மாவு இருந்தால் சிறிது போட்டுக் கலக்கி அடை செய்யலாம். அடை மாவு சேர்த்தாற் போல் ஆவதுடன் அடையும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
---------------------------------------------------------------
பீன்ஸ் நிறைய வாங்கி வாடி வதங்கி விட்டதா? கவலைப்படாதீர்கள். குளிர்ந்த நீரில் அந்தப் பீன்சைப் போட்டு வைத்திருந்து பிறகு வெளியில் எடுத்து பொரியல் செய்து பாருங்கள். புத்தம் புது பீன்சில் செய்தது போலவே இருக்கும்.
--------------------------------------------------
எலுமிச்சை அல்லது சாத்துக்குடி பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு முன் பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின் சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.
-------------------------------------------------------
முட்டை ஆம்லெட் செய்யும்போது, சிறிதளவு வெண்ணெயையும் முட்டையை கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்து பாருங்கள். ருசியாக இருக்கும்.
----------------------------------------------------
காரட், முட்டைகோஸ் இரண்டையும் மெல்லியதாகச் சீவிக் கொள்ளுங்கள். அதில் உப்பு, எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறிது நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிட்டுப் பாருங்கள். சுவை நன்றாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும் போது உளுந்து மாவில் ஊறவைத்த துவரம் பருப்பை ஒரு கைப்பிடி கலந்து செய்தால் உளுந்து வடை சூப்பராக இருக்கும்.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>