Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அலறும் அந்தமான்
#1
தேதி : 1/2/05 (Tue) 12:00 am
அலறும் அந்தமான்

இந்தியாவில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று முன் தினம் நிலநடுக்கம் தொடர்ந்து பல மணி நேரம் நீடித்ததால், மக்கள் மரண பயத்தில் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு அஞ்சி அத்தீவில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள்
ஏற்கனவே தமிழகத்திற்கும், மேற்குவங்கத்துக்கும் சென்று விட்டனர். அங்கு தற்போது வசித்து வரும் பழங்குடியினத்தவர்களும், மற்ற சிலரும் கடும் பீதியில் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இருதினத்திற்கு முன் நள்ளிரவு 1.32 மணி தொடங்கி தொடர்ச்சியான நடுக்கம்
ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 என்று பதிவான இந்நிலநடுக்கம் விடிய விடிய பல முறை ஏற்பட்டதுடன்,மறுநாள் பகலிலும் தொடர்ந்தது.இதனால் மக்கள் பீதியுடன் தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

பூமிக்கு அடியில் உள்ள புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதே தொடர்ச்சியான இந்நிலநடுக்கத்துக்குக் காரணம் என்றும், எதிர்வரும் "ஏப்ரல் மாதம் வரையில் இந்நிலஅதிர்வுகள் தொடரும்' என்றும் சென்னைப் பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)