Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாஸ்து குறைபாடுகளை நீக்கி விடுகிறதாம் "அரவாணா" மீன்
#1
வாஸ்து குறைபாடுகளை நீக்கி விடுகிறதாம் நடிகர்கள் விரும்பும் "அரவாணா" மீன்


குன்னு}ர், பிப். 14- வாஸ்து குறைபாடுகளை நீக்கும் மீனான அரவாணா மீன்களை நடிகர்கள் விரும்பி வளர்த்து வருகிறhர்கள்.

தூக்கம் என்பது உயிரினங்களுக்கு இன்றியமையாதது. ஆனால் இரண்டு ஜவராசிகளுக்கு தூக்கம் என்பதே இல்லை. ஒன்று தரையில் வாழும் குதிரை. மற்றெhன்று நீரில் வாழும் மீன்களாகும். பல்லாயிரக்கணக்கான வகைகளை கொண்டது மீன். 25 வகை வைட்டமின்களை கொண்டது.

இரண்டு வகை மீன்களில் இருந்துதான் மீன் எண்ணை எடுக்கிறhர்கள். சுறh மீனில் இருந்து சார்க் லிவர் ஆயில் என்ற எண்ணையும், மத்தி மீனில் இருந்து சாடின் என்ற எண்ணையும் எடுக்கப்படுகிறது. வைட்டமின் மற்றும் அதிக சத்து மத்தி மீனில் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர்.

இனப்பெருக்கம் அதிகமாக உள்ளதால் இதன் விலை குறைவாக உள்ளது. இறhல் வகை மீன்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதால் மிக அதிக விலையாக உள்ளது.

வீட்டில் அழகுக்காக வளர்க்கும் மீன்களிலேயே பல ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. வீட்டில் மீன் தொட்டி வைக்கும் பழக்கம் தற்போது பரவி வருகிறது. அழகுக்காக மட்டுமின்றி தொட்டியில் உள்ள மீன்களை சிறிது நேரம் பார்ப்பதன் மூலம் டென்ஷன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைய உதவி புரிவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். வீட்டில் மீன் தொட்டி வைத்து பராமரிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பொறுப்புணர்ச்சி வளர உதவி புரிகிறதாம்.

சீன வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் இந்திய வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன் வளர்ப்பது தீய சக்திகளை விரட்டும் என சொல்கின்றனர். வீட்டில் படுக்கை அறை, சமையல் அறையில் வைக்காமல் வரவேற்பறை மற்றும் இதர அறைகளில் வைக்கலாம் என கூறுகின்றனர். வரவேற்பு அறையில் நாம் வெளியில் இருந்து பார்க்கும் நிலையில் இடது பக்கமாக வைக்கவேண்டும். கூடுமானவரையில் மீன் தொட்டியில் Nரிய வெளிச்சம்படாமல் வைப்பது தொட்டியில் பச்சை நிற பாசி படியாமல் இருக்க உதவும் என்கின்றனர்.

மீன்களில் வாஸ்து மீன் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறதாம். …அரவாணா† என்ற பெயர் கொண்ட இவ்வகை மீன்கள் தென்ஆப்பிரிக்காவில் உள்ள அமேசான் நதியில்தான் அதிகம் கிடைக்கிறது. முதன்முதலில் சீனர்கள்தான் இதை அதிகமாக பயன்படுத்தினார்கள். இவை …பென்சுய்† எனப்படும் சைனீஸ் வாஸ்து மீன்களாகும். இவற்றை சீனர்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். இவற்றை வீட்டிலும், கடைகளிலும் மற்றும் அலுவலகம் முதலிய இடங்களில் வளர்ப்பது மிகவும் நல்லது என நம்பப்படுகிறது.

இவற்றை வளர்ப்பதால் வாஸ்து முறைப்படி ஏற்படும் குறைகள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டு ஹhலில் வடகிழக்கு (ஈசானம்) மூலையில் இந்த மீன் தொட்டிகளை வைத்துவிட்டால் ஒரு வருட காலத்துக்குள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வகை மீன்கள் சில்வர், கிரீன், ரெட், சில்லிரெட் உள்பட 7 வகைகளில் கிடைக்கிறது. இந்த மீன்கள் 4 அங்குலம் முதல் 4 அடி நீளம் வரை வளரும். குளத்தில் வளர்த்தால் 6 அடி வரை வளரும். இதன் வாழ்நாள் 50 ஆண்டுகள். 12 வயது வரை அரவாணா மீன்களுக்கு மாலி எனப்படும் சிறிய மீன்களையும் கோல்டு பிஷ் எனப்படும் மீனையும் வழங்கவேண்டும். நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 வரை இதற்கு தேவைப்படுகிறது.

12 வயதுக்கு மேல் அரவாணா மீன்கள் மாட்டு இறைச்சி ஸ்லைஸ், ஆட்டுக்கறி ஆகியவற்றை சாப்பிடுமாம். இவ்வகை மீன்களை பிரபல நடிகர்களும், புகழ் பெற்ற டாக்டர்களும் அதிக விலை கொடுத்து வாங்கி வீட்டில் வளர்க்கிறhர்கள்.

குன்னு}ரில் தற்போது அரவாணா மீன்களை பலர் வாங்கி செல்கிறhர்கள். இவ்வகை மீன் 600 ரூபாயில் இருந்து ரூ.1 லட்சம் வரை உள்ளாக கூறப்படுகிறது.

Dinakaran
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இவை தானா அந்த லாட்டரி எண்களை காட்டும் மீன்கள்...என்னுடைய சீன நண்பர்கள் சொல்லுவார்கள்...ஜோடியாக தானே வளர்ப்பார்கள்..
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)