Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. செயலாளரிடம் இலங்கை ஆட்சேபம்!
#1
ஐ.நா. செயலாளரிடம்
இலங்கை ஆட்சேபம்!
கெளசல்யன் கொலையைக் கண்டித்ததற்காக

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவிருந்த லெப்ரினன்ட் கேணல் இ.கெளசல்யனின் படுகொலைகளை ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கண்டித்ததை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக ஆட்சேபித்திருக்கின்றது.
இலங்கை அரசின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி பேர்னாட் குணதிலக நேற்றுமுன்தினம் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அலுவலகத் திடம் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ ஆட்சேபனையைத் தெரிவித்தார்.
மற்றைய பல நாடுகளினால் தடைசெய் யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உறுப் பினர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஐ.நா.செய லாளர் நாயகம் கண்டித்து, இரங்கல் செய்தி விடுப்பது முறையற்றது என இலங்கை அரசு தனது ஆட்சேபனையில் தெரிவித்திருக்கின்றது எனத் தெரியவந்தது.
மேற்படி கொலைகளை ஐ.நா. செயலாளர் கண்டித்ததைத் தேசப்பற்றாளர்களின் தேசிய இயக்கம், ஜே.வி.பி. போன்ற பெளத்த, சிங்களப் பேரினவாத அமைப்புகளே எதிர்த்துவந்தன.
ஐ.நா. செயலாளரின் கண்டன அறிக்கையை ஆட்சேபித்து இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சர் லசஷ்மன் கதிர்காமரை மிக அண்மையில் அவரது அலுவலகத்தில் சந் தித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
அதேவேளை -
அவர்களது கருத்துக் குறித்து கவனத்தில் எடுத்து உரிய பதில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அமைச்சர் கதிர்காமர் உறுதியளித் திருந்தார்.
அதற்கு அமையவே, வெளிவிவகார அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரி கின்றது.
வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டல் களுக்கு அமைய இலங்கை அரசின் ஆட்சேப னையை ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி பேர் னாட் குணதிலக ஐக்கியநாடு செயலாளர் நாய கத்தின் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தினார் என அறியவந்தது.

Source : Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
«Ð¾¡§É.. Â¡Õ «Åí¸û Òò¾÷Ã ÅÆ¢Â¢Ä Åó¾ ÀñÊÂû ¾¡§É º£ Àñ¼¡ì¸û ¾¡§É.. ¯ôÀÊ «È¢ì¨¸¸û Å¢¼¡ðÊ ¯Ä¸ ¿¡Î¸ÙìÌ ±ôÀʦ¾Ã¢Ôõ ¿¡í¸û (À¢ì̸û, ¿¡Á) ´Õ ¸¡ðÎÁ¢Ã¡ñʸû ±ñÎ?? :wink: :? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)