Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்திய குடியுரிமை?
#1
பிப்ரவரி 20, 2005

தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்திய குடியுரிமை?

கொல்கத்தா:

பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க குடியுரிமை கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.


வங்கதேசத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீன், இஸ்லாம் குறித்து எழுதிய ஒரு நூலுக்கு அந் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவருக்கு சில தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்தன.

இதனால் கடந்த 1994ல் அவர் வங்க தேசத்திலிருந்து வெளியேறினார். தற்போது சுற்றுலா விசாவில் இந்தியாவில் தங்கியுள்ள இவர், நிரந்தர குடியுரிமை கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

இவரது விண்ணப்பத்தை பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறியுள்ளார்.

என்னுடைய கோரிக்கையை இந்திய அரசு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். முழு குடியுரிமை கிடைக்காவிட்டாலும் ஐந்து வருடங்களுக்காவது இந்தியாவில் தங்க அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் இவர்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)