Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் படங்கள் மீது "பெயின்ட்' விசிறிய கும்பல்
#1
புலிகளின் படங்கள் மீது
"பெயின்ட்' விசிறிய கும்பல்
கண்டியில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியில்!
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட் டில் "சமாதானத்தில் ஏ-9 பாதையின் முக்கியத் துவம்' என்ற தொனிப் பொருளிலான புகைப் படக் கண்காட்சி ஒன்று கண்டி "குயின்ஸ்' விடு தியில் நேற்றுமுன்தினம் தொடக்கம் நடைபெற்று வருகிறது. மூவினங்களையும் சேர்ந்த ஏராள மான மக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வை யிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கண்காட்சியின் இரண்டா வது நாளான நேற்று கண்காட்சிக் கூடத்தினுள் புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள், அவர்களது நிர்வாகக் கட்ட மைப்புக்கள், மாவீரர்களினது புகைப்படங்கள் மீது பெயின்ட்டை "ஸ்பிறே' செய்து அசிங்கப்படுத்தி விட்டு நழுவிச் சென்றுவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்பாட்டாளர் கள், பொலீஸாரிடம் முறைப்பாடு செய்தனர். உடனடியாக அங்கு வந்த பொலீஸார் விசார ணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலை கண்காட்சி நிறைவடையும் நேரம்வரை பொலீஸார் பாதுகாப்பு வழங்கி னர்.பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிகையா ளரான வோல்ரர் யஹலரினால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற் றிருக்கின்றன.
இலங்கையின் சமாதானம் குறித்த பல்வேறு விடயங்கள், நிகழ்வுகள் யாவும் புகைப்படங் களாக சித்திரிக்கப்பட்டிருந்தன.
அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ நிலைகள் சம்பந்தமான புகைப்படங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)