03-16-2006, 09:53 PM
<b>இலங்கை சமாதான தூதர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் எரிக் சொல்ஹைம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/02/20060222162132upali.jpg' border='0' alt='user posted image'>
இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகளின் தலைமை அனுசரணையாளரான எரிக் சொல்ஹைம் தான் இப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் என்ற தனது புதிய பொறுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த முடிவு என்றும் ஆனாலும் இலங்கைய்ல் ஒரு நிரந்தர சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தான் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்றும் எரிக் சொல்ஹைம் கூறியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை சமாதான முயற்சிகளுக்கான நோர்வே தூதுக்குழுவின் தலைமை மத்தியஸ்தராகவும் சிறப்புத் தூதராகவும் இருந்துவருபவர் எரிக் சொல்ஹைம்தான்.
நோர்வேயில் சென்ற வருடம் பிற்பகுதியில் புதிய அரசு அமைந்தபோது எரிக் சொல்ஹைம் அந்நாட்டுக்கான சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, தலைமைப் அணுசரணையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அவர் இப்போது முடிவெடுத்துள்ளார். எரிக் சொல்ஹைம் பக்கச்சார்புடன் செயல்பட்டார் என்று இரண்டு தரப்புகளுமே விமர்சித்துவந்துள்ளன.
இப்படியான விமர்சனங்களால்தான் புதிய தூதர் நியமிக்கப்படுகிறார் என்ற கூற்றையும் அவர் மறுத்தார். தனது முடிவுக்கும் அப்படியான விமர்சனங்களுக்கும் தொடர்பும் இல்லை என்றார் எரிக் சொல்ஹைம்.
அமைச்சரான பிறகு தன்னால் முன்னைப்போலே இலங்கை விவகாரத்திலே நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும் ஆனாலும் இலங்கை விவகாரத்தின் முக்கியப் புள்ளிகளுடன் தான் நேரடியாக தொடர்பிலிருந்துவர திட்டமிட்டுள்ளதாவும் சொல்ஹைம் கூறினார்.
இலங்கை ஜனாதிபதிக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் தெரியப்படுத்திய பிறகுதான், புதிய தூதர் யார் என்று அறிவிப்போமென நோர்வேயில் உள்ள அனுசரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் ஜெனீவாவில் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி துவங்குவதற்கு முன்பாக புதிய தூதர் பொறுப்புக்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
-BBC tamil