Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு கையால் கொடுத்து மறுகரத்தால் எடுக்கப்படும் சர்வதேச உதவி'
#1
ஒரு கையால் கொடுத்து மறுகரத்தால் எடுக்கப்படும் சர்வதேச உதவி'

உதவி தேவைப்படும் மக்களுக்கு சர்வதேசம் வழங்குகின்ற உதவியின் ஐந்திலொரு பகுதியே அந்த மக்களைச் சென்றடைவதாகவும் அதிகாரிகளின் கெடுபிடிகள், செயல்திறனின்மை, உறவினர்களை பணிக்கமர்த்தி சலுகை செய்தல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் உதவி வழங்கும் அமைப்புகளிடமிருந்து கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேசமயம், இந்த சர்வதேச உதவியின் 40 சதவீதமானது உதவியை வழங்கிய நாடுகளிடமிருந்து அதிக விலையில் பொருட்கள், சேவைகளைப் பெறுவதற்கே செலவிடப்படுவதாகவும் `அக்சன்எய்ட்', `ஒக்ஸ்பாம்' ஆகிய உதவி வழங்கும் நிறுவனங்கள் திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளன.

அரசியல் ரீதியான இணக்கப்பாட்டு முறைமையில் மறு சீரமைப்பை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்து இந்த இரு நிறுவனங்களும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

தத்தமது சொந்த ஆலோசனையை உள்வாங்கக்கூடிய இடங்களுக்கும் தமது கைத்தொழில் உள்சார் கட்டமைப்புக்கும் மற்றும் பூகோள அரசியல் நலன் சார்ந்த கூட்டாளிகளுக்கும் இந்த உதவிகள் சென்றடைவதிலும் பார்க்க வறுமை ஒழிப்புக்காக உதவி எங்கு? யாருக்கு? தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அதனை வழங்க வேண்டுமென அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உதவிகள் சுற்றிச் சுழன்று உதவி வழங்கும் நாடுகளுக்கு சென்று சேர்வதில் மோசமான குற்றவாளிகளாக அமெரிக்காவும் இத்தாலியும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் உதவியில் 70 சதவீதமானவை அந்த நாடுகளின் கம்பனிகளையே சென்றடைகின்றன.

` தங்களின் தாராளத்தன்மையை விளம்பரப்படுத்திக்கொண்டு ஒரு கையால் கொடுத்து மறு கரத்தால் எடுப்பதே இந்த நடவடிக்கையெனவும் மற்றும் செயற்றிறனின்மையால் வருடமொன்று 7 பில்லியன் டொலர் விநியோகச் செலவு ஏற்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேவேளை, உதவி பெறும் நாடுகள் மீது நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை சர்வதேச நிதி நிறுவனங்கள் விதிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழு நடவடிக்கைகளையும் அரச நிர்வாக சிக்கலுக்குள் பிணைக்கும் நிலமை உள்ளதாகவும் அறிக்கையில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெடுபிடி யுத்தம் நிலவிய காலகட்டத்தில் உதவி வழங்கும் நாடுகள் தமது உதவியை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தின. இப்போது, அந்த முறைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் சிக்கல் நிறைந்ததாக உதவி வழங்கும் நடைமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன. ஊக்குவிப்புகள், உதவியில் தங்கியிருக்கும் நாடுகள், உள்நாட்டு ஆற்றலை உதாசீனம் செய்தல், ஒரு கையால் தடுத்து மறு கரத்தால் உதவுதல் போன்றதாக உதவி வழங்கும் முறைமைகள் இப்போது மாற்றம் கண்டிருக்கின்றன.

குறித்த ஒரு நாட்டின் அபிவிருத்தித் திட்டம் வெற்றியளிக்கிறதோ இல்லையா தங்கள் நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளிக்க வேண்டுமென்ற தன்மையே உதவி வழங்கும் நாடுகளிடம் காணப்படுகிறது.

மேலும், உதவி பெறும் நாடுகளின் உள்ளூர் விநியோக முறைமைகளை அடிக்கடி மீறிச் செயற்படும் தன்மையும் இந்த உதவி வழங்கும் அமைப்புகளிடம் காணப்படுகின்றன. இதன் மூலம் தமது சொந்தக் காலில் அந்த நாடுகளில் நிற்க முடியாத நிலைமையையும் இவை ஏற்படுத்தி விடுகின்றன.

உதவி வழங்கும் முறைமையில் காணப்படும் பாரிய சவால்கள் இவையாகும். வெளிப்படைத்தன்மை, பதிலளிக்கும் கடப்பாடு என்பன இந்த முறைமையில் ஏற்படுத்தப்பட வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)