03-21-2006, 11:47 AM
நல்லபாம்பை விழுங்கிய இன்னொரு நல்ல பாம்பு
ஜ×னாகட், மார்ச்.21-
குஜராத் மாநிலம் ஜ×னாகட் என்ற நகரத்தில் ஒரு மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு 8 கண்ணாடி அறைகளில் வித விதமான பாம்புகள் காட்சிக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அறையில் 6 அடி நீள நல்ல பாம்பும், 7 அடி நீள நல்ல பாம்பும் ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று திடீரென 7 அடி நீள நல்ல பாம்பு உடன் இருந்த 6 அடி நீள நல்ல பாம்பை அதன் தலையில் தாக்கியது. இதில் அந்த பாம்பு செத்தது. பின்னர் அந்த பாம்பை முதலில் தாக்கிய 7 அடி நீள நல்ல பாம்பு மெல்ல மெல்ல விழுங்கி முடித்தது.
இந்த சம்பவம் சுற்றுச் சூழல் வல்லுனர்களிடையே ஆச்சரியத்தையும், திகிலையும் ஏற்படுத்தி உள்ளது. சில நிபுணர்கள் கூறுகையில் கடும் பசி காரணமாக அந்த பாம்பு தன்னுடன் இருந்த பாம்பை கொன்றுள்ளது என்று தெரிவித்தனர். வேறு சிலரோ பாம்புகள் இரண்டும் சேரும் நேரத்தில் நடந்த சண்டையில் ஒரு பாம்பு இன்னொரு பாம்பை கொன்று தின்று இருக்கலாம் என்று கூறினார்கள்.
மிருகக் காட்சி சாலை அதிகாரி கூறுகையில் பாம்புகளை நாங்கள் தீவிர கண்காணிப்பில்தான் வைத்திருந்தோம். அவைகளிடையே எந்த வித முரண்பாட்டையும் நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
<img src='http://www.rth.org/sdzoo/Common%20cobra.jpg' border='0' alt='user posted image'>