Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகி போட்டி
#1
<b>சபாஷ் சரியான போட்டி...!</b>

என்ன போட்டி...? யாருக்குள் போட்டி....? எதற்காகப்போட்டி...? என்று கேட்கின்றீர்களா?
தமிழின் விரோதிகளில் யார் அதிமோசமான துரோகிகள் என்பதை நிரூபிப்பதற்கான போட்டியைத்தான் குறிப்பிடுகின்றேன்.

ஏற்கனவே இந்தியப்படைக்கு முன்னரான காலத்துத் துரோகிகள்இ பின்னரான காலத்துத் துரோகிகள் என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

எதிரிகளுக்கும்இ ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எடுபிடிகளாகி சலுகைகள் பெற்று கைக்கட்டிச்சேவகஞ் செய்து அவமானங்களை பட்டயங்களாக்கி அநாமதேயங்களாக்கி அழிந்தவர்களுமுண்டுஇ அடிமைகளா சுளமிழந்து வாழ்வோர்களுமுண்டு... அவர்களுக்குள்ளும் யார் எஜமான விசுவாசிகளில் சிறந்தவர்கள் என நிரூபிப்பதற்கான போட்டிகளும் இருந்ததுண்டு...

முகமிழந்து முகவரியற்றுப் போனவர்களை நினைவூட்டுதல் அசிங்கம்இ இப்போது இந்தப்போட்டியில் கடுமையாக களத்தில் இறங்கியுள்ளவர்கள் வேறு யாருமல்ல... கதிர்காமரும் சங்கரியாரும் தான்...

அண்மைக்காலமாக இருவரும் அடிக்கும் அறிக்கை லூட்டிகளில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் முத்திரை பதிப்பது முக்கியமான விடயம். கடந்த தேர்தலில் கட்டிய கோவணத்துடன் மக்களால் நிராகரிக்கப்பட்டு தமிழ்தேசிய அரசியலில் இருந்து ஓட ஓட விரட்டப்பட்ட ஆனந்த சங்கரியாருக்கு புகலிடம் பேரினவாதிகளின் திண்ணையாகிவிட்டது.

சங்கரியார் மீது அனுதாபம் காட்டி அவரின் தமிழ் தேசியத்திற்கு எதிரான பணியைக் கௌரவித்து அவருக்கு தேசியப்பட்டியலில் உறுப்பினர் பதவி வழங்கவேண்டுமென கூறியது ஹெலஉறுமய குழுவேயாகும். அதனால் மெய்சிலிர்த்துப்போன சங்கரியார் தலைமழிக்காத ஆனந்த சங்கர தேரராகவே தன்னை நினைத்து செயற்படத் தொடங்கிவிட்டார் என்றே கூற வேண்டும்.

சிங்களப் பேரினவாதிகளினதும் அயலக உளவு அமைப்புக்களிலும் கைக் கூலிகளாகிவிட்ட சங்கரியார் இப்போது கதிர்காமருக்குப் போட்டியாக அவரையே தூக்கிச் சாப்பிடும் வண்ணம் விடுதலைப்புலி எதிர்ப்பாளராக மட்டுமல்ல தமிழ் தேசிய எதிர்ப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டார்.

வாழ்க..!

பொதுக்கட்டமைப்பு தேவையில்லை. விடுதலைப்புலிகளின் கட்டப்பாட்டிலள்ள பகுதிகளுக்கு அரசு எந்த உதவியையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை... என்று சங்கரதேரர்(!?) அறிவித்ததன் மூலம் ஐயா எங்கேயோ போய்விட்டார்.

இதற்கு மேல் என்ன சொல்வது எனத் தெரியாமல் கதிர்காமர் கதிகலங்கிப்போய் விட்டார் போலிருக்கிறது...

எல்லாம் அடுத்த தேர்தலில் தேசியப்பட்டியலில் இடம்பிடிக்கத்தான் பாருங்கோ... பதவிப்பித்து தலைகப்கேறிவிட்டால் தன்மானமாவது.. இனமானமாவது...

சுட்டது சூரியன்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#2
பட்டுவேட்டி பற்றிய கனவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது
என்ற மு.மேத்தாவின் வரிகள்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)