Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.yarl.com/forum/files/dsc00288.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><i>குழந்தைகள் உன்னிடம் ஓடி வந்தார்கள்.
காதலர்கள் கால் நனைத்து ஓடித் திரிந்தார்கள்
முதியோர்கள் தன் பழமைக் காலத்தை பகிர்ந்து கொண்டார்கள்
இப்போது உன்னிடம் வர மட்டுமல்ல
உன்னைப் பார்க்கவே அஞ்சுகிறார்கள்</i>
கொலை பாதகர்களை கூண்டில் நிறுத்தி தண்டிக்கலாம்
உன்னை எங்கே நிறுத்தித் தண்டிப்பது?
முடிந்தால்
வழி சொல்
வழக்கொன்று தொடுத்து
உன்னை சிறையில் தள்ள.............</span>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
உயிர் தந்த உறவும் நீ தான்
உயிர் கொல்லியாகியதும் நீ தான்
ஜனனமும் உன் மடியில் தான்
மரணமும் உன்னிடத்தில் தான்
மாற்றானுக்கு
மரணப்படுக்கை விரித்த நீ
மாறி மழலைகளையும்
அரவணைத்துவிட்டாய்
நீ இன்றி மண்ணில்
மனிதர் இல்லை - ஆனால்
நல்ல மனிதர் இன்றி
நீ இருந்தும் பிரயோசனம் இல்லை
உன்னை போற்றிய
உள்ளங்களை
உன்னில் சுமக்கிறாய்
சுடுகாடாக மாறியே
" "
" "
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நல்ல கவிதைகள், வாழ்த்துக்கள்! அஜீவன் அண்ணா, வாழ்த்துக்கள்! மழலை தங்கை
Posts: 27
Threads: 2
Joined: Feb 2005
Reputation:
0
நல்ல கவிதைப்போக்கு.இருவருக்கும் வாழ்த்துக்கள்.
கண்மூடித்தூங்கவில்லை
கடலலையும் தூங்கவில்லை
கண்ணீரைத்தந்துவிட்டு கடல் நீரும் தூங்கவில்லை
கடல்தானே உறவென்றுவாழ்ந்தவரும் தூங்கவில்லை
தாங்குபவர் தூங்கிவிட்டார்ääசொல்லடியென் சிவசக்தி...
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
இருவரது கவிதையும் அருமை.
வாழ்த்துக்கள்...
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
வாழ்த்துக்கள்! அஜீவன் அண்ணா, வாழ்த்துக்கள்! மழலை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>யார் மேல் குற்றம்? - கருணாநிதி கவிதை</b>
சுனாமி அலை தாக்குதல் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:
கடற்கரையோரம் நின்று
கவிதைப் பயிர் விளைக்க
கற்பனைக் கலப்பை பிடித்து
கடல் அலையில் கவின் நிலவொளியில்
ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே!
சீராட்டும் தமிழில் என்னை
கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்...
அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர்
அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும்
கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின்
கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும்
தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்!
கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம்
ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம்
திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல்
தீய்ந்து போனதேனோ?
"சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்!
"பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்!
சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல்
சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல்
சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும்
மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து
மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர்
கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்;
குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன்
கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல்
குலவிளக்கு நான்;கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன்.
உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்-
உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக!
ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்!
கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது
கடலாம் என் குற்றம் ஆகி விடுமா?
நீவிர் அறிந்திடுக; "கடற்கோள்" அல்ல இது;
"நிலக்கோள்!"
நில மடந்தையின் சீற்றத்தால்தான்
"சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது.
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு
ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்?
அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும்
தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை
நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது-
அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே
பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம்
பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"-
"கடற்கோள்" அல்ல!
கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்-
காதலியை அணைத்துக் கொண்டு நீவீர்
கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது
மதிற்சுவர் இடிந்து காதலி, உமது கை விட்டுக்
கடலில் வீழ்ந்திறந்தால்-அது
மதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா?
மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா
ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட
அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன்
சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்-
கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது
கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை
பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை-
பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்!
நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை
கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்!
அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்;
பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!
நன்றி: தினத்தந்தி
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்
[b][size=18]