Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாத்தான்கள் ஓதும் வேதம்
#1
சாத்தான்கள் ஓதும் வேதம்

<b>கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுந்தம் போக முயன்ற கதையாய் சொந்த நாடு வெந்து தணிந்திருக்கும் போது இலங்கை இராணுவம் ஹெயிட்டியில் அமைதி காக்கப் போயிருக்கிறது.</b>அந்த வேலையை இலங்கையில் செய்தால் நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது.சரி பரவாயில்லை உலக நாடுகளின் இராணுவங்களுடன் சேர்ந்து போர் நிறுத்த வேளையில் அமைதியாயிருப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு வருவார்கள் என நினைத்தேன்.

ஒருவேளை வெளிநாட்டில் அமைதிகாக்கும் பணியிலாவது இன்னொரு இராணுவத்தாலோ போராளிக்குழுவாலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியிலாவது இலங்கை இராணுவம் வலி என்றால் என்னவென்று உணர்ந்து வருமென்று நினைத்தேன்.இப்போது பார்த்தால் அதற்கும் வழியில்லை போலிருக்கிறது.

ஹெயிட்டியில் இடம்பெற்ற மோதலொன்றில் அகப்பட்டு அமைதி காக்கச் சென்ற இலங்கை இராணுவ வீரர் இறந்திருக்கிறார்.அது இங்கேயிருக்கும் ஜே.வி.பி சிங்கங்களை உசுப்பி விட்டிருக்கிறது.எப்படி எங்கள் நாட்டு வீரன் இன்னொரு நாட்டுக்காய் உயிரைக் கொடுக்கலாம் இலங்கைப் படைவீரன் இலங்கையில் சாவதற்கே உரித்துடையவன் என்ற ரீதியில் ஜே.வி.பி ஹெயிட்டியிலிருந்து-ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையிலிருந்து-இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறது.இந்தக் கோரிக்கையை ஜே.வி.பியின் அரசியல் சபை அரசாங்கத்தை நோக்கி விடுத்திருக்கிறது.அரசாங்கம் யார் ஜேவி.பியும் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியும் இணைந்த கூட்டணி.தமக்குத் தாமே வேண்டுகோள் விடுப்பதிலும் தமக்கெதிடாக தாமே அறிக்கைகள் விடுவதிலும் ஜே.வி.பி பாட்டும் நானே பாவமும் நானே நடிகரையும் விஞ்சிவிடும் போலிருக்கிறது.

முல்லைத்தீவில் 1300 படை வீரர்கள் ஒன்றாக உயிரிழந்துள்ளார்கள்.ஆனையிறவில் 3000 பேர் ஓரிருநாள் இடைவெளியில் இறந்திருக்கிறார்கள்.உயிரிழப்புப் போக ஒவ்வொருவரையும் பயிற்றுவிக்கும் உழைப்பு பணம் என்று பலகோடி ரூபா அரசாங்கத்திற்கு இழப்பேற்பட்டிருக்கிறது.அப்போதெல்லாம் ஆடாத ஜே.வி.பி யின் சகோதர பாசம் இப்போது ஆடுகிறது.மக்கள் வரிப்பணத்தில் பயிற்றப்பட்ட படைவீரன் இன்னொருநாட்டிற்காய் உயிரிழப்பதைத் தாங்கள் விரும்பவில்லையாம்.அதே படைவீரன் தங்கள் அரசியல் தலைமைகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வடக்கு கிழக்கில் போராடி மடிந்தால் ஜே.வி.பிக்கு மெத்த மகிழ்ச்சி.அப்போது மக்கள் வரிப்பணம் வீணாய்ப் போகாது அது அவர்களின் சட்டைப் பையிலல்லவா இருக்கும்.

இப்போது இலங்கை இராணுவ வீரர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாயும் பரிதாபமாயும் இருக்கிறது.இன்னொருநாட்டில் அமைதி காக்கும் முயற்சியில் இறந்து போனதால் பெருமை.பாவம் அப்படி இறப்பதற்குக் கூட அவர்கள் ஜே.வி.பியிடம் அனுமதி பெறவேண்டியிருக்கிறதே.அவர்களுக்காக வடக்கு கிழக்கில் உயிர்விடவேண்டியிருக்கிறதே என்பதை எண்ணும் போது பரிதாபம்

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
யுத்தத்தில் இறந்த இராணுவத்தினர் அனேகம் பேரை காணமல் போனோர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள் அவர்களின் குடும்பங்களிற்கு மாதாந்தச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு சிப்பாய் இறந்து விட்டார் என்றால் இழப்பீடாக 5 இலட்சம் வழங்கவேண்டும். அரசாங்கத்திற்கு உள்நாட்டு வருவாய்காணாமல் போன இராணுவத்தால்எப்டியிருக்கு.அவர்களின் குடும்பங்களிற்கு இவையெங்கே புரியப்போகின்றது.
.
Reply
#3
அதிகளவான இராணுவ உடல்கள் விடுதலைப்புலிகளினால் ஒப்படைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவற்றையும் ஆட்சியிலிருந்தவர்கள் ஏற்க மறுத்து உதாசீனப்படுத்தியபோது இந்த ஜேவிப்பி என்ன பண்ணிக்கிட்டிருந்ததாம்?
.
Reply
#4
வடா தமபி மதன் வா இதைதான் தவத்தார் எதிர்பார்த்தது இப்படி ஏதும் சூடான விடதத்தோடு வந்தால் களமும் கொஞ்சம் விறு விறுப்பாக இருக்கும் கொஞ்நாள் போகட்டும் வீட்டை சமாளித்துக்கொண்டு அல்லது வீட்டிலை நித்திரை கொண்டாப்பிறகு வேட்டியை மடித்துக்கொண்டு நானும் சந்திக்கு வாறன் இந்த தவத்தான் வேட்டியை மடித்துக்கட்டினால் கேட்கவா வேணும் ..... என்ர பொடியளைக் கேட்டுப்பாருங்கோ தெரியும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)