04-04-2005, 06:23 AM
<b>நாள், எந்நாளோ!</b>
என்னுயிர்த்தாய் ஈன்றெடுத்த ஈழத்துச் சோதரனின்
எண்ணமெலாம் ஈடேறும் நாள் எந்நாளோ!
கண்ணிடையே நீர்பெருகக் காத்திருக்கும் அன்னவனின்
கனவெல்லாம் நனவாகும் நாள் எந்நாளோ!
வாழையடி வாழையென வாழ்ந்திருந்த யாழ்தரணி
வண்டமிழார் வசமாகும் நாள் எந்நாளோ!
ஈழமகன் வீறுடனே எழுந்தருள, இப்புவியின்
எண்டிசையும் புகழ்முழங்கும் நாள் எந்நாளோ!
சமன்செய்து சீர்தூக்கும் தமிழனுக்குத் தாய்மண்ணில்
சமஉரிமை வாய்க்கின்ற நாள் எந்நாளோ!
அமைதியெனும் நதிவெள்ளம் பெருக்கெடுக்க, அந்நதியில்
அருந்தமிழர் நீராடும் நாள் எந்நாளோ!
நெஞ்சினிலே ஈழமெனும் நெடியதொரு குடியிருப்பு
நிரந்தரமாய் வேரூன்றும் நாள் எந்நாளோ!
நஞ்(சு)இனத்தை வேரறுக்கும் நற்றமிழர்க் குடிப்பிறந்த
நம் சினத்தை ஊரறியும் நாள் எந்நாளோ!
கச்சத்தீ(வு) என்பதொரு தமிழ்நெய்தல் மண்ணின்கண்
காடையனைப் பழிதீர்க்கும் நாள் எந்நாளோ!
உச்சிவரை எதிரிகளை உதறலுற வைத்திடத்தான்
ஒருதருணம் நமக்குவரும் நாள் எந்நாளோ!
பீடுடைய தமிழருக்குப் பிழைசெய்த தீயவர்தம்
பிடரிமிசைப் பேரிடிவீழ் நாள் எந்நாளோ!
நாடுடையோம் நாமென்னும் நற்செய்தி கோலோச்ச,
நாற்புறமும் தமிழ்மணக்கும் நாள் எந்நாளோ!
அந்நியனாய் அலைந்துழலும் நிலைமாறி அருந்தமிழன்
அரசாட்சி புரிகின்ற நாள் எந்நாளோ!
பொன்ஈழம் மலர்கின்ற பொழுதொன்று கருக்கொண்டு,
புதுக்காற்று எமைத்தீண்டும் நாள் எந்நாளோ!
இறப்புதனை முத்தமிட்டும் இறவாதார் சந்ததியார்
ஈழத்தை முத்தமிடும் நாள் எந்நாளோ!
மறப் படையார் மாற்றார்முன் இறப்படையார் என்பதொரு
மணிமகுடம் வென்றெடுக்கும் நாள் எந்நாளோ!
தென்னிலங்கை மண்டலத்தில் செந்தமிழன் குரலுக்குத்
தென்றலும்தன் செவிசாய்க்கும் நாள் எந்நாளோ!
தன்இளங்கை தனைத்தன்றன் தாய்பிடிக்க, சுதந்திரமாய்த்
தமிழ்மழலை நடைபயிலும் நாள் எந்நாளோ!
என்தாயும் என்சேயும் எனைச்சார்ந்த எல்லாரும்
ஈழத்தைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ!
குன்றாத பொலிவோடு பறக்கின்ற யாழ்நாட்டின்
கொடிவணங்கி மெய்சிலிர்க்கும் நாள் எந்நாளோ
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->