Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில்
#1
அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அகதி முகாம்களில் தொடர்ந்தும் வாழ முடியாது

கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் மக்கள் முறையீடு

அகதி முகாமுக்குள் இரவு நேரங்களில் வரும் விசேட அதிரடிப் படையினர் ஆபாசமான ஆங்கிலப் படங்களை போட்டு விட்டு இங்குள்ள பெண்களுடன் தகாத முறையில் நடக்க முற்படுவதுடன் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். எனவே இவர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்.

இவ்வாறு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மண்டானை அகதி முகாமை பார்வையிடச் சென்ற தமிழ்க் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட பல போராளிகள் மண்டானை அகதிமுகாமில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அம் முகாமிலுள்ள மக்கள் விசேட அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருவதனால் அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான க.தங்கேஸ்வரிஇ க.கனகசபைஇ எஸ்.ஜெயானந்த மூர்த்திஇ பா.அரியநேத்திரன் ஆகியோர் சென்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அகதிமுகாமிலுள்ள மக்கள் மேலும் கூறியதாவது;

எமக்கு உதவி செய்ய வந்த குயிலின்பன் உட்பட இன்னும் சில போராளிகளை எமது முகாம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினர் மிக மோசமாகத் தாக்கினர். விசேட அதிரடிப் படையினரின் தாக்குதலை நாம் தடுக்கச் சென்ற போது எம்மை நோக்கி துப்பாக்கிகளை நீட்டி சுடுவோம் என மிரட்டினார்கள்.

அத்துடன் போராளிகள் வந்த ஹபிக்கப்' வாகனத்தினுள்ளே கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை வைத்துவிட்டு விசேட அதிரடிப் படையினர் புகைப்படம் எடுத்தனர். இதனை நாங்கள் கண்காணிப்புக் குழுவினரிடம் தெரியப்படுத்தியுள்ளோம். விசேட அதிரடிப் படையினரால் நாங்கள் பல இன்னல்களை அனுபவிக்கிறோம்.

இரவில் அகதிமுகாமில் அதிரடிப் படையினர் மோசமான ஆங்கிலப் படங்களை போட்டுக் காண்பிக்கின்றனர். இதேநேரம் பெண்களுடனும் தவறாக நடக்க முற்படுகின்றனர். சில பெண்களுக்கு இடுப்புப் பட்டிகளால் அடித்துமுள்ளனர். அத்துடன் இரவு வேளைகளில் திடீரென அகதிமுகாமுக்குள் நுழையும் அதிரடிப் படையினர் பெண்கள் படுத்துறங்கும் பகுதிகளில் ஹலைற்' அடித்துப் பார்க்கின்றனர். இவர்களால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.

இரவு 8 மணிக்குப் பின்னர் அகதிமுகாமிலிருந்து ஒருவரும் வெளியே செல்ல முடியாது. அவ்வாறு செல்வதாயின் படையினரிடம் பதிவு செய்து விட்டே சென்று விட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி விட வேண்டும்.

எமது முகாமுக்கு தண்ணீர் வருவதை கொஞ்ச நாட்களாக அதிரடிப் படையினர் தடுத்தனர். தற்போது தண்ணீர் வருகின்ற போதும் அது எமக்கு போதாமலுள்ளது. குயிலின்பன் மற்றும் போராளிகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் எமக்கு தருவதற்கென சிங்கள மக்கள் இரு லொறிகளில் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தனர். அதைக் கூட அதிரடிப் படையினர் திருப்பி அனுப்பி விட்டனர்.

முகாமிலிருந்து மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பாடசாலைக்கு செல்ல முடியாமலுள்ளனர். போக்குவரத்து வசதிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரே மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு இரு தடவைகள் மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தரம் கெட்டவையாகவுள்ளன. இவற்றில் புழுக்கள் காணப்படுகின்றன.

எனவேஇ விசேட அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இம் முகாமில் எம்மால் தொடர்ந்தும் வாழ முடியாது. இம் முகாமின் பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எமக்கு நிரந்தர குடியிருப்புகளை அமைத்துத் தாருங்கள் என முறையிட்டனர்.

மக்களின் பிரச்சினைகள் குறித்து தாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
சுட்டது தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)