Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதியின் புறா!
#1
<span style='color:red'>அமைதியின் புறா!</span>
<img src='http://www.cartage.org.lb/en/themes/Biographies/MainBiographies/E/Erpelding/canvaspope916small.jpg' border='0' alt='user posted image'>



அமைதியின் புறா ஒன்று,
அமரத்துவம் பெற்றுவிட்டது.

அனைத்தும் வல்லவன் உருவாக்கித் தந்த
அரியணை மீதமர்ந்து கோலோச்சிய திருமறை,
விடைபெற்றுக் கொண்டது.

"வெற்றியின் மணிமகுடம் சூடிட வா!" என்று
விண்ணக வேந்தன் விடுத்த அழைப்பினை ஏற்று,
நிகரற்றதோர் கொள்கைச் சிங்கம், இவ்வுலகை விட்டு
நிரந்தர ஓய்வில் சென்றுவிட்டது.

நித்திய இளைப்பாற்றியுடன்
நீடுதுயில் கொண்டிருக்கும் அந்த மாபெரும் ஜீவன்,
வேறு யாருமல்லர்:

எண்ணிய எண்ணியாங்கு எய்திய புண்ணியன் -
திண்ணிய நெஞ்சுடன் திருச்சபை நடாத்திய நாயகன் -
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்!

கண்ணியம் செறிந்த கத்தோலிக்கப் பெருங்குலத்தைக்
கால் நூற்றாண்டுக் காலமாய்க் கட்டிக் காத்த
களங்கமற்ற ஞான மேய்ப்பன் -
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்!

திருச்சுதன் சேசுவின் சிந்தைக்கினிய சேவகன் -
திருமங்கை மரியாளின் தீவிர பக்தன் -
ஜெபமும் தபமுமே தன் ஜீவநாடிகளாகத் தரித்த செம்மல் -
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்!

வேற்றாரும் போற்றிய விழுமிய பண்பாளன் -
மாற்றார்தம் கண்களிலும் நீர்கசிய வைத்த மாமனிதன் -
மாண்புமிகு பாப்பரசர் இரண்டாம் ஜான் பால்!

மதங்களையும் மொழிகளையும் கடந்த மாமேதை -
மண்ணகம் எங்கெணும் அமைதிப் பூங்காவாய் மாற்றிட
மருளாது உழைத்த மாமலை!
மனிதநேயம் பரிசளித்த மாமழை!
மாண்புமிகு பாப்பரசர் இரண்டாம் ஜான் பால்!

வத்திக்கான் திருத்தலத்தின் வரலாற்றில் மட்டுமல்ல -
மனித இனத்தின் வரலாற்றிலேயே இந்த
மகான் பதிவு செய்துள்ள மறக்கொணாச் சாதனைகளை,
உலகம் உன்னிப்போடு எண்ணிப் பார்க்கிறது...

போர்முனைகளை எதிர்த்துப் போர்புரிந்த புயல் அவர்!
புனிதம் ததும்பிடும் புன்னகையோடு
போர்மேகங்களிடையே வலம்வந்த புதையல் அவர்!

வாடிய பயிர்கண்டு வாடிடும் உயிர்கொண்ட
வான்புகழ் தமிழ்ப்பண்பின் வழுவாத சாயல் அவர்!

அமைதியின் வாளும் ஆன்மீகக் கேடயமும் கொண்டு
அயராது உஞற்றிய அறப்படை நாயகன் அவர்!

சுற்றுப் பயணங்களால் இந்த பூமிப் பந்து முழுவதையும்
சுற்றி வளைத்துக் கட்டிப்போட்ட காந்தம் அவர்!

உலகத் தலைவர்களையெல்லாம்
தன் உறைவிடத்திற்கு அழைத்து உபசரித்து,
உரிமையோடு உறவாடி,
உறுதியோடு உரையாடி,
உள்ளம் கவர்ந்துகொண்ட உத்தமன் அவர்!

இத்துணைச் சிறப்புடைய மகா சகாப்தம்,
இம் மண்ணை விட்டு மறைந்த போது...

கலங்கியது மானிடப் பெருங்குலம்!
"கலங்கரை விளக்கம் தன் கண்களை மூடிக்கொண்டதோ" எனக்
கலங்களே கலங்கிடத் தொடங்கின!
"செல்லும் பயணம் திசைமாறாது இருக்குமோ" என
ஆயர் குலங்கள் அல்லும் பகலும் ஆற்றாது அழுதன!

என்ன செய்வது! இயற்கை தன் பணியைச் செய்தது!
எனவே அழாமல் இருப்பது ஒன்றுதான் ஆறுதல் தருவது!

அப்படியொரு அபூர்வ ஆறுதலை நெஞ்சிலிருத்தி,
ஆண்டவனிடம் யாம்புரியும் வேண்டுதல் இதுதான்:

இறைவா!
இவர்போல் இன்னும் இடையர்கள் எமக்கு வேண்டும்!
இவ்வுலகுக்கு இடையறாத அமைதி வேண்டும்!!

தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)
Reply
#2
நன்றி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#3
Quote:இறைவா!
இவர்போல் இன்னும் இடையர்கள் எமக்கு வேண்டும்!
இவ்வுலகுக்கு இடையறாத அமைதி வேண்டும்!!
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
நன்றி.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:இறைவா!
இவர்போல் இன்னும் இடையர்கள் எமக்கு வேண்டும்!
இவ்வுலகுக்கு இடையறாத அமைதி வேண்டும்!!

இவர் இருந்தும் அமைதி வந்ததா..???! கடந்த 25 வருடத்தில் எத்தனை உயிர்களைப் போர் காவு கொண்டிருக்கும்...எத்தனை அநியாயங்கள் கண் முன் நடந்திருக்கும்...மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட வறுமை பிணி என்று எவ்வளவு அழிவுகள் நிகழ்ந்திருக்கும்...அவற்றைத் தடுக்க முயன்றிருக்கலாமே....இயற்கை அழிவைத்தான் தடுக்க முடியாது விட்டாலும்....!

இருந்தாலும் கருக்கலைப்பு ஒருபால் திருமணம் முழு மனிதக் குளோனிங் என்று மனித அநாகரிகங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்கும் மத்திய கிழக்கில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான இடையேயான மத ரீதியான இழுபறியைத் தணிக்க முயற்சி செய்ததற்கும் சில சந்தர்ப்பங்களில் உலகில் வறுமை அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் தந்ததற்கும் பாராட்டலாம்...!

வத்திக்கான் பெண்களை இன்னும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நோக்குகிறது...அது இவராலும் தடுக்க முடியாமல் போய்விட்டிருப்பது வருத்தமளிக்கும் விடயம்...! கடவுளின் முன் மனிதர்கள் உயிர்கள் எல்லோரும் சமம்...அதை இவரும் பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றத் தவறியே விட்டார்....! கடவுளின் தூதுவர் களத்தில் மனிதரோடு உயிர்களோடு நின்றாரே தவிர கட்டிடத்துள் இருந்து அறிக்கை விடவில்லை....! இவர் உலகில் மத ரீதியான நம்பிக்கையை வளர்த்திருக்கலாம்...ஆனால் மனிதத்திற்கு போதிய சேவை அளித்ததாகத் தெரியவில்லை....! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
வத்திக்கானின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்க்கு தான் மார்ட்டின் லூதர் போன்றவர்களால் கிருஷ்தவ மதத்தில் புரட்சி செய்யவேண்டி இருந்தது---------------------------------------------------ஸ்ராலின்
Reply
#7
நன்றி மன்னா
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)