04-07-2005, 11:02 AM
ஆரோகணிக்கும் அமளிதுமளியும் அவரோகணிக்கும் அமைதிமுயற்சியும் - தெய்வீகன்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு இரண்டுவருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர்நீமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து இலங்கையில் அரசியலில் சூறாவளி வீச ஆரம்பித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வசைபாடும் ஐக்கிய தேசியக்கட்சி, நீதியரசர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மேன்முறையீடு செய்யமுடியாத சட்டச் சிக்கலால் திணறுண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு நகர முடியாமல் திண்டாடுகிறது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அணியிலிருந்து ஒருகாலத்தில் ஐ.தே.க.வை வசைபாடிக் கொண்டிருந்த எஸ்.பி.திஸநாயக்க, கொழும்பு நகரமண்டபக்
குண்டுவெடிப்பில் ஜனாதிபதி சந்திரிகா கண்ணில் காயம்பட்ட வேளையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குற்றி 'எனது தலைவிக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டதே" என்று வாய்விட்டு அழுதார்.
அவ்வளவு தூரம் ஜனாதிபதியின் விசுவாசியாக இருந்த எஸ்.பி.திஸநாயக்க ஜி.எல்.பீரிஸ், மஹிந்த
விஜயசேகர ஆகியோருடன் 1999 ஆம் ஆண்டு ஐ.தே.க. வுக்குத் தாவிய நாள்முதல் தனது நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றியிருந்தார். ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிரான பேச்சு கேட்பதானால் எஸ்.பி.திஸநாயக்க பங்குபற்றும் கூட்டத்துக்குத்தான் போகவேண்டும் என்ற ஒருநிலை நிலவியது.
இவரது இதே பாணியை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண கடைப்பிடித்து வந்தபோதும் அவ்வப்போது அவர் ஜனாதிபதியுடன் சமரசமாவது வழக்கம்.
இதனால் எஸ்.பி.திஸநாயக்கவின் மீதுமட்டும் ஜனாதிபதிக்கு தீராத காழ்ப்புணர்ச்சி என்றுமே இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க வென்று அமைச்சரவை பொறுப்பேற்றபோது சமுர்த்தி விவகார அமைச்சை எஸ்.பி.திஸநாயக்கவுக்குக் கொடுக்காமல் அவர் ஒரு 'ஊழல்பேர்வழி" என்று
ஜனாதிபதி குற்றச்சாட்டியமையும் கடைசியில் விசாரணைகளில் வென்று எஸ்.பி. மீண்டும் சமுரத்தி விவகார அமைச்சைப் பெற்றுக் கொண்டமையும் அமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து அமைச்சரவைத் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதியிடம் பதவிப் பிரமாணப் பத்திரத்தை வாங்கும்போது ஜனாதிபதி அவரை நிமிர்ந்தும் பார்க்காத நிகழ்வும் இருவருக்கும் இடையில் நிலவிய தீராத அரசியல் பகையை எடுத்துக்காட்டும் சில உதாரணங்கள்.
அப்படிப்பட்ட வைரியான எஸ்.பி.திஸநாயக்கவைக் காத்திருந்து கழுத்தறுத்து விட்டார்; நீதித்துறைக்குள்ளும் புகுந்து விளையாடிவிட்டார் என்று ஜனாதிபதி மீது சேற்றை அள்ளிவீசியுள்ளனர் ஐ.தே.கவினர். எஸ்.பி.திஸநாயக்க
கைது செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றில் கொதித்தெழுந்த ஐ.தே.க.வினர் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளனர். அங்கு முன்னாள் அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ண பேசுகையில்-
'நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் எஸ்.பி.திஸநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் நீதித்துறையின் நிர்வாகத்திற்கு பயங்கரமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒருவர்
நடந்துகொண்டால் மாத்திரமே அதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கொள்ளலாம் என்பதை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் கடந்த காலங்களில் பல நாடுகளில் இந்த சட்டம் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கடந்த வாரம் யுனெஸ்கோ ஏற்பாட்டில் ஹரியானாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது"- என்று தொடங்கி ஸ்ரீலங்காவின் நீதித்துறையை தாறுமாறாக விமர்சித்திருக்கிறார். அவரது பேச்சின் பெரும்பாலான பகுதியை நாடாளுமனற உரைப்பதிவேடான ஹன்ஸாட்டிலிருந்து நீக்கும்படி சபாநாயகர்
உத்தரவிடுமளவுக்கு ராஜிதவின் உரை மிகக் கடுமையாக நீதித்துறையைச் சாடியிருந்நது. மகேஸ்வரன் உட்பட ஐ.தே.கவின் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றில் ஸ்ரீலங்கா நீதித்துறையை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேப்பிட்டிய படுகொலை
செய்யப்பட்டதிலிருந்தே புயல் வீச ஆரம்பித்த ஸ்ரீலங்கா நீதித்துறையில் ஓட்டைகள் உள்ளதாகவும் அதில் அரசியல் புகுந்து விளையாடுவதாகவும் ஜனாதிபதி தனது அரசியல் வைரிகளைப் பழிவாங்க நீதித்துறையைப் பயன்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டி ஐ.தே.க.வினர் அதன் கட்டமைப்பின் அத்திவாரத்தையே அசைக்க முற்பட்டுள்ளார்கள்.
தாம் மேற்கொள்ளும் அமைதி முயற்சிகளுக்குத் தெற்கில் எழுந்துள்ள இனவாத எதிர்ப்பைச் சமாளிக்க அரசியல் செல்வாக்குச் செலுத்தும் ஸ்ரீலங்காவின் நீதித்துறையைப் பயன்படுத்தி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட
சிறைத் தண்டனை விதித்தது ஐ.தே.கவின் திரைமறைவுத் திட்டம்தான் என்று முன்னர் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகையில், அதை மறுத்த ஐ.தே.க. 'சட்டமும் நீதியும் தமது கடமையைச் செய்கின்றன. நாமொன்றும் அதில் தலையிடவில்லை.தலையிடவும் முடியாது." என்று நியாயம் பேசியது. இன்று தமது தரப்பு அதே நீதித்துறையால் பாதிக்கப்படுகையில் நீதித்துறையை தாறுமாறாக
விமர்சிப்பதுடன் அதன் தீர்ப்புகளில் கறைபடிந்துள்ளது என்றும் விரல் நீட்டுகின்றது.
தென்னிலங்கையில் உள்ள இந்த அரசியல் சித்து விiளாட்டுக்கள் ஒருபுறமிருக்க, ஐ.தே.க. குற்றம் சாட்டுவதுபோல் உண்மையிலேயே நீதித்துறையில் அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருக்கிறதென்றால் தற்போதைய சூழ்நிலையில் அதன் தேவை ஏன் எழுந்தது என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதாவது இன்று அமைதி முயற்சிகளினை ஆரம்பிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையில் ஜனாதிபதி உள்ளார். பேச்சுக்களை ஆரம்பிக்கா விட்டால் மீண்டும் போரை ஆரம்பிக்கப் போவதாக புலிகள் எச்சரிக்கை விடுக்க, பேச்சை ஆரம்பித்தால்
தெற்கில் ஆயுதக்கிளர்ச்சி வெடிக்கும் என்று ஜே.வி.பி மறுபுறம் எச்சரிக்க, பேச்சுக்களை ஆரம்பிக்காவிட்டால் தற்போதைய அமைதிக்கு ஆதாரமான புரிந்துணர்வு ஒப்பந்தம் புஸ்வாணமாகிவிடும் என்று உலக நாடுகளுக்கு
ஸ்ரீலங்காவின் சீத்துவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டி அனுசரணைத் தரப்பும் அமைதி நிலையைக் கண்காணிக்கும் பணியாளர்களும் நெருக்கடியைக் கொடுக்க, அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாக ஆட்சியிலிருந்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மிரண்டு போயுள்ளார் ஜனாதிபதி.
இந்நிலையில் தென்னிலங்கையில் சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் அமைதி முயற்சியின் அடுத்தகட்டம் என்ன என்று எதிர்பார்த்துக் காத்திருக்க எஸ்.பி.திஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் நிலைமை தலைகீழாக
மாறியுள்ளது.
'அமைதி முயற்சிகள் என்று கூறிக்கொண்டு நாம் செய்ததைவிட என்ன புதிதாக சாதித்துவிட்டார்?" என்று கூறிக்கொண்டு ஜனாதிபதியின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டிருந்த ஐ.தே.க. தற்போதைக்கு அமைதி முயற்சி பற்றிச்
சிந்திக்கத் தலைப்படுமா என்பது சந்தேகமே. அது போலவே நாட்டின் சட்டமியற்றும் பிரதான அவையான நாடாளுமன்றம் இன்று எஸ்.பியின் கைதை மையமாகக்கொண்டு போர்க்களமாக மாறியுள்ளது. நாடெங்கும் ஐ.தே.க. ஆதரவாளர்கள் தமது எம்.பி. ஒருவர் சிறைப்படுத்தப்பட்டதைக் கேட்டு கொதித்துப்
போயுள்ளார்கள். மொத்தத்தில், அமைதி முயற்சியின் பாலிருந்த எதிர்பார்ப்பு தெற்கில் திசை திருப்பப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாளன்று ஆற்றிய உரையை அடுத்து நோர்வேயின் விசேட தூதுவர் சொல்ஹெய்மைத் தொடர்புகொண்ட ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க 'பிரபாகரனின் உரையால் மீண்டும் சண்டை வரப்போகிறதோ என்று எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலையைத் தணிக்க உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றும் செய்யமுடியாதா?" என்று விநயமாகக் கேட்டிருந்தார்.
ஆகவே பிரபாவின் உரையால் எழுந்த பதற்றத்தை - பேச்சுக்களை ஆரம்பிக்காமலேயே - தணிப்பதற்கு தீவிரமாக இருந்த ஜனாதிபதி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைதான்; எஸ்.பி.திஸநாயக்க கைது சம்பவமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐ.தே.க.
முன்வைக்கும் நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டை எடுகோளாகக் கொண்டால் இத்தகைய சந்தேகத்தை இலகுவில் புறக்கணிக்க முடியாதுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதிக்கு இன்னொரு அவசர தேவையும் எஸ்.பி.யின் கைதுக்கு பிரதான காரணமாகியுள்ளது. அதாவது புலிகள் எச்சரித்துள்ளது போல் யுத்தம் ஆரம்பமானால் தென்னிலங்கை இளைஞர்களை வடக்கு கிழக்கில் பலிக்கடாக்கள்
ஆக்கும் தனக்கு இனிமேல் மக்கள் செல்வாக்கு கிட்டப்போவதில்லை என்பதும் அதனால் தேர்தல், அதில் வெற்றி ஆகிய விடயங்களும் இனிமேல் எட்டாக் கனிகளே
என்பதும் ஜனாதிபதிக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது. அத்துடன் ஜனாதிபதி பதவிக்காலமும் நிறைவுபெறும் தறுவாய் வந்துவிட்டது. இந்த வேளையில் தனது அரசியல் வைரிகளை அரசியல் லாபம் பெற்றுத்தரக் கூடியவாறு சங்காரம் செய்து பார்த்தால் என்ன? என்ற திட்டத்துடன் களத்தில்
இறங்கியுள்ளார் போலும்.
அவரது பட்டியலில் உள்ள இன்னொருவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க. ஜனாதிபதி சந்திரிகா அரசியல் விஞ்ஞானம் படித்து முடிக்காதவர் என்றும் அமைச்சரவைக்கு வரும்போது கைப்பையில் கமராவுடன் கைக்குண்டும் கொண்டுவந்தார் என்றும் பல குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதிக்கு எதிராக முன்வைத்தார். ஆட்சிக்கு வந்தபின்னர் ஜனாதிபதி அவரை 'அரிசி கொள்முதல்
செய்யும்போது ஊழல் புரிந்தார்" என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய முனைந்தார். ஆனால் அந்த முயற்சி ஜனாதிபதிக்கு வெற்றியைத்தரவில்லை.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் போலவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது அரசியல் வைரிகள் மீது பழிவாங்கும் படலத்தை கொஞ்சக்காலமாகத் தொடர்ந்துவந்தார். கருணாநிதி, வைகோ, நெடுமாறன், இந்து பத்திரிகை என்றெல்லாம் அவர் நடத்திய பழிவாங்கும் நடவடிக்கைகள் இன்று அரசியல் படுதோல்வி மற்றும் மத்திய அரசு சட்டத்தால் கொடுத்த சாட்டையடி என பலகாரணங்களால் ஒடுங்கியுள்ளன.
அவரைப்போலவே ஜனாதிபதி சந்திரிகாவும் மாறியுள்ளார்.
அப்படியானால் தென்னிலங்கையின் இந்த அரசியல் குத்துக்கரணங்கள், சித்து விளையாட்டுக்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு தமிழ் மக்கள் பொறுமை காக்க
வேண்டுமா? இனப் பிரச்சினைத்தீர்வு விடயத்தில் இன்னொரு தடவையும் காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியில் சிங்களதேசம் இறங்கிவிட்டதா?
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமா?
நன்றி:http://sooriyan.com/