Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட்
#1
<b>இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட் </b>

ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட் (பிறப்பு: 14, ஆகஸ்ட் 1777 -இறப்பு: 9, மார்ச் 1851) இயற்பியல், வேதியியல் அறிஞர். மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்ததன் மூலம் மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். முதல் முறையாக செயற்கை முறையில் அலுமினியத்தை உருவாக்கியதன் மூலம் வேதியியலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டட், கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் பயின்றவர். 1801-ல் பயண உதவித் தொகை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு 3 ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்ஸ்டட், ஜெர்மனியில் இருந்தபோது இயற்பியல் அறிஞர் ஜோஹன் ரிட்டரைச் சந்தித்தார். அப்போது ஜோஹன் ரிட்டர், காந்தம் மற்றும் மின்சாரத்துக்கு இடையே தொடர்பு இருக்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இயற்கையின் ஒருங்கிணைந்த தன்மையில் நம்பிக்கை கொண்ட ஆர்ஸ்டட், இந்தக் கருத்தின் மீது ஆர்வம் கொண்டார். 1806-ல் டென்மார்க் திரும்பி, கோபன்ஹேகன் பல்கலைக் கழக பேராசிரியராக மின்னோட்டம் மற்றும் ஒலியியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்கு இயற்பியலுக்கென தனித் துறையை உருவாக்கினார் ஆர்ஸ்டட்.

ஒரு மாலை நேர விரிவுரைக்காக, சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்ஸ்டட் மின்சாரத்துக்கும், காந்தத்துக்கும் இடையிலான உறவைத் தற்செயலாகக் கண்டறிந்தார். 3 மாதங்களுக்குப் பின்னர் இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, மின்னோட்டமானது வயர் வழியாகச் செல்லும்போது காந்தப் புலத்தை உருவாக்குகிறது என்பதை நிரூபித்தார். காந்தத் தூண்டலுக்கான சிஜிஎஸ் முறை அலகுக்கு இவரது நினைவாக "ஆர்ஸ்டட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கோபன்ஹேகனில் உள்ள டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆர்ஸ்டட் முன்முயற்சியில் உருவானதாகும். இது தவிர புதிதாக அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கியதன் மூலம் டேனிஷ் மொழிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட்.

http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&
<b> .. .. !!</b>
Reply
#2
இணைப்புக்கு நன்றி ரஸ்
Reply


Forum Jump:


Users browsing this thread: