Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புத்தாண்டு படங்கள்: முதல் நாள் ரிப்போர்ட்
#1
புத்தாண்டு படங்கள்: முதல் நாள் ரிப்போர்ட்


ஊரெங்கும் இப்போது ஒரே பேச்சு. தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளிவந்த படங்கள் எப்படி இருக்கு? எந்தப் படம் ஓடும்? என்று.

ரஜினி, கமல், விஜய் மூவரும் போட்டிக் களத்தில் உள்ளனர். இதோ முதல் நாள் (ஏப்.14) தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்தவர்களின் விமர்சனம்.


சந்திரமுகி

இடம் : சென்னை சாந்தி தியேட்டர்.
நேரம் : பகல் 12 மணி (சிறப்புக் காட்சி).

சென்னை சாந்தி தியேட்டரில் ரசிகர்கள்
ஜனார்த்தனன்: படம் நல்லா இருக்கு. முண்ணூறு ரூபாய் போட்டு பார்த்தேன். கடைசி சீன் சூப்பரா இருக்கு. அதுதான் எனக்கு ரொம்பவும் புடிச்சு இருந்தது.

ஜெய்சங்கர்: பாட்டு எல்லாமே நல்லா இருக்கு. ரஜினியும் வடிவேலுவும் ஒரு பங்களாவுக்குள் போவாங்க அங்கு பேய் இருக்கும் என பயப்படுவாங்க. அந்த காமெடி காட்சி சூப்பரா இருக்கு.

சரவணன்: படத்தில் ரஜினி மனோதத்துவ டாக்டர். ஜோதிகாவின் உடலில் ஆவி புகுந்துவிடுகிறது. அதைக் குணப்படுத்த வருகிறார் ரஜினி. நயன்தாராவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறாரு. படம் பார்க்கலாம்.

சேகர்: ரஜினிக்கு பன்ச் டயலாக் "சரவணன் இருக்க பயமேன்' என்பதுதான். ஆனால் அதிகமாக பன்ச் டயலாக் கிடையாது. அவரது வழக்கமான ஸ்டைலும் படத்தில் இல்லை.

ஜகதீஷ்வரராவ்: அவரது ஸ்டைலை மாற்றி நடித்திருக்கிறார். அரசியல் கிடையாது. பன்ச் டயலாக் அதிகம் கிடையாது. "போர்' அடிக்காமல் போகிறது. ஜோதிகாதான் படத்தில் கலக்கியிருக்கிறார்.

சீனிவாசன்: படத்தில் வில்லன்கள் யாரும் கிடையாது. பிரபுவின் ஆட்களை அடிக்க ரெüடிகள் வருவார்கள். அப்போது ரஜினி அறிமுகமாவார். ரஜினி வரும் அந்த அறிமுக ஃபைட் சீன் சூப்பர். நயன்தாராவுக்கு அவ்வளவா ரோல் இல்லை. ஜோதிகா நல்லா பண்ணியிருக்காங்க.

பாபு: ஜோதிகாவுக்காக படம் பார்க்கலாம். ரஜினியுடைய ஸ்டைல் ஒன்றும் இதில் இல்லை.


மும்பை எக்ஸ்பிரஸ்

இடம் : சத்யம் தியேட்டர்
நேரம் : பிற்பகல் 2.50 மணி.



சென்னை அபிராமி தியேட்டரில் கமல் படத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
கோதண்டராமன்: கமல் நல்லா பண்ணியிருக்காரு. காமெடி காட்சியெல்லாம் ரசிக்கும்படி இருக்கு.

குமார்: கடைசி காட்சியில் பைக்கில் சென்றுகொண்டே ரயிலில் ஏறுவார். அந்த காட்சி ரொம்பவும் நல்லா இருக்கு. படம் ஓடும்.

கார்த்திக்: குழந்தையை கடத்திட்டு போயிடுறாங்க. பசுபதி, வையாபுரி வில்லன்கள். ஆனால் வழக்கமான வில்லன்கள் மாதிரி கிடையாது.

ரமேஷ்: இடைவேளைக்குப் பிறகு படம் ரொம்ப நல்லா இருக்கு. காமெடி சூப்பரா இருக்கு. பாட்டு குறைவுதான். மனிஷாவுக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் ஓரளவுக்கு நல்லா பண்ணியிருக்காரு. க்ளைமாக்ஸ் காட்சி ரசிக்கும்படி இருக்கு.

ஆனந்த்: வழக்கமான சினிமா மாதிரி இல்லை. கமல் எப்போதும் புதுமையாக செய்வார். இதிலும் நல்லா பண்ணியிருக்காரு. படம் கண்டிப்பாக ஓடும்.

தனன்: ஓகே மூவி.

வெங்கடேஷ்: அடிதடி வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் ஃபேமிலியோடு பார்க்கிற மாதிரி இருக்கு இந்தப் படம்.


சச்சின்

இடம் : உட்லண்ட்ஸ் தியேட்டர்.
நேரம்: பிற்பகல் 2.40 மணி

சென்னை ஆல்பட் தியேட்டரில் விஜய் படத்துக்கு பால் அபிஷேகம்
சென்னை சாந்தி தியேட்டரில் ரசிகர்கள்
சபரீஷ்: பாடல்கள், சண்டைக்காட்சிகளும் நல்லா இருக்கு. கிளைமாக்ஸில் விஜயும், கதாநாயகி ஜெனிலியாவும் விமானநிலையத்தில் சந்திக்கும் காட்சி நல்லா இருக்கு. மொத்தத்தில் படம் சூப்பர்.

சித்ரா: குஷி படம் அளவுக்கு "சச்சின்' இல்லை. என்றாலும், காட்சிகள் வேகமாக நகர்கின்றன. "போர்' அடிக்கவில்லை. கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது.

காயத்ரி: கடந்த மேட்சில் சச்சின் டெண்டுல்கர் "செஞ்சுரி' அடித்தார். இந்த சச்சின் நிச்சயமாய் "டபுள் செஞ்சுரி' (200 நாள்கள்) அடிப்பார். படம் நச்சுன்னு இருக்குது.

மோகன்: படம் நன்றாக உள்ளது. காமடி ஓ.கே. "தலைவா, தலைவா', "சச்சின்' உள்பட மூன்று பாடல்கள் நன்றாக உள்ளன. கிளைமாக்ஸ் காட்சி நன்றாக உள்ளது.

சந்தோஷ்: படம் எதிர்பார்த்தபடி இல்லை. சுமார்தான். பாட்டுக்காக படம் பார்க்கலாம்.

துர்கா: படம் சுமார். விஜய்யின் காஸ்டியூம் மட்டும் நன்றாக உள்ளது.

பாபு: பாட்டு எல்லாம் நல்லா இருக்கு. ஒருமுறை பார்க்கலாம்.

dinamani.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)