Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மூலிகை சிகரெட்டுகள்
#1
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மூலிகை சிகரெட்டுகள்


லக்னௌ, ஏப் 16: உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத மூலிகை சிகரெட்டுகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன.

மூலிகை சிகரெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் லக்னௌவில் உள்ள தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சிகரெட் பிரியர்கள் புகைப் பிடிப்பதை மூன்று மாதத்தில் படிப்படியாக குறைப்பதற்காக ""ஆன்டி-சிக்'' எனப்படும் சுவைத்து சாப்பிடும் மாத்திரைகளை ஏற்கெனவே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்நிறுவனம்.

மூலிகை சிகரெட் தயாரிப்பு குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது:

மூலிகை சிகரெட்டால், ஏற்கெனவே அதிகம் புகைப் பிடிப்பவர்கள் சிகரெட்டிலிருந்து விடுபடுவர். இந்த சிகரெட்டை புகைப்பவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும்.

மன அழுத்தம், சோர்வு மற்றும், உடல் எடை ஆகியவற்றை இது குறைக்கும். சிந்தனையை தூண்டும்.

புகையிலை கலப்பில்லை
இந்த வகை சிகரெட்டில் புகையிலைப் பொருட்களோ, நிகோடினோ இல்லை.

மூலிகை சிகரெட் தயாரிப்புக்காக காட்பிரை பிலிப்ஸ் சிகரெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 65 லட்சத்திற்கான இந்த ஒப்பந்தத்தில் ரூ. 16 லட்சம் முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சி குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இந்த சிகரெட் என்னென்ன பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதை தெரிவிக்க இயலாது. அவ்வாறு இதன் தகவல்களை வெளிப்படுத்தினால் உலகளவில் போட்டி ஏற்படும்.

மூலிகை சிகரெட் தயாரிப்பு திட்ட அறிக்கைகள் ஏற்கெனவே வெளியாகி விட்டதாக கூறும் தகவல்களை காட்பிரை பிலிப்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஆரம்பத்திலேயே இதுபோன்ற வதந்திகள் பரவுவதால் தொழில் ரீதியான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் காப்புரிமை கிடைத்து விடும்.

தினமணி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)