Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போர் நிறுத்த நெருக்கடிக்குள் அரசின் மீது புலிகள் விசனம்
#1
போர் நிறுத்த நெருக்கடிக்குள் அரசின் மீது புலிகள் விசனம்
ராய்ட்டருக்கு தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு.
போர் நிறுத்த உடன்படிக்கை கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்இ தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டுமாஇ இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம்இ உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்திலும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்னமும் இழுபறி நிலையிலேயே இருக்கிறார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

பொதுக் கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டாலும் அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகத்திற்கிடமானதே என்றும் தெரிவித்திருக்கும் அவர்இ இன்றைய நெருக்கடி நிலை குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று வருடங்களாக நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டு வருவதை தற்போது காண முடிகிறது.

இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த விடயத்தில் தவறிழைத்திருக்கும் அரசாங்கம். பிரபல்யமான தமிழர்களைப் படுகொலை செய்வதிலேயே கவனம் செலுத்திவருகிறது. இதனால் தற்போதைய இயல்பு நிலைக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

அதேநேரம்இ சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களைப் புனரமைப்புச் செய்வதற்காக உறுதியளிக்கப்பட்ட நிதியைப் பகிர்ந்து கொள்வதிலும் இழுபறி நிலையில் அரசு உள்ளது.

சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் தேவைப்படுகிறது. ஆனால்இ சுனாமி அனர்த்­தம் ஏற்பட்டு நான்கு மாதங்கள் கழிந்தும் அரசாங்கம் இது குறித்து அலட்சியமாகவே இருக்கிறது.

இந்நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இயல்பு நிலையை ஏற்படுத்தாது அதைப்புறந்தள்ளிவிட்டு தமிழ் புத்திஜீவிகளையும்இ ஊடகவியலாளர்களையும் படுகொலை செய்வதிலேயே கவனம் செலுத்துவதானதுஇ போர் நிறுத்த உடன்படிக்கையும் சமாதான நடவடிக்கைகளும் கடும் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது

சமாதான அடிப்படையிலான தீர்வுக்குச் செல்வதையே நாம் எப்போதும் விரும்புகிறோம். அதற்குத் தயாராகவும் உள்ளோம்.

எனினும் தற்போதைய நிலையைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டுமாஇ இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.
சுட்டது வீரகேசரி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#2
இந்த போர் நிறுத்தம் இன்னும் கொஞ்ச காலம்தான் பாருங்கோ......!
<b> </b>
Reply
#3
<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->இந்த போர் நிறுத்தம் இன்னும் கொஞ்ச காலம்தான் பாருங்கோ......!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல், இராணுவ எதிர்வுகூறல்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
Reply
#4
இதன் அர்த்தம் என்ன.....?

http://www.eelampage.com/index.shtml?id=20...81126040083&in=
<b> </b>
Reply
#5
மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)