04-27-2006, 05:01 AM
சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்ததற்கு பதிலாக மகிந்தர் தமது போர் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிட்ட முறையில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பன வெளிப்படுத்துகின்றன.
சிறிலங்கா படைத்தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக அதற்கான பொறுப்பை விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் தெரிவிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடியாதவை. லக்ஸ்மன் கதிர்காமர் அதியுயர் பாதுகாப்புக்களுடன் இருந்தவர். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கான பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தியிருந்தனர். ஆனால் இதுவரை கதிர்காமரை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாது சிங்களப் புலனாய்வு திணறி நிற்கின்றது.
கொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலைகளை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதே போன்றே சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்துக்குள் சென்று உயர் பாதுகாப்பில் உலாவும் இராணுவத் தளபதியின் வாகனத்தை நெருங்கி குண்டை வெடிக்கச் செய்வது என்பது இலகுவான விடயமில்லை.
கொழும்பு வீதிகளில் தமிழர்களின் வாசம் தெரிந்தவுடன் சிறைக்கூட்டுக்குள் தள்ளும் சிறிலங்கா படைத்தரப்பு எப்படி தங்களின் உயிர்நாடியான இடத்திற்கு குண்டுதாரியை வருவதற்கு அனுமதிக்க முடியும்? எனவே தங்களது பாதுகாப்பு நடைமுறைகளில் பலவீனம் இருப்பதையே குண்டுத்தாக்குதல் கோடு காட்டுகின்றது.
வடக்குää கிழக்கில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி ஏற்ற பிற்பாடு படுகொலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் போர்நிறுத்த சூழலை இல்லாதொழித்து யுத்தசூழலை உருவாக்குவதாக தமிழ்மக்கள் அவர்மீது குற்றமும் கண்டனமும் தெரிவித்துவந்த நிலையில் சரத் பொன்சேகாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதென்றால் அதன் பழியை உடனடியாக விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமர்த்துவது சரியான முடிவில்லை.
அதேவேளை கொழும்பில் குண்டு வெடித்த கையோடு மகிந்தர் போர் முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். திட்டமிட்டபடி சிறிலங்கா கிபீர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மூதூர் கிழக்குப் பகுதி நோக்கி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தின. அத்துடன் கடற்படை கலங்களிலிருந்து பீரங்கித் தாக்குதலும் இராணுவ முகாம்களிலிருந்தும் எறிகணைத் தாக்குதலும் நடத்தினர். இதனால் பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன. பலபொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் நிலை நோக்கியும் படையினர் செவ்வாய் இரவு எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் இரண்டு போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். உண்மையில் போர்நிறுத்த மீறல் மட்டுமின்றி சிறிலங்காவின் ஜனாதிபதி போர்நிறுத்தத்திலிருந்து விலகி போரை திணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.
அது மாத்திரமின்றி தமிழர் தாயகப் பகுதிக்கான போக்குவரத்துக்களையும் சிறிலங்கா இராணுவம் முடக்கிவைத்துள்ளது.
யாழ் ஏ-9 வீதி போக்குவரத்தை ஓமத்தையிலும் முகாமலையிலும் படையினர் முடக்கி வைத்துள்ளனர். இது போர் நிறுத்த உடன்படிக்கையின் மிகப் பெரிய மீறல் என்பது மட்டுமன்றி முழுதாக ஒப்பந்தம் செயலிழந்து விட்டதையே இது தெளிவாகக் காட்டுகின்றது. அது மாத்திரமின்றி மன்னார் உயிலங்குளம் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதிக்கான வாகனப் போக்குவரத்துக்களையும் படைத் தரப்பு முடக்கியுள்ளது.
இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வைத்திய வசதிகளை பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவசர சிகிச்சைää கற்பிணிப் பெண்கள் உட்பட பலர் சிகிச்சை பெற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து மகிந்தர் சமாதான வழிமுறைகளுக்கான எந்த அடிப்படை நடைமுறைகளை சீர்குலைக்கும் மகிந்தர் சர்வதேச சமூகத்துக்கு சமாதான வேடதாரியாகக் காட்டிக் கொண்டு போரை திணித்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் (ஆசிரியர் தலையங்கம் - 27.04.06)