Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகளின் தற்போதைய அமைதி சரியா????????????
#41
தமிழீழத்தை பொறுத்தவரையில் சிறிலங்கா இரணுவ இயத்தித்திரதை எழுதில் வேண்று விடாலம் ஆனால் மேற்கு உலகத்தை அவர்களின் பணியிலாயே வெல்ல வேண்டியா கட்டயாம் தமிழீழத்துக்கு உண்டு இதையே தேசியத்தலைவர் அவர்கள் அரசியல் ஆயுதமாக ஏந்தியுள்ளர்
இதனால் அதிகம் இரத்தம் சிந்தமால் எமது இலக்கடையாலாம் என நம்புகிறேன்!
Reply
#42
அது ஒரு செயற்கையான அமைதி-!

தவிர்க்க முடியாத அமைதி!
எல்லா கோவமும் எங்களிட்ட இருந்தும் ஏதும் செய்ய முடியாம இருக்கே -
என்று - மனசெல்லாம் வெறுப்பு-!
அது சரி - இந்த தலைப்பை ஆரம்பிச்ச கவிதா யார்? :roll: 8)
-!
!
Reply
#43
புலிகளின் அமைதி ஆபத்தானது என்று பலருக்கு தெரியவில்லை( 41 நாட்கள் அமைதியாக இருந்து 3 நாட்கள் மட்டும் பதில் சொன்ன மறவர்கள்)
[b]
Reply
#44
நீங்கள் சொல்வது சரி ஆனால் இலங்கை அரசாங்கம் ஒரு பக்கம் கொலை செய்து கொண்டு மறு பக்கம் பேச்சு என்று காலத்தையும் வீன் செய்யும் செயல்
Reply
#45
வணக்கம் வர்ணன்

நான் தான் கவிதா என்ன இந்த தலைப்புக்கு என்ன?
இது தான் தற்போது தேவையான தலைப்பு
Reply
#46
Reply
#47
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மூது}ரின் ஆதியம்மன்கேணி என்னும் இடத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவரண்மீது நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத்தினரும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து நாடாத்திய தாக்குதல் விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டது. இதில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டுள்ளனர். இச்சம்பவம் விடுதலைப்புலிகளை வலிந்து போருக்கும் இழுக்கும் சம்பவம் எனவும் இது போர் நிறுத்த மீறல் எனவும் எழிலன் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Reply
#48
துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை புலிகளே களைந்தால் நிலைமை மோசமாகிவிடும்: ஹக்ரூப் ஹொக்லெண்ட்
[சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2006, 06:16 ஈழம்] [ச.விமலராஜா]
துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் களைய மறுத்து புலிகளே களைந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த நாட்டின் அனைத்து நீர்ப் பரப்புகளும் சிறிலங்காவின் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளவை. கடற்புலிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. இதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்றொரு கடற்படை தொடர்பான சர்வதேச அளவில் நடைமுறைகள் இல்லை. இப்போதுதான் நாம் இது தொடர்பிலான பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறோம். இது தொடர்பில் மேலதிகமாக நான் பேசவிரும்பவில்லை. அது ஆபத்தானதாக அமையும்.

கடற்பிரதேசத்தில் சிறிலங்கா கடற்படையினர் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையிலான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது.

சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்துக்கு தயாராக உள்ளனர். இது இயற்கையானது. ஆனால் அவர்களைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவர்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். டிசம்பர் மற்றும் சனவரி மாத வன்முறைகளின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறியும் என்று நினைத்தேன். ஆனால் அது காப்பாற்றப்பட்டுவிட்டதன் மூலம் இருதரப்பினரும் அமைதி வழித் தீர்வை விரும்புவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கே இராணுவ வழித் தீர்வு ஏற்படாது. ஏப்ரல் பேச்சுக்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

யுத்த நிறுத்தம் என்பது நிரந்தரத் தீர்வு அல்ல. துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கம் களையாவிட்டால் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

இக்குழுவினருக்கு இராணுவம் உதவி செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அப்படிச் செய்தால் அது மிகப் பெரிய தவறு. விடுதலைப் புலிகள் தாங்களே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக அறிவித்துவிட்டால் அது மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என்று அச்சப்படுகிறேன்.

இருதரப்பு உயர்நிலை சந்திப்பு மிக அவசியமானது. இதை தள்ளிப்போடக் கூடாது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இனியும் தாமதித்தால் நிலைமை மேலும் மோசமடையும். இருதரப்பு உயர்நிலை அரசியல் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். பிரார்த்திக்கிறேன் என்றார் ஹக்ரூப் ஹொக்லெண்ட்.
Reply
#49
வாகரை உள்ளிட்ட 3 இடங்களில் புலிகள் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல்: ஒரு போராளி படுகாயம்
ஜசனிக்கிழமைஇ 1 ஏப்ரல் 2006இ 16:20 ஈழம்ஸ ஜமட்டக்களப்பு நிருபர்ஸ
மட்டக்களப்பு வாகரைப் பிரசேம்இ சம்பூர் நோர்வேத் தீவு உள்ளிட்ட மூன்று இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.


வாகரையில் புலிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் போராளி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

வாகரை பனிச்சங்கேணிக்கும் மருதங்கேணிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காப் படையினரும் துணை இராணுவத்தினரும் அப்பகுதிக்கு தாக்குதல் நடத்தும் நோக்கில் வந்து தங்கியிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற போராளிகள் மீது படையினரும் துணை இராணுவக் குழுவினரும் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். இத்தாக்குதலில் போராளி ஒருவர் காயம் அடைந்தார்.

இதனிடையே வாகரை தோணிதாழ்ந்த கற்பகுதியிலும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கால்நடைகள் சிலவும் கொல்லப்பட்டுவிட்டன.

அப்பகுதிக்கு வந்த சிறிலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆர்.பி.ஜி தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றனர்.

சிறிலங்காப் படையினரின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தகைய அத்துமீறிய தாக்குதல்ச் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியன என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் முறையிட்டுள்ளார்.

சம்பூர் நோர்வேத் தீவுப் பகுதியிலும் கடற் பகுதியில் மீனவர்களை நோக்கி சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்தும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் எழிலன் முறைப்பாடு செய்துள்ளார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)