Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவம் அடாவடிச் சோதனை
#1
மட்டக்களப்பு அரசியல்துறை அலுவலகத்தில் இராணுவம் அடாவடிச் சோதனை

[ஞாயிற்றுக்கிழமை, 5 யூன் 2005, 07:25 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகர பிரதேச அரசியல்துறை அலுவலகம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரினால் சோதனையிடப்பட்டது.


மட்டக்களப்பு அரசடிச் சந்தியிலுள்ள இந்த அலுவலகத்தில் நள்ளிரவு 12.00 மணிமுதல் 12.30 வரை துணைப்படையினர் சகிதம் சென்ற இராணுவத்தினர் தேடுதல் நடத்த முற்பட்ட போதிலும் அங்கிருந்த விடுதலைப் புலிப் போராளிகள் 5 பேரும் அதற்கு இடமளிக்கவில்லை.

இராணுவத்தினர் தனியாக வந்து சோதனையிட அனுமதிக்க முடியாது. அப்படியானால் கண்காணப்புக் குழு முன்னிலையில் தான் சோதனையிட முடியும் என்று விடுதலைப் புலிகள் சுட்டிக் காட்டினர்.

வெளிநாட்டவர்களுக்கு இங்கு அலுவல் இல்லை. இது எங்கள் நாடு. நாங்கள் தான் சோதனையிட முடியும் என சோதனை நடவடிக்கைக்கு பொறுப்பாக வந்த இராணுவ அதிகாரி, கண்காணிப்புக் குழுவினரை அவமதிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து விடுதலைப் புலிகளுக்கும் அங்கு வந்த இராணுவத்தினருக்குமிடையில் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.

இது பற்றி விடுதலைப் புலிகளினால் கண்காணிப்புக் குழுவிற்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கண்கானிப்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்டப்டனர்.

பொலிசார் கசிதம் கண்கானிப்புக் குழுவினர் அங்கு வந்ததையடுத்து இராணுவம் வெளியே நிற்க பொலிசாரினால் சோதனை மேற் கொள்ளப்பட்டது.

தமது அலுவலகம் மீது தொடரும் இத்தகைய சோதனை நடவடிக்கை குறித்து விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மாவட்ட துணை அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகன் இது பற்றி கூறுகையில், தமது போராளிகள் அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சதி முயற்சி இது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கல்லாறு, வீரமுனை மற்றும் வாழைச்சேனை அலுவலகங்கள் மீதும் இப்படியான சோதனைகள் நடைபெற்ற பின்பே தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

போர் நிறுத்த கண்கானிப்புக் குழுவினரை அவமதிக்கும் வகையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டவார்ததைப் பிரயோகம் குறித்தும் தயாமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
puthinam


<b>SLA troopers attempt to enter LTTE office in Batticaloa</b>

[TamilNet, June 04, 2005 18:32 GMT]

Around hundred Sri Lankan Army (SLA) soldiers together with paramilitary cadres from Razeek Group entered the premises of the LTTE administrative office at Thamaraikerni in Batticaloa town Saturday night around 11.30 PM. However, LTTE officials did not allow the soldiers to enter the office building till the arrival of truce monitors, Deputy Head of Batticaloa-Amparai Political Wing of the LTTE, Mr. Daya Mohan, told TamilNet. The sudden siege by the SLA soldiers with the presence of paramilitary cadres, "in contradiction to the terms of the Cease Fire Agreement (CFA) was aimed at provoking the Tigers", he charged.
Truce monitors rushed to the scene.

Four policemen were later allowed to conduct search inside the office in the presence of SLMM officials.

The police did not find any weapons at the LTTE administrative office as charged by the SLA soldiers, Police sources said.
Reply
#2
செய்தி: மட். அரசியல்துறை பணிமனை மீதான தேடுதல் போராளிகளை இம்சைப்படுத்தும் செயலாகும். நிருவாகப் பொறுப்பாளர் தங்கையா தெரிவிப்பு

(நமது நிருபர்)
மட்டக்களப்பு தாமரைக் கேணி அரசியல்துறைப் பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையானது போராளிகளை இம்சைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே கருதுகிறோம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ நிருவா கத்துறைப் பொறுப்பாளர் தங்கையா தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவு சிறிலங்காப் படையினர் மற்றும் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- சனிக் கிழமை இரவு பதினொரு மணியளவில் எமது அலுவலக கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது சுமார் முப்பது ஆயுதம் தரித்த படையினர் நின்றனர். வீதியில் கவச வாகனங்களில் நூற்றுக்குமேற்பட்ட படையினர் காணப்பட்டனர்.

உடனடியாக சமாதானச் செயலகம், அரசியல்துறைச் செயலகத்துக்கு தெரிவித்தோம்.

அப்போது படையினர் அலுவலகத்தை சோதனையிட வேண்டும் எனத் தெரிவித்த போது போராளிகள் மறுத்துவிட்டனர். பொலிசாரே சோதனையிட வேண்டும். அதேநேரம் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் முன்னிலையில் தான் இவை நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தோம்.

இதன் பின்னர் கண்காணிப்புக்குழு பிரதிநிதி அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டதுடன் நான்கு பொலிசார் ஆயுதங்களின்றி சோதனைசெய்ததாகத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது அதிகளவிலான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் காணப்பட்டதுடன் ராசிக்குழு உறுப்பினர்களும் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தின் பின்னணியை நோக்குமிடத்து போராளிகளை இனங்காண்பது அலுவலகத்தின் அமைப்பை இனம் காண்பது போன்ற நோக்கமாகும் எனவும் கூறினார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)